Showing 51 - 100 of 220
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: | Audience: Adult | 574.48KB, 101 p.
ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்) ஆசிரியரின் வழக்கமான குறும்பு கொப்பளிக்கும் குறுங்கவிதைகள் மற்றும் ஹைக்கூக்களின் தொகுப்பு நூல். மற்ற அவரது கவிதை நூல்களில் காணாத சிறப்பு இதில் என்னவெனில், பல இடங்களில் இந்தத் தலைப்பை மையமிட்ட சிந்தனைகளை கவிதைத் தூறலாக அவர் தெளித்தபடியே செல்கிறார் என்பதே. பரிணாம ஊர்வலத்தில் கடைசியாக முதல் வரிசைப் பெருமையுடன் மனிதன் என்கிற முத்தாய்ப்போடு நூல் முடிவது அழகு.
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: | Audience: Children | 925 KB, 42p.
சிறுவர்களைச் சிறந்தவராக்கும் நல்ல கருத்துகளும் படிப்பவரை ஈர்த்துத் தம்மோடு இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் நிறைந்த சுவையான கதைகளின் தொகுதி இது. ஒவ்வொரு கதையிலும் தகுந்த இடத்தில் சிறந்த கருத்தை சிரியர் அமைத்திருப்பது இந்நூலுக்கு ஒரு பெருமை.
Author: சம்ரட்சண ட்ரஸ்ட்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1063KB, 70 p.
பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
Author: சம்ரட்சண ட்ரஸ்ட்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 974KB, 77 p.
பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
Author: சம்ரட்சண ட்ரஸ்ட்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1127KB, 82 p.
பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
Author: சம்ரட்சண ட்ரஸ்ட்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1062KB, 82 p.
பத்திரிக்கை, அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் முன்னணியாளர்களாக விளங்கும் சிறந்த நிபுணர்களின் அனுபவங்கள் இந்நூலில் வாசிக்கக் கிடைக்கின்றன. மூன்று மாத பயிற்சிப் பட்டறையில் கையேடாக வழங்கப்பட்ட “எழுது எழுது எழுது” நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. தம் திறத்தினை மேம்படுத்தி பல்லூடகங்களின் செயல்பாடுகளில் எவ்வாறு பங்கேற்கலாம் என மிக விரிவாக வல்லுனர்களின் முன்னுதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தீவிரமாக ஊடகப்பணியில் இணையத் துடிப்போருக்கு இத்தொகுதிகள் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 613.61KB, 151 p.
மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. முதல் குறுநாவல் நிவாடியுகம் முதிர்கன்னி ஒருத்தியின் வாழ்க்கைச் சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கடல்காற்று என இதில் இடம்பெற்றுள்ள இரண்டாவது குறுநாவல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்த்தில் இளங்கலை மாணவர்களுக்குப் பாடநூல் அந்தஸ்து பெற்றது. ஒரு தனி மனிதனின் இறப்பு என்பது, அந்த சமூக அமைப்பால் பல்வேறு மனிதர்களின் இழப்பாக உருப்பெருகுவதை விவரிக்கிற குறுநாவல் இது. கனவுகள் உறங்கட்டும் – என்கிற மூன்றாவது குறுநாவல் மல்யுத்தப் பின்னணியில் பெற்றி தோல்வியை ஒரே சீராகப் பார்க்கிற உயர்ந்த நிலையை அடைகிறதைப் பேசும் குறுநாவல் இது. ஒரு திரைக்கதை போல சவாரஸ்யமான முடிச்சுகளால் பின்னிய குறுநாவல்
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 968.80KB, 140 p.
