Tamil banner


Showing 101 - 150 of 220

  1. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 868.49KB, 60 p.

    நாளுக்கு நாள் சுற்றுப்புறச் சூழல் மாசுகளால் உலகம் கேடடைந்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த விழிப்புணர்வூட்டும் தகவல்களை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் தருவது இன்றைய தலையாய கடமை ஆகிறது. 50 கட்டுரைகளுடன் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை அடர்த்தியாகத் தருகிறது இந்த நூல். ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதத் தகவல்கள் நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை சென்னை வானொலி நிலையம் மூலமாக அவ்வப்பொழுது காலை நேரத்தில் நேயர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத் தகுந்தது. . சில அத்தியாயங்கள்: 01) நீர் ஆதாரம் காப்போம்! 02) மரங்கள் அளிக்கும் நன்மைகள் 03) சுற்றுப்புறம் மாசுபடும் வகைகள் 04) புவி வெப்பமயமாதல் அபாயத்தால் ஏற்படும் விளைவுகள் 05) மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும் 06) காடு வளர்ப்போம், கடனை அடைப்போம்! 07) வீடுகளில் சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு 08) டாக்ஸிக் மாசுகள் 09) நச்சு வாயுவே நாசத்திற்குக் காரணம்! 10) பூங்காக்களின் சேவை

  2. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 552.95KB, 46 p.

    சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டின் அவசியத்தையும், அது குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்களுக்கும் பெரிதும் பயன் தரக்கூடியது இந்நூல். சென்னை வானொலி நிலையம் மூலமாக காலை நேரத்தில் நேயர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

  3. Author: ச.நாகராஜன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 233KB, 45 p.

    புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்நேரத்தில் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்!’ எனும் தலைப்பிலான தொகுதியின் மூன்றாம் பாகமாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. முந்தைய தொகுதிகளையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் சுற்றுச்சூழல், சமூக ஆர்வலர்களுக்கான சிந்தனைத் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

  4. Author: ஜயந்தி ஷங்கர்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 865KB, 48 p.

    காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை இடைவிடாமல், எதற்காகவோ யாருக்காகவோ வாழ்ந்து உழைப்பதுதான் நம் வாழ்க்கை அல்ல என்று அறிவுறுத்துவதோடு, எது வாழ்க்கை என்பதையும் தெளிவாகச் சுட்டி, நடைமுறையில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வும் தருகிறது ‘சூரியனுக்கு சுப்ரபாதம்'. வெறும் அறிவுரைகளாக இல்லாமல் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் தர்க்க ரீதியில் அமைத்திருப்பது படிப்பவர்களுக்குத் தெளிவினைத் தருகிறது. அழுத்தமான சொல்லாக்கங்கள், ஆழமான கருத்துகள், அருமையான விளக்கங்கள், நடைமுறைக்கு உகந்த எடுத்துக்காட்டுகள் ஆகியன இந்நூலுக்கு மேலும் வலுவூட்டுகின்றன. ஒருவருடைய கொள்கைக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இருந்தால் மனச்சோர்வோ, உடல் சோர்வோ இன்றி மகிழ்ச்சியாக வாழ வகையுண்டு என்பதை ஐயமற இயம்புகிறது இந்நூல்"

  5. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 384.70KB, 45 p.

    ராமர் கட்டிய சேது உண்மையா என்பதை ஆராயும் நூல்! புராண, இதிஹாஸங்களின் கூற்றையும் இன்றைய நாஸா தனது சாடிலைட் கேமராவின் துணையுடன் சேது பாலத்தைப் படம் எடுத்ததையும் விளக்கும் நூல். அயோத்தியாவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளையும் ராமரின் அடிச்சுவட்டில் பயணப்பட்டு ராமாயண சம்பந்தமான நிகழ்வுகளையும் பதிவு செய்வதோடு சேது காலம் காலமாக இந்திய மக்களால் போற்றி வணங்கப்பட்டதை ஆதாரத்துடன் எடுத்துக் கூறும் நூல்.

  6. Author: ராஜ், ஜார்ஜ் பீட்டர்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 1.54MB, 59 p.

    பணம் சிறிது சேர்த்தவுடன் எல்லோர் மனதிலும் தோன்றுவது நிலம் அல்லது வீடு வாங்கும் எண்ணம்தான். இவை சிறந்த முதலீடாகவும் அமைகின்றன. இது போன்ற சொத்துகளை வாங்குவது, பாதுகாப்பது எப்படி என்பது பற்றிய விவரங்கள் பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை. எந்தக் காரணத்திற்காக சொத்து வாங்குகிறார்களோ அது நிறைவேறும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய்வதும் இல்லை. அக்காரணம் நிறைவேறாத சமயத்தில் பணத்தை இழப்பதுடன் நிம்மதியும் போய் விடுகிறது. சொத்து வாங்குதல், அதைப் பாதுகாத்துப் பராமரித்தல், விற்றல் எனப் பல படிநிலைகளில் உள்ள சட்ட நுணுக்கங்களை, நடைமுறை விஷயங்களை ஆழமாகக் காட்டுகிறது இந்நூல். சொத்து வாங்க எண்ணுவோரின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய இந்நூலின் ஆசிரியர் இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  7. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 526KB, 119 p.