மூன்று குறுநாவல்களின் தொகுதி இது. பூமிக்குத் தலை சுற்றுகிறது - முழுக்க நனவோடை உத்தியில் கலவி பற்றி நாம்ம் நினைக்கையில் அதை உயரிய வாழ்வின் ஆகச் சிறந்த விஷயம் போல் நினைக்கிறோம் என்றும், மற்றவர் கலவி பற்றி நினைக்கிறபோது அதை இகழ்ச்சியாக அணுகுகிறோம் என்றும் எடுத்துக் காட்டும் கதை. முற்றிலும் புதிய தளம். கருப்புப் புள்ளிகள் - ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பல்வேறு கதாகபாத்திரங்களின் கூட்டணி இந்தக் கதை. எல்லாமே துயரத்தில் அடிபட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அதில் இருந்து எழுச்சி கொள்ள முயலும் ஒரு கதாநாயகன். பறவைப்பாதம் – கணவனின் சாவை விசாரிக்க வரும் மனைவியின் பழைய நண்பனிடம் சாவைப் பற்றிப் பேசாமல் தன் இளமைப் பருவ இனிய நிகழ்ச்சிகளை அவனோடு அசைபோட ஆர்வம் காட்டும் வித்தியாசமான மனைவி கதாபாத்திரம்.
Author: ஏ. ஏ. ஹெச். கே. கோரி சிறுகதைகள்
Publisher: | Audience: Adult | 1207 KB, 118p.
இது ஒரு இருபத்தி ஏழு சிறுகதைகளின் தொகுப்பு.
Author: கோரி, ஏ.ஏ.ஹெச்.கே.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 918.73KB, 95 p.
இழையோடும் நகையுணர்வுடன் மனிதக் கூறுகளை பதம் பிரித்துப் பார்க்கும் கோரியின் பார்வை மிக விசாலமானது. புதுப்புது கோணங்களில் நிகழ்வுகளை அணுகும் விதம் பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான கதைகள் கதை முழுக்க நம்மை ஓட வைத்து இறுதியில் அப்படியே உட்கார வைக்கும் தன்மை கொண்டவை. சம்பவங்களின் விவரணையும் பாத்திரங்களின் தோரணையும் விலாவாரியாய் காட்சிப்படுத்தப்படுகிறது. சட்டென அனுமானிக்க முடியாத முடிவுப்பகுதியில்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது.
Author: கோரி, ஏ.ஏ.ஹெச்.கே.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 941.31KB, 94 p.
நீளமான கதைகள் பல அடங்கிய தொகுதி. உறவுகள் உறவாடும் விதங்களை கோரியின் பார்வையில் பார்ப்பதே அழகு! வழக்கம்போல சூழல்களின் விவரிப்பு அதீத விரிவான நடையில். பெரும்பாலான கதைகளில் கணவன் மனைவி உறவுச் சங்கிலியே மாலையாகி அலங்கரிக்கின்றன. சந்தோஷமோ துக்கமோ.. தம்பதியினருடன் ஊடாடும் அன்னியோன்யம் பரவசம் கலந்த பரிமாணம்! எத்தனை எதிர்மறைப் பாத்திரங்கள் இருந்தாலும் சில நேர்மறைப் பாத்திரங்கள் அத்தனையையும் தூக்கி சாப்பிட்டு விடுகின்றன.
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 487KB, 38 p.
வியக்க வைக்கும் அறிவியல் முன்னேற்றத்தில் பிரமிப்பூட்டும் சுவையான செய்திகளும் கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அனைதிந்திய வானொலியின் ‘ஏன் எப்படி’ விஞ்ஞானத் தொடர் மூலம் ஆசிரியர் அளித்த செய்திகளும் மதுரை வானொலி நிலையத்தில் ஆற்றிய உரைகளும் இதில் இடம் பெறுகின்றன. படிக்க வேண்டிய அறிவியல் புதுமைகள் நிறைந்த நூல்!
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1.09MB, 182 p.
ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள், பெயர்கள் உண்டு. ரகசியமில்லாத மனிதனே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கதையின் நாயகி ரோகிணி தன் வாழ்வில் தான் சந்திக்க நேரும் பிரச்சினைகளை தைரியமாகவும், மன உறுதியுடனும் எதிர்கொள்கிறாள். தன்னுடைய வாழ்க்கையில் தனது தோல்விகள், துயரங்களிலிருந்து விடுபட்டு தன்னை புதுப்பித்துக் கொள்ள பல்வேறு சமூக சேவை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள். ரோகிணிக்கும் லாயர் சத்தியமூர்த்தி, அவர் மனைவி சுவர்ணாவிற்கும் இடையே உள்ள தொடர்பிற்கான முடிச்சு இறுதியில் அவிழ்கிறது.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 681.27KB, 84 p.
வலுவான தமிழ்ப் பாரம்பரியம் நம் கவிதைகளுக்கு உண்டு. கீழைநாடுகளின் இயற்கைக்கு நெருக்கமான உணர்வுகளை ஹைக்கூ ஆக வீர்யத்துடன் முன் வைத்திருப்பதை நாம் இந்நூலில் காணலாம். ஐவகை நிலப் பாகுபாடுகளுடன் ஹைக்கூ கவிதைகளைப் புனையும் முயற்சியும் இந்தக் கவிதைத் தொகுப்பில் உண்டு. சூட்சுமமான கவிதைகளின் தொகுப்பு. ஓர் எடுத்துக்காட்டு : குழந்தை வரம் வேண்டி பழனி முருகனுக்கு எடுக்கிறாள் பால் குடம்
Author: சம்ரட்சணா டிரஸ்ட்
Publisher: | Audience: Adult | 55775 KB, 114p.
சம்ரட்சணா பற்றிய அறுமையான புத்தகம் இது.சித்த யோகி ஸ்ரீ சிவஷங்கர் பாபா பற்றி மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Author: வேங்கட ரமணி, டி.எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 333.20KB, 65 p.
பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 200க்கும் மேலான சிறுகதைகளுள் சிறந்தவை என்று ஆசிரியர் கருதும் பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதி. கதைக்கருக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. தன் சமத்காரப் பேச்சில் தானே மயங்கி நெடுந்தூரம் சென்று, இறுதியில் சிரிப்புக்கு ஆளாகும் ஓர் அறிவு ஜீவி; பயங்கரமான இந்து முஸ்லிம் கலவரங்களுக்கு மத்தியிலும் யதார்த்தம் மாறாமல் கல்மிஷம் சிறிதும் இல்லாமல் பரஸ்பரம் வழக்கம் போல் உதவிக் கொள்ளும் சிறு வியாபாரிகள்; ஒன்றும் தெரியாதவள் என்று நினைத்திருந்த மனைவியே சத்குருவான கதை; அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றியே சிந்தித்து அப்போது செய்யும் காரியங்களைச் சொதப்பும் ஒரு குழப்பவாதி; தவறு தன்மீது என்பதையே அறியாமல் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒரு அப்பாவி; இந்த உலகம் தன்னைச் சுற்றியே சுழல்கிறது என்று நினைத்துக்கொண்டு அடுத்தவர் அபிப்பிராயத்துக்காக சின்னச் சின்ன விஷயங்களிலும் அலட்டிக்கொள்ளும் ஓர் ஆத்மா; இரு வேறு முற்றிலும் வேறு பட்ட பின்னணியிலிருந்து வந்தாலும் நட்பு பாராட்டுவது மட்டும் அல்லாமல், அடிப்படையில் ஒரேமாதிரியான எண்ணப்போக்கு கொண்ட இரு இளைஞர்கள்;நாடி சோதிடம் விசித்திரமாகப் பலித்த விதம்; போலி உரிமைவாதிகளின் கபடம்; குற்றம் புரிந்தவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆவி உலகத் தொடர்பு கருவியாக இருந்த விதம்; தவிர சில திகில் கதைகள்-இப்படி பரந்துபட்ட நிலைக் களன்கள். விறுவிறுப்பாகச் செல்லும் நடையும் இழையோடும் மெல்லிய நகைச்சுவையும் இந்தக் கதைகளுக்கு சிறப்பு சேர்க்கின்றன
Author: நிலா
Publisher: | Audience: Adult | 975 KB, 103p.