    பிரபாதேவி இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் பிரபாதேவி உடல்நிலை சரியில்லாதவர். பலவகையான சிகிச்சைகளுக்கு பிரபாவின் கணவர் பாண்டிராஜ் ஏற்பாடு செய்தபோதும் அவளுடைய நிலையில் மாற்றமேதுமில்லை. பிரபாவைப் பார்த்துக்கொள்ளவரும் நர்ஸ் சந்திரிகாவிற்கு பயம் கலந்த பல அனுபவங்கள் ஏற்படுகின்றன. அனுபவங்கள் சொல்லும் பாடங்களை ‘சொர்க்கம் என் கையில்’ குறுநாவல் விளக்குகிறது. டிசம்பர் மாத இரவுகளில் தன்னுடைய உறவுகளை எல்லாம் இழந்து தான் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய மேகலாவின் வாழ்க்கை இப்படியாகக் காரணம் என்ன? இதற்கான விடையை மயிர்க்கூச்செறியும் வகையில் எடுத்துரைக்கிறது ‘டிசம்பர் இரவுகள்’ குறுநாவல்.

  8. Author: ஜெயந்தி சங்கர்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1.18 MB, 181 p.

    சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘காகிதம்’, ‘நூடில்ஸ்’, ‘பட்டுச்சாலை’, ‘பட்டம்’, ‘கொண்டாடப்படும் மரணங்கள்’ என்ற இறுதியாத்திரை குறித்த மற்றும் ‘ச்சிங் மிங்’ என்ற கல்லறைத் தோட்டத்தைச் சுத்தப்படுத்தும் விழா குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 15 கட்டுரைகள் உள்ளன. ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் வடிக்கப்பட்ட, பல வியப்பளிக்கும் சுவாரஸிய தகவல்கள் அடங்கிய விரிவான இக்கட்டுரைகள் பிரம்மாண்ட சீனக்கலாசாரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைகின்றன.

  9. Author: எஸ். ஷங்கர நாராயாணன்

    Publisher: | Audience: Adult | PDF icon 639 KB, 43p.

    இது ஒரு கவிதைகளின் தொகுப்பு.

  10. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: | Audience: General | PDF icon 395.78KB, 55 p.

    பிரிட்டிஷ் இளவரசியாகி உலகையே கவர்ந்த டயானாவின் வாழ்க்கை வரலாற்றைச் சுவைபடக் கூறும் நூல்! டயானாவின் பிறப்பு, வளர்ப்பு, அவர் பிரிட்டிஷ் இளவரசியானது, உலக மக்களின் அபிமான தேவதையாக அவர் மாறியது என அனைத்து விவரங்களையும் இந்த நூல் விளக்குகிறது. இறுதியில் பாப்பராசியின் பிடியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட பயணமே அவரது வாழ்க்கையின் இறுதிப் பயணத்திற்குக் காரணமான நிகழ்ச்சியையும் உருக்கமாக இந்நூல் விளக்குகிறது! இருபதுக்கும் மேற்பட்ட அத்தியாங்களைக் கொண்ட நூல் இது!

  11. Author: விஜயராகவன், இரா.

    Publisher: | Audience: Adult | PDF icon 387 KB, 27p.

    தமிழ் இலக்கண முறைகளைப் பற்றி அலசுகிறது இந்நூல். மேலும் சந்தி இலக்கணம் எனப்படும் சேர்க்கை விதிகள் பற்றிய தகவல்களைத் தருகிறது இந்த புத்தகம்.இந்நூலில் பல பொதுவான தவறுகளை எப்படி தவிர்ப்பது என்பதையும் எப்படி நல்ல தமிழ் எழுதுவது என்பதையும் ஆசிரியர் ஆராய்கிறார்.

  12. Author: விமலா ரமணி

    Publisher: | Audience: Adult | PDF icon 388 KB, 72p.

    செளமித்திரியும் மோத்தியும் காதலர்கள். மோத்தியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் பார்த்திபனுடன் சௌமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் விபத்தொன்றினால் கோமா நிலையிலிருக்கும் சௌமியினால் திருமணம் தள்ளிப் போகிறது. சந்தர்ப்ப வசத்தால் அதே மருத்துவமனையில் மோத்தியின் தந்தை தன் இறுதிப் பயணத்தைத் துவங்க, பார்த்திபனுக்கு உண்மை தெரிய வருகிறது. செளமித்திரியும் காதலர்கள் என்பதை உணர்ந்த பார்த்திபன் மோத்தியைத் தேடி அவனிருப்பிடம் போகிறான். ஆனால்... மோத்தி என்னவானான்? பார்த்திபனின் முடிவு என்ன? டாக்டர் ஸ்வேதாவின் பங்கென்ன? எல்லாவற்றிற்கும் விடை நாவலின் இறுதியில்.

  13. Author: உஷாதீபன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 547.16KB, 102 p.

    சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.

  14. Author: P. நடராஜன்

    Publisher: | Audience: Adult | PDF icon 746 KB, 58p.

    இந்நூல் ஒரு தாத்தா தன் இரண்டு வயது பேத்தியிடம் ரசிக்கும் மழலை மொழியையும் வேறு அனுபவங்களையும் விவரிக்கிறது. தாத்தாவுக்கும் பேத்திக்கும், பாட்டிக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பைக் கட்டிரை சித்தரிக்கிறது.

  15. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 512.58KB, 91 p.

    விருகம்பாக்கம் ஒயிட் லோட்டஸ் மருத்துவமனையில் ஃபோபியாவின் காரணமாக சிகிச்சை பெறும் பூஜ்யாவை சந்திக்க வரும் விவேக், விஷ்ணுவிற்கு பூஜ்யா இறந்தது தெரிய வருகிறது. கிறிது நேரத்திலேயே அவள் இறக்கவில்லை என்பதை விவேக் கண்டறிய, பூஜ்யாவின் இந்த நிலைக்கு காரணம் யார் என்பதை விவேக், விஷ்ணு குழுவினர் கண்டறிவது 'தாஜ்மஹால் நிழல்' குறுநாவலில் அழகிய நடையில் சொல்லப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சமூக நீதி ஜனரஞ்சகமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்லப்பட்டுள்ளது.

  16. Author: ஷங்கர நாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 950.68KB, 76 p.

    வாழ முடியாத ஒ ரு பெண்ணும், வாழப் பிடிக்காத ஒரு ஆணும் ஒரு எதிர்பாராக் கணத்தில் வந்திக்கிற போது, அவர்களில் எழுகிற நம்பிக்கையின் ஒளியை அழகுபட நாவலில் வரைந்திருக்கிறார் ஷங்கரநாராயணன். சேர்ந்தே எதிர்கொள்கையில் துக்கம் பாதியாகிறது. மகிழ்ச்சி ரெட்டிப்பாகிறது. வாழ்வில் நம்பிக்கை ஒளிரச் செய்யும் நாவல்

  17. Author: ஜெயந்தி சங்கர்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 697.31KB, 84 p.

    நூலாசிரியர் எழுதிய முதல் சிறுகதையான ‘திருப்புமுனை’ தொடக்க காலச் சிறுகதைகளடங்கிய தொகுப்பு. வாழ வந்த நாட்டின் பல்வேறு வண்ணங்களையும் முகங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுதிடவும் ஆரம்பித்திருக்கிறார். ஆகவே, சில சிறுகதைகள் வடிவக் குறைபாடுகள் கொண்டிருப்பினும், ஒவ்வொன்றிலும் சொல்லிடும் செய்தி நிச்சயம் வாசகரை யோசிக்க வைக்கும் - சில கணங்கள் முதல் சில நாட்கள் வரை! பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள் போன்ற பல்வேறு தளங்களில் பயணிக்கும் இச்சிறுகதைகள் எளிய யதார்த்த நடையில் நகர்கின்றன.

  18. Author: உஷாதீபன்

    Publisher: | Audience: Adult | PDF icon 722 KB, 115p.

    பல்வேறு தளங்களில் வாழும் கதை மாந்தர்கள் மூலம் வாழ்க்கையை நம்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்புதான் உஷாதீபனின் இந்த திரைவிலகல்.

  19. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | PDF icon 814.44KB, 80 p.

    நிலாச்சாரல் மின்னிதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளியான தமிழ்த் திரைப்படங்களின் மெல்லிசை பற்றிய தொடர் இது. ஆரம்ப காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்ற தமிழ்ப் பாடல்கள், பின்னர் தமிழ்ப் படங்களின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளில் வெளியான அற்புதப் பாடல்கள், கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், வாலி உள்ளிட்ட ஏராளமான பாடலாசிரியர்கள் பற்றிய விவரங்கள், இசை அமைப்பாளர்கள் பற்றிய சுவையான விவரங்கள் 52 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. முக்கியமான பாடல்கள் முழுமையாக இடம் பெற்றுள்ள இந்த நூல் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து ஆகும்!

  20. Author: ஷங்கரநாராயணன்,எஸ்.

    Publisher: | Audience: Adult | PDF icon 808 KB, 114p.

    ஷங்கரநாராயணனின் நான்காவது கவிதைத் தொகுதி. தேய்பிறை வளர்பிறை கலைஞனுக்கும் உண்டு. கவிதைக்கும். குறுங்கவிதைக் காலம் இது. குறுந்தகடில் இசையை அமுக்கி ரசிக்கிற காலம். நடைப்பயண வண்டிப் பயண காலம் போய் இது சதாப்தி ரயில்ப் பயணம். காயப் பயணம். கதைகள் எழுதப் படுகின்றன. கவிதைகள் எழுகின்றன தாமாகவே. உணர்ச்சி அதன் தார வியூகம். அவற்றின் சூடு, அவசரம் அதுவே அழகு அவற்றில். பரிமாறப்படும் உணவு. வாழ்க்கையின் நெருக்கடிகளில் கவிதை பாறைச் செடிபோல் தலைநீட்டிச் சிரிக்கிறதை ரசிக்க முடிகிறதா? ஷங்கரநாராயணன் கவிதைகள் அத்தகையவை. வெறும் மூணு வார்த்தையில் முன்னு¡று சேதிகள் கொண்டாடுகின்றன அவை.