இது ஒரு நாவல்.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 494.43KB, 67 p.
தாயின் பாசத்திற்கும் தந்தையின் ராணுவ ஒழுங்குடன் கூடிய கண்டிப்புக்குமிடையே வாழ்ந்து வரும் சிவா மென்மையான மனம் படைத்தவன். யாமினியுடன் மலரும் காதல் அவன் தந்தைக்குத் தெரியவந்து அவர் கண்டிக்கிறார். இதில் மனமுடையும் அவன் யாமினியின் வீட்டிற்குச் செல்கிறான். பெற்றோர் இல்லாத யாமினிக்கு மரியா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண் பாதுகாவலராய் இருக்கிறார். யாமினியை விரும்பும் மைக்கேலை விரோதிக்காமல் சிவா - யாமினியின் திருமணத்தை முடித்துத் தருவதாக மரியா வாக்களிக்கிறார். ஒருநாள் மைக்கேல் ஹோட்டல் அறையொன்றில் இறந்து கிடக்க, அச்சூழலில் அங்கிருக்கும் சிவா கொலைப்பழியில் சிக்குகிறான். ஜெயிலுக்கும் போகிறான். சிவா வெளியில் வந்தானா? உண்மையில் மரியா யார்? யாமினி என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு கதையில் போகப்போக முடிச்சு அவிழ்கிறது.
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 707 KB, 52p.
இது ஒரு நாவல்.
Author: மு.ஸ்ரீநிவாசன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 674KB, 112 p.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கலாச்சாரத்தில் தொன்மை மிக்க பிரதேசங்களில் பயணித்து அவற்றைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் பயணக் கட்டுரைகளாக வெளிவந்த இப்படைப்புகள் சிறந்த தொகுப்பாக தற்போது வந்திருக்கிறது. ஆசிரியர் தனக்கே உரித்தான நடையில் நிறைவாக எழுதியிருப்பது மற்ற பயண நூல்களை விட மாறுபட்ட சுவையை வாசகருக்குத் தருகிறது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக்க பகுதிகளாக இவற்றில் எடுத்தாளப்பட்டவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இந்தோனேசியாவின் அகத்தியர் கோயில், கம்போடியாவின் அங்கோரா, இத்தாலியின் பாம்ப்பே மற்றும் இந்தியாவில் காஷ்மீரின் சூரியக் கோவில், ஆந்திராவின் லெபாக்ஷி கோயில் ஆகியவற்றைக் கூறலாம். புள்ளி விவரங்களாக அடுக்காமல் இப்பிரதேசங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மிகவும் சுவாரசியமாகவும், வாசிக்க சலிப்பு ஏற்படாவண்ணமும் வெளிப்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 418KB, 88 p.
அர்ஜுன் மலர் பொக்கே கடை ஒன்றில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் காதல் வயப்படுகிறான். அவளோ தன் பெயரை இவனுக்குத் தெரிவிக்காமல் இவனை தவிக்க வைக்கிறாள். அவள் பெயரை என்றேனும் கண்டுபிடித்து விடுவது என்று சபதமிடுகிறான் அர்ஜுன். அவன் துப்பறிந்து அவள் பெயர் கீதா என்பதைக் கண்டுபிடித்து அவளது முகவரிக்கு மலர் பொக்கேயுடன் போகிறான். அப்போதுதான் அவள் ஏற்கெனவே திருமணமானவள் என்று அறிந்து மலர்களை வீசிவிட்டு சோகமாக வீடு திரும்புகிறான். ஒருநாள் பிரசவ வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்து அவளை மருத்துவமனையில் அர்ஜூன் சேர்க்க, அவள் பெயர் அனிதா என்றும், அவள் கீதாவின் சகோதரி என்பது தெரிய வருகிறது. அவன் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி ஒருநாள் அவனைக் காண வருவதாக அனிதா கூறுகிறாள். அர்ஜுனும் காத்திருக்கிறான். அர்ஜூனைக் காண மலர்க்கொத்துடன் தேடி வந்த அனிதா அதைத் தூக்கி எறிந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறாள். உண்மையில் நடந்தது என்ன? அர்ஜூனின் கடந்த காலம் என்ன? அனிதா பார்த்த அந்தக் குழந்தை யாருடையது? அனிதாவின் களவுபோன கனவுகள் மீட்கப்பட்டதா? எல்லா கேள்விகளுக்கும் விடை நாவலின் முடிவில்.