  21. Author: ச.நாகராஜன்

    Publisher: | Audience: Adult | PDF icon 705 KB, 95p.

    நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றிப் புகழும் தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், இதிஹாஸங்கள் கொண்ட ஏராளமான ரகசியங்கள் இந்த நூலில் விளக்கப்படுகின்றன.

  22. Author: ரஜினி பெத்துராஜா

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 432KB, 49 p.

    இந்நூலை ஆசிரியர் ஒரு பயணக்கட்டுரையாக மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க வரலாற்றையும், அங்கு காந்தியடிகள் மேற்கொண்ட அறப்பணியையும், தாம் கண்ட அற்புதங்களையும் இலக்கிய நயத்துடன் கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். காந்தியை மகாத்மாவாக்கிய மண்ணை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற ஆசிரியரின் யத்தனிப்பு அழகாய்ப் புரிகிறது. தென் ஆப்பிரிக்காவின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், வன உயிரின சுற்றுலாவின் அற்புதங்கள், நெல்சன் மண்டேலா பற்றிய தகவல்கள், காந்தியின் பேத்தியுடன் உரையாடியமை என அனைத்தையும் இயல்பாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்திருக்கிறார்.

  23. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 776.08KB, 134 p.

    நடிகை வசியாஸ்ரீயின் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் காரணங்களை டாக்டர் தீரஜ் அறிய முயல்வதாக உள்ளது கதையின் தொடக்கம். ஜீன்தெரபி மனித உலகத்துக்கு தேவையான ஒன்று. இதை முறையாகப் பயன்படுத்தினால் தென்றல், முறை தவறிப் பயன்படுத்தினால் புயல். சமூக விரோதிகளின் கைகளில் இது சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அரசாங்கம் மற்றும் மருத்துவர்கள் இதில் மிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

  24. Author: நிலாரசிகன்

    Publisher: | Audience: Adult | PDF icon 392 KB, 66p.

    மனித வாழ்வின் அனைத்து எல்லைகளை கவிதை வடிவில் அலங்கரிக்கிறார் ஆசிரியர்.கிராமப்புற தமிழ் சிறப்புகளை மிதமிஞ்சியவையாக வாசகர்களுக்கு கொடுக்கிறார்.

  25. Author: ஷங்கர நாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1.35MB, 200 p.

    இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் எந்தக் தளைகளும் இன்றி இயற்கையின் ஒரு நிகழ்வு போலவே பிறக்கிறான். பிறப்பு பற்றிய அந்த அனுபத்தை ஒவ்வொருவனும் கண்டான் எனினும் விண்டிலன். நாம அனுபவப்பட்டாலும் அதை நம்மால் விளக்கும் அளவு அந் நிகழ்வு நம் மனதில் பதிகிறது இல்லை. அதே சமயம் இறப்பு என வரும்போது கட்டாயம் ஒவ்வொரு மனிதனும் அதன் கடைசித் துளி வரை அனுபவித்தே இறக்கிறான். என்றாலும் அதை விளக்க முடியாமல், அதற்குள் அவன் இறந்து போகிறான். பிறப்பு அவனைத் தொடாத அலை. இறப்பு அவனைத் தொட்ட அலை. இந்த நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது

  26. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 619.66KB, 59 p.

    நட்சத்திர ரகசியங்களை ஹிந்து வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அழகுறத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. வானவியல் சமீப நூற்றாண்டுகளில் வளர்ந்து நவீன சாதனங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகளுடன் வேத, இதிகாசக் கூற்றுகள் ஒப்பிடப்படும்போது அரிய உண்மைகள் தெரிய வருகின்றன. இதை விளக்கும் நூல் இது! நூலில் உள்ள சில அத்தியாயங்கள்:- 01) வானில் நட்சத்திரங்களாகத் திகழும் தேவர்கள்! 02) வானத்தில் ஒரு காம தகனம்! 03) வானில் நடக்கும் கந்த புராணம்! 04) சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்! 05) அதிசய நட்சத்திரம் சுவாதிக்கும் புயலுக்கும் சம்பந்தம் உண்டு! 06) அசுவதி ரஹஸியம்! 07) வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்!

  27. Author: அ அ ஹ் கே. கோரி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 505KB, 101 p.

    கதை எழுதக் களன்களைத் தேட கோரியின் கதைகளை நாடினால் போதும். ஒரே களனைப் பல கோணங்களில் படம் பிடித்து பல கதைகளைத் தருவதென்பது ஆசிரியரின் சிறப்பு. கதாசிரியரின் மொழி ஆளுமையும், தனித்தன்மையும் அனைத்துக் கதைகளிலும் மிளிர்கின்றன. கதையும் கருவும் பொதுவாய் இருப்பினும் ஆளுமையும் ஸ்டைலும் மாறத்தானே செய்கின்றன!

  28. Author: விமலா ராமணி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 387KB, 100 p.

    ஒரு குறுநாவலும், சில சிறுகதைகளும் அடங்கிய தொகுதி இது. விமலா ரமணியின் சுவாரஸ்யம் குன்றாத தனித்துவ நடையில் புனையப்பட்ட இக்கதைகள் தரும் சுவை அலாதியானது. ’நந்தவனத் தென்றல்’ அதிரடி திருப்பங்களுடனும் சில ஃப்ளாஷ்பேக்குகளுடன் பரபரவென நகரும் கதை. ஸ்மிருதி எனும் பெண் பாத்திரம் கதையின் ஆணிவேராய் நின்று சுழலுகிறது. இறுதிப்பகுதியில் பிரணவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வாசகர்கள் மனங்களிலும் எதிரொலிக்கலாம்.

  29. Author: எஸ்.நாகராஜன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1655KB, 67 p.

    நவக்கிரகங்களைக் குறித்த கலைக் களஞ்சியம் இந்த நூல்.27 அத்தியாயங்களில் நவக்கிரகங்களின் கோவில்கள், அவற்றிற்குரிய ரத்தினக் கற்கள், எண்கள், யந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரங்கள், ஆதித்ய ஹிருதயம், கோளறு திருப்பதிகம், தசரதர் இயற்றிய சனீஸ்வர ஸ்தோத்திரம், கிரக தோஷ நிவர்த்திக்காக செய்ய வேண்டிய ராமாயண பாராயண முறை இவற்றோடு நவக்கிரகங்கள் குறித்த அறிவியல் உண்மைகளையும் தருகிறது இந்த நூல். இதைப் படிப்பதன் மூலம் நவக்கிரகங்களின் அனுக்ரஹம் கிடைக்கும்; உரிய பாராயண முறையை மேற்கொள்வதன் மூலம் தோஷங்கள் இருப்பின் அவை நிவர்த்தியாகும்.

  30. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 509.49KB, 113 p.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அக்னிபுத்ரியின் கணவர் ராஜசேகரன் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அக்னிபுத்ரியின் இயற்பெயர் சுபத்ரா. பெங்களூரில் நடக்கும் மெடிக்கல் செமினாருக்காகச் செல்லும் ராஜசேகரன் சுபத்ராவிற்கு ஃபோன் செய்து மும்பையிலிருந்து வரும் தன்னுடைய நண்பரின் மகளான நிலாவைக் கூட்டி வந்து அவர்களுடைய வீட்டில் தங்க வைக்கச் சொல்கிறார். நிலாவை கூட்டி வரச் ரெயில் நிலையம் செல்லும் சுபத்ராவின் காரில் யாரோ ஒருவன் எதையோப் பொருத்த முயல்கிறான். அவன் யார்? காரில் அவன் என்ன பொருத்தினான்? எதற்காக அவன் சுபத்ராவின் காரைத் தேர்வு செய்தான்? யாரிந்த நிலா? இப்படிப் பல கேள்விகளை எழுப்பும் கதையோட்டம் எதிர்பாராத பல திருப்பங்களின் மூலம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.

  31. Author: ச.நாகராஜன்

    Publisher: | Audience: Adult | PDF icon 550 KB, 80p.

    ஒரே நாளில் அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தை நிலைக்களமாகக் கொண்டு புனையப்பட்ட சரித்திர நாவல் இது.

  32. Author: ஷங்கரநாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 809.72KB, 126 p.

    மன நிலை திரிபு கண்டவர்கள் உலகம் இது. நதிக்கரையோரம் தானே பேசிக்கொள்ளும் நாணல் பைத்தியம் என்கிறார் ஆசிரியர். அவர்கள் உலகம் அவர்களுக்கே உரிய காரண காரியங்களுடன் மனதில் அழுத்தமாய் விழும் சித்திரங்களுடன் இருப்பதை ஆசிரியர் அனுபவித்து சொல்கிறார். நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என நாம் ஆதங்கப்படுவதைக் காட்டிலும், நம்மைப் புரிந்து கொள்ளாத அவர்களைப் புரிந்து கொள்வோமே என்கிறார் ஆசிரியர்.

  33. Author: ம.ந.ராமசாமி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1008KB, 212 p.

    ஒரு இசை வித்வாம்ஸினி பற்றிய நாவல். இருபதாம் நூற்றாண்டின் பல அழுத்தமான நிகழ்ச்சிகளை ஊடுபாவாகக் கொண்டு புனையப்பட்ட, இசை பற்றிப் பேசுவதான நாவல். இந்நாவலை வாசித்து பரவசப்பட்டு, அழுத ஓர் இசைக் கலைஞர், ஆசிரியரைத் தேடிச் சென்று, "என் மனைவி, என் காலடி அருகில் விழுந்து வணங்கிச் சென்றார்" என்று கூறியது இந்நாவலைப் பற்றிய சிறப்பினைத் தெரிவிப்பதாக இருக்கிறது.