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 599 KB, 90p.
சீனக்கலாசாரம் மிகத் தொன்மையும் நெடிய வரலாறையும் கொண்டது. ‘கனவிலே ஒரு சிங்கம்’ என்ற நாம் எல்லோரும் அறிந்த சிங்கநடனம் குறித்த, ‘மலைகள் மீதொரு ராட்சத யாளி’ என்ற சீனப் பெருஞ்சுவர் பற்றி குறித்த, ‘தூரிகைக்கலை’ என்ற chinese calligraphy குறித்த கட்டுரைகளுடன் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. சுவாரசியமான தகவல்களுக்கு சற்றும் குறைவிருக்காது. விரிவான ஆய்வுகளுக்குப் பின் இக்கட்டுரைகள் வார்க்கப்பட்டிருப்பதால் இதன் உள்ளடக்கம் சீனக்கலாசாரத்தை அற்புதமாக வெளிக்காட்டுகின்றன.
Author: ரிஷபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 2413KB, 53 p.
வாழ்வென்னும் வானவில்லில் எத்தனையோ வண்ண நிகழ்வுகள் இருப்பினும் காதல் என்னும் கணத்திற்கு எப்போதும் ஒரு தனி வண்ணம் உண்டு. உள்ளவரை உயிரில் கலந்து உருக்கம் கொடுக்கும் காதல் ஒரு சிலருக்கு கல்யாணம் வரை வரும். பலருக்கோ எங்கோ, எப்போதோ ஒரு சில நாட்கள் மட்டும் வந்துவிட்டு வாசம் விட்டு செல்லும். ரிஷபனின் முதல் கதையான ‘காதல் காதலில்' விதவையான வித்யாவுடன் நாயகனுக்கு வந்த காதல், கண்ணியமான நட்பாய் கருக் கொள்கிறது.அந்த நட்பே, வித்யாவின் குழந்தைக்கு பாதுகாவலன் ஆகும் நிலைக்கு வழிவகுக்கிறது. காதல் கைகூடும் களிப்பு கிடைப்பதற்குள் எத்தனையோ இடையூறுகள். மனம் ஒருவனிடம், மாலை இன்னொருவனிடம் என இருந்த ‘மணமகள் அவசர தேவை' கதையின் நாயகி வசந்தி, கணேஷிடம் சேர்வதை 6 கதை மாந்தர்களுடன் சுவைப்பட விவரித்திருக்கிறார். சற்றே பெரிய சிறுகதை என்று சொல்லுமளவிற்கு குறைவான நிகழ்வுகள், கதை மாந்தர்களுடன் விறுவிறுப்பாய் கதை சொல்லும் கலை ஆசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
Author: டாக்டர். டீ.வீ.சுவாமிநாதன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 684KB, 49 p.
நேர்மைக்கும் நிர்வாகத்திறமைக்கும் பெயர் பெற்ற காலம் சென்ற டி.வி.சுவாமிநாதன் ஐ.ஏ எஸ் அவர்களின் கவிதை தொகுப்பு காலத்தேர். இது அவரின் இனிய தமிழ் சொல்லழகிற்கும் ஞானக் கருத்தாழத்திற்கும் சாட்சி சொல்லும் தொகுப்பு. “மெட்டி ஒலித்திட மேனி நெளிந்திடும் ஒரு பெண்ணின் நாட்டிய நளினத்திலிருந்து” “ மண்ணிது குப்பை வெறும் புழுதி எந்த மன்னனின் பொன்னுடல் மிச்சமிதோ” என்ற ஒரு ஞானத்தேடல் வரை இந்த காலத்தேர் வித விதமான பாதைகளில் பவனி வரும் கவிதைத் தேர் இது.. இசைத் தூண்களைப் பார்த்து “பண் திறன் வல்ல விரல் வருட பத நிஸ சரிகம பாடிவரும்” என்று வியக்கும் கவிதைகள் அதே நேரத்தில்’ “உயிர் வண்டிந்தப் உடல் பூவினை விட்டகலும்’ என்று துயரமுடன்அங்கலாய்க்கும். தாயார் உடலைக் கருக்க வந்த தீயைப் பார்த்து ஒரு குழந்தை “ நீ யார் ? எனக் கேட்கும் ஒரு நிர்மலமான கேள்விக்கு நெருப்பு சொல்லும் பதில் படைப்பின் காரணங்களை வேதாந்தமாகவும் யதார்த்தமாகவும் விரிக்கிறது. எளிமையும் மென்மையும் நிறைந்த இந்த அபூர்வமான கவிதைகள் மனதில் ஒரு அமைதியான அதிர்வுகளை ஏற்படுத்துவது நிதர்சனம்
Author: மதுமிதா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 984.63KB, 89 p.
’புதிய பார்வை’ இதழில் வெளியான வெவ்வேறு தளங்களை வெளிப்படுத்தும் 26 கட்டுரைகள் அடங்கிய தொகுதி. அறிவியல், அரசியல், சமூகம், இலக்கியம், மனித நேயம், உளவியல்... என அனைத்துத் துறைகளையும் தொட்டு எழுதப்பட்டிருக்கிறது. இருவேறு துறைகளை, எடுத்துக்காட்டாக, அறிவியலுடன் இலக்கியத்தையும் இணைத்து எழுதி சுவாரசியத்துடன் படிக்கத் தூண்டும் , படிக்கும்போதே மனதில் நியாயமான கேள்விகளை எழுப்பும், தமிழ் குறித்த அக்கறையினை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை. சின்னஞ்சிறு கிராமத்தில் நிகழும் செய்திகள் மட்டுமல்ல, உலக அளவில் காணப்படும் விஷயங்களையும் எடுத்துச் சொல்லுகின்றன. நட்பு, குடும்ப உறவுகள் பற்றியும் சிந்திக்கத் தூண்டும் அழகான விளக்கங்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என நிரம்பி வழியும் காலவெள்ளத்தின் சில நிகழ்வுத் துளிகள்.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 953.74KB, 121 p.
இது ஓர் ஆச்சரியமான தொகுதி. இரவு என்கிற அம்சத்தை மையமிட்டுச் சுற்றியோடும் கதைகளாய் அமைந்திருக்கிறது. இரவையே உயிருள்ள கதாபாத்திரமாக்கி காலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம் என ஆசிரியர் எழுதிக் காட்டியிருப்பது கால காலத்துக்கும் மறக்காமல் நம் நெஞ்சில் தங்கும்.
Author: டி.எஸ்.வெங்கடரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1842KB, 168 p.