  34. Author: ம.ந.ராமசாமி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1440KB, 256 p.

    ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகச் சூழ்நிலையைக் கொண்டு படைக்கப்பட்ட சரித்திர நவீனம். ஔவையாரின் 'நூல் எனிலோ கோல் காயும்...' என்பதான வெண்பாவை அடித்தளமாகக் கொண்டது. பரிசு பெற்ற நாவல் இது.

  35. Author: ஜெயந்தி சங்கர்

    Publisher: | Audience: Adult | PDF icon 1189 KB, 108p.

    இது ஒரு பதினாறு சிறுகதைகளின் தொகுப்பு.சிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர்.

  36. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 855.54KB, 194 p.

    கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவில் பெண்களுக்கு இருக்கும். காதல் என்பது உடலைச் சார்ந்தது அல்ல; உள்ளம் சார்ந்து உருவாக்கப்படுவது என்ற கொள்கையுடையவள் பதஞ்சலி. அதுமட்டுமில்லாது அழகில்லாத ஆண்மகனை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும் என்று மற்றவர்களுக்கு உணர்த்துவதே தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறாள் பதஞ்சலி. அவளுடைய லட்சியம் நிறைவேறியதா? அவளுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கான விடை இந்நாவலில் உள்ளது.

  37. Author: ஜெயந்தி சங்கர்

    Publisher: | Audience: Adult | PDF icon 662 KB, 101p.

    சார்ஸ் நோய், பதின்பருவத்தின் சிக்கல்கள் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தொட்டிடும் சிறுகதைகள் இந்நூலில் இருக்கின்றன.

  38. Author: கலையரசி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1.01 MB, 118 p.

    பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிந்த மாணவப் பருவத்தின் இனிமையான நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் நம் அனைவருக்குமே உண்டு. ’கொலை கொலையா முந்திரிக்கா!’ என்று பாட்டுப் பாடி நிலவொளியில் ஆடிய விளையாட்டுக்கள், 'கடல் போன்ற வாழ்வில் மீன் போன்ற என்னை மறவாதே,' என்று ஆட்டோகிராபில் கண்ணீர் மல்க எழுதித் தந்த பள்ளித்தோழி, அம்மாவுக்குத் தெரியாமல் ரசித்துச் சுவைத்த மூன்று காசு குச்சி ஐஸ், பருவ வயதில் பாதை மாறிய பயணத்தால் வாழ்வைத் தொலைத்த நட்பூக்கள், அம்மாவுடனான கடைசிச் சந்திப்பு, எனப் பசுமையான நினைவுகளையும் நெகிழ்ச்சியான தருணங்களையும் தம் நெஞ்சிலிருந்து பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம், வாசிக்கும் அனைவரையும் பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று, அவரவர் அனுபவங்களை அசை போட வைக்கிறார் ஆசிரியர். சுவையாகவும், நகைச்சுவை பாங்குடனும், நேர்த்தியுடனும் எழுதப்பட்ட நினைவலைகள்!

  39. Author: ரிஷபன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 869KB, 94 p.

    ஃப்ளாட் புரோமோட்டர் வேதாசலத்தின் மகன் சிவராம், கதை நாயகன். பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அப்பாவின் வாரிசாய் தொழிலில் இறங்கும் சிவராமிற்கு தனது அபார்ட்மெண்ட்டில் நடக்கும் மர்ம நிகழ்வுகள் வியப்பைத் தருகின்றன. மர்மங்கள் அகல அகல, புதுப் புது முடிச்சுகள் விழ விழ, சமாளிப்பதில் திண்டாடித்தான் போகிறான் சிவராம். தன் தந்தையின் ஒழுக்கம் பற்றிய சந்தேகம், புதிரான எண் கணித புரொஃபஸர், புதுக்கட்டிடத்தில் இளம்பெண் கொலை, திடீர் தங்கையாய் தோன்றும் ‎தனம் என விறுவிறுப்பு குறையாமல் நகரும் கதையில் சிவராமின் ஸ்வேதாவுடனான காதல் இளந்தென்றலாய் வீசிச் செல்கிறது. இறுதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து தெரிய வரும் உண்மைகள் அதிர வைக்கின்றன.

  40. Author: உஷாதீபன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1.04MB, 118 p.

    கொச்சைத் தனம் இல்லாத யதார்த்தத்தைக் கையாளும் திறன், பல கதைகளின் வரிகள் கண்களைக் குளமாக்கி மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்தி அன்பின் ஆழத்தைக் கண்டறியத் தூண்டி விடும் படைப்புக்கள். எவ்விதப் படபடப்பும் ஆர்ப்பாட்டமும் படாடோபமும் இல்லாது ஆழ்ந்து அடங்கிய அமைதியான குரலில் கதை சொல்லும் பாங்கு. தளராத அமைதியான நதிபோல வற்றாது ஜீவ வெள்ளமாக ஓடும் படைப்புக்கள்

  41. Author: ஷங்கரநாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 574.48KB, 101 p.

    சுனாமியின் தாக்குதலை, அது விட்டுச் சென்ற அவலங்களை மையப்படுத்தும் இந்நாவல் மனிதன் மகத்தானவன், எந்தப் பேரிடரையும் தாண்டி அவன் உயர்ந்தெழுவான் என்கிற தினவையும் சொல்கிறது. மனிதன் வலை வீசி மீன் பிடிக்கப் போனபோது, கடல் அலை வீசி மனிதனைப் பிடித்த கதை. கதாநாயகன் சுனாமி அலைகளால் கடலுக்குள் வாரிச்செல்லப்படுகிறான். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் மிதந்து வரும் மரம் ஒன்றில் தஞ்சம் அடைகிறான். சிறு மிதவை போன்ற மரத்தில் திக்கு திசை தெரியாமல் மிதந்து போகிறான். ஏறத்தாழ பன்னிரண்டு நாட்கள் மிதந்தபடியே கடலில் அவனது தனிமை வாழ்க்கை. இறுதியில் அந்த வழியே வந்த ஒரு கப்பலால் மீட்கப்படுகிறான். அவனது சவாலான அந்தப் பன்னிரண்டு நாட்களை நுணுக்கமாகப் படம் பிடிக்கிறது கதை. தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.

  42. Author: ராஜேஷ்குமார்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 840.61KB, 134 p.

    நவநீதன், சிவசங்கர், பிரதீபாவின் தந்தை தில்லைராஜன் தலையில் ஏற்பட்ட அடி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 'நீல நிலா' என்பதன் மூலம் தில்லைராஜன் சொல்ல வந்தது என்ன? அதன் அர்த்தம் என்ன? என்ற கேள்வி விடை சொல்கிறது இந்த நாவல்., 'தொல்பொருள் ஆராய்ச்சித் துறை'யிலிருந்து பத்ரிநாராயணன் தலைமையில் 'காணாதது கண்டான்' கோட்டைக்கு ஆராய்ச்சிக்கு செல்கின்றனர் ஒரு குழுவினர். பகல் வேளையில் இருள் அடர்ந்து காணப்படும் அந்தக் கோட்டையில் பவுர்ணமி அன்று இரவு மட்டும் கோட்டைக்குள் ஏற்படும் வெளிச்சத்தை ஆராய முற்படும்போது பல உண்மைகள் விளங்குகின்றன.

  43. Author: உஷாதீபன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 708.10KB, 68 p.

    நேசமும் நிதானப் பார்வையும். பலவீனங்களோடும், பலங்களோடும் இருப்பவர்கள்தான் மனிதர்கள். வியத்தலும் இலமே. இகழ்தல் அதனினும் இலமே என்று ஒவ்வொன்றையும் நிதானத்தோடு நோக்க வேண்டுமென்ற உணர்வுகளை வாசக நெஞ்சங்களில் துளிர்க்க வைக்கும் தொகுப்பு.

  44. Author: ச.நாகராஜன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 987KB, 100 p.

    இந்திய சுதந்திரத்தைப் பெறுவதற்காக அஹிம்சை வழியின் மூலம் அண்ணல் காந்தியடிகள் பெரும் முயற்சி செய்த போது இன்னொரு முகமாக அந்த சுதந்திரத்தைச் சீக்கிரம் அடைய சிங்கப்பூரில் ஒரு ராணுவத்தையே உருவாக்கி ஆங்கில ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்த மாவீரன் நேதாஜி. இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் அவரது வாழ்க்கை வரலாறு 36 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவரது ராணுவம் பற்றிய சுவையான தகவல்கள், அவரது மறைவு குறித்து எழுந்த சந்தேகங்கள் ஆகியவற்றை விரிவாக இந்த நூலில் படிக்க முடியும்.

  45. Author: ஷங்கர நாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 916.71KB, 106 p.

    அக்னி அட்சர விருது பெற்ற நாவல். வேலைக்குப் போகும் ஒரு நகரத்துப் பெண்ணின் கதை. என்னதான் பெண் வேலைக்குப் போனாலும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்று பேசினாலும், அவள் சமூகத்தில் இன்னும் இரண்டாம் தகுதிப் பிரஜை தான் என ஆதங்கமாய் எழுதிக்காட்டுகிறார் ஷங்கரநாராயணன். வேலைக்குப் போகும் பெண்கள் கருவோடு ஃபைலும் சுமக்கிறார்கள். அவள் முதல் குழந்தையை வரவேற்ககும் கணவன், இரண்டாம் குழந்தை என வரும்போது , கலைத்து வி,ட நிர்ப்பந்திக்கிறான். ஆயிரம் பெண்ணுரிமை பேசினாலும், தான் விரும்பும் தன் குழந்தையை கணவனின் விருப்பப்படியே கலைத்துக்கொள்ள வேண்டி கட்டாயப்படுத்தும் இந்த சமூகத்தின் ஒருபக்கச் ச்சார்பை அவர் எழுதிக் காட்டிய தீவிரம் பதைபதைப்புக்குள்ளாக்குகிறது

  46. Author: புகாரி

    Publisher: | Audience: Adult | PDF icon 767 KB, 75p.

  47. Author: ஆர்.கே.தெரசா

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Children | PDF icon 725KB, 46 p.

    வெல்டன் விக்னேஷ், ஆஹா போகலாம் அதிசய உலகம்,பாசப் பறவைகள்,உலகம் குளிரணும்,அதிர்ஷ்ட ராஜா,கிராமத்து தேவதை, பச்சைக் கோழிக் குஞ்சு,கர்வம் கொண்ட கானமயில் என்னும் எட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல். வெல்டன் விக்னேஷ்' சிறுகதையில் ஒரு கிராமத்துச் சிறுவனின் காருண்யமும் வீரமும் கடல் அருகிலான குக்கிராமத்தில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்ச்சியின் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன. 'ஆஹா போகலாம் அதிசய உலகம்' கதையில் அதிசய உலகத்தின் அற்புதங்களாக கடலுலகம், மீன்கள், மன்னரின் அரண்மனை என பழைமையான அதிசயங்களுக்கிடையில் கார்ட்டூன் ஓடும் டிவி, தங்கத் தட்டில் ஐஸ்க்ரீம், லாப்டாப் கம்ப்யூட்டர் என நவநாகரீக அதிசயங்களும் சேர்ந்து கொள்கின்றன. 'பாசப் பறவைகள்' கதையின் பார்ச்சுனா அருமையான பாத்திரப்படைப்பு. 4 வயது சிறுமி தோட்டத்தில் செடிக்கு தந்தையோடு சேர்ந்து நீர்விட்டு பூக்களுடன் குதுகலிப்பாள். பழம் உண்ண தோட்டத்திற்கு வரும் பறவைகளுடன் கொஞ்சி தானும் மகிழ்ந்து அவைகளையும் மகிழ்விக்கிறாள். பலபறவைகள் அவளை விரும்பி வருகின்றன. ஒருநாள் அறியாது அவள் ஆபத்தில் சிக்கும்போது பறவைகள் குரல் கொடுத்து பெற்றோரை வரவைத்து அவளைக் காக்கின்றன. 'உலகம் குளிரணும்' கதையில் தாத்தா பேரக் குழந்தைகளுடன் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திற்கு பயணம் செல்கின்றனர். குழந்தைகளின் வெளியுலகப் பார்வை, இயற்கை குறித்து கேட்கும் கேள்விகள், அதற்கு தாத்தா அளிக்கும் விளக்கங்கள் என செல்கிறது கதை. மழைபொழியச் செய்ய மரம் வளர்க்கவேண்டுமெனும் விதை ஆழமாய் பதிய ஆசுவாசமாய் உணர்கிறார் தாத்தா. அடுத்த தலைமுறை 'குளோபல் வார்மிங்' அச்சுறுத்தலிலிருந்து விடுபடும் வண்ணம் மரம் வெட்டுபவருக்கு தண்டனை, நீராதாரங்களில் கட்டடம் கட்டாமல் தடுப்பது, ஓசோன் படலத்தைக் காப்பது என உறுதியாய்ப் பேசுகின்றனர் குழந்தைகள். அதிர்ஷ்டராஜா தன் தாயைக் காக்க சம்பாதிக்க மாடு,ஆடு, நாய்,பூனை, நண்பர்களுடன் சேர்ந்து செல்கையில் காட்டில் திருடர்களை எப்படி சமாளித்து செல்வம் கொண்டு வருகிறான், செல்வத்தால் கிராமத்தை எப்படி உயர்த்துகிறான் எனச் சொல்லும் கதை 'அதிர்ஷ்ட ராஜா'. பூங்குடி கிராமத்தில் சிற்றன்னையால் வளர்க்கப்பட்ட தீபா எப்படி தடைகளை மீறி வளர்ந்து, கிராமத்தை செழிப்பாக்குகிறாள் என்பதே 'கிராமத்து தேவதை' கதை. பேத்திகளுக்கு பெற்றோர் சொல்கேட்டு நடக்க வேண்டுமென்பதை கோழி, கோழிக்குஞ்சுகள் வழியாக சொல்கிறார் பாட்டி 'பச்சைக் கோழிக்குஞ்சு' கதையில். அக்கா மயில் எத்தனையோ சொல்லியும் கேட்காத தம்பி மயிலின் கர்வம், நரி, குரங்கால் ஏற்பட்ட தீங்கிற்குப் பிறகு மறைந்ததைச் சொல்லும் கதை 'கர்வம் கொண்ட கானமயில்'.

  48. Author: விமலா ரமணி

    Publisher: | Audience: Adult | PDF icon 330 KB, 88p.

    இது ஒரு நாவல்.

  49. Author: ம.ந.ராமசாமி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Children | PDF icon 824KB, 91 p.

    சிறுவர் கதைத் தொகுப்பு நூல் இது. சிறுவர்களுக்கான இதழ்களில் இக்கதைகள் வெளிவந்துள்ளன. 'திருவாழத்தான்' என்னும் புனைபெயரில் எழுதப்பட்டவை.

  50. Author: மஹாகவி பர்த்ருஹரி

    Publisher: | Audience: Adult | PDF icon 1073 KB, 194p.

F: 216AND73AND216AND40;

R: 100AND121AND102AND114;

0
False
False
https