சுபாஷ் சந்திர போஸின் இளமைப் பருவம் துறவறமா, பொதுப் பணியா என குறிக்கோளைத் தேடிய பருவம். எனினும், தந்தையின் விருப்பம் குறுக்கிட, லண்டன் சென்று, ஐ.சி.எஸ்சில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறார். தேசம் அறைகூவல் விடுக்க பதவியைத் துறந்து, இந்தியா திரும்புகிறார். காந்திஜியின் சாத்விகப்போக்கு பிடிக்காமல், சித்தரஞ்சன் தாஸின் தலைமை ஏற்று, சிறை சென்று சித்திரவதை அனுபவிக்கிறார். உடல் நிலை சீர் கெட, வியன்னா சென்று சிகிச்சை பெற்று குணமடைகிறார். ஐரோப்பாவில் பலநாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து அனுதாபமும் அனுபவமும் சேகரிக்கிறார். இந்தியா திரும்பி இருமுறை காங்கிரஸ் தலைமை ஏற்றும், ஒத்துழைப்பு இல்லாததால் மனம் நொந்து, ஃபார்வார்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்குகிறார். மீண்டும் சிறை. வீட்டுக் காவல். மாயமாய் மறைந்து சாகசங்கள் புரிந்து ஜப்பானை அடைகிறார். இந்திய தேசிய ராணுவத் தலைமையேற்று, ஜப்பானுடன் இணைந்து போரிட்டு வெற்றி பெற்று இந்தியாவை நோக்கி முன்னேறுகிறார். ஜப்பான் சரண் அடைந்துவிட, திட்டங்கள் தோல்வி. ரஷ்யா வசமுள்ள மஞ்சூரியாவை நோக்கிப் பயணிக்கையில், விமானம் வெடித்து இறந்ததாக அறிவிப்பு. இது குறித்த சர்ச்சைகள். சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை வெறும் குறிப்பேடாக இல்லாமல் ஆசிரியர் ஆய்வு பூர்வமாக ஒரு புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார். இந்த நூலில் காணப்படும் அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து சித்தரிக்கப்பட்டிருப்பது புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. நேதாஜியின் சமகாலத் தியாகிகளின் வாழ்வில் நடந்த குறிப்புக்களும் அவருக்கும் காந்திஜிக்கும் உள்ள அணுகுமுறை வித்தியாசங்களும் சுவையோடும், பாரபட்சமற்ற முறையிலும் கூறப்பட்டுள்ளன. நேதாஜியின் வாழ்க்கையைப் பற்றிய பல நூல்கள் வெளி வந்திருந்தாலும் தெளிவான சான்றுகளுடன் மிகுந்த முனைப்பாட்டுடனும், ஆராய்ச்சி பூர்வமாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் படிப்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 731.06KB, 144 p.
போபால் சம்பவம் சதியா அல்லது விபத்தா என்பது இன்னமும் புதிராகவே உள்ளது. விபத்தாக இல்லாமல் சதியாக இருந்தால் என்கிற கற்பனைக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த நாவல். திகில் நிறைந்த இந்த நாவலில் இழையோடி இருக்கும் தேசத்துரோக செயல்களும், சமூக அவலங்களும், பழுதடைந்து போன மனித எந்திரங்களின் கொலைபாதக செயல்பாடுகளும் நல்ல படிப்பினைகளை நெஞ்சில் நிலைபெறச் செய்கின்றன. நாவலில் பாத்திரங்களின் அறிமுகம் மிகவும் இயல்பாகவும் அதே நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 966.28KB, 188 p.
கானல் நீரில் நீந்தும் மீன்கள் மற்றும் ஒன்லி விவேக் என்று இரண்டு குறு நாவல்கள் இந்நூலில் உள்ளதுன. காதலர்களான விஷ்வா, அஜந்தா பெற்றோரின் அனுமதியுடன் விரைவில் திருமணம் செய்யவிருக்கின்றனர். மும்பையிலிருந்து விஷ்வாவின் தோழி ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி விஷ்வா-அஜந்தா திருமணத்தை அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடச் சொல்கிறாள். எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஹரிதாவின் நிலை கவலைக்கிடமாகிறது. ஹரிதா சொன்ன நியூமராலஜி காரணம் உண்மைதானா? அல்லது மறைந்திருக்கும் உண்மை வேறா போன்ற நம்முடைய கேள்விக்குகளுக்கு விடை கிடைக்கிறது கானல் நீரில் நீந்தும் மீன்கள் குறுநாவலில். பெண் விஞ்ஞானி சைந்தவியின் கண்டுபிடிப்பான ஹெல்லேனியா அணுகுண்டை ராஜஸ்தான் மாநிலத்தில் சோதனைக்கு எடுத்துச் செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகிறது. தீவிரவாதிகளின் கைகளில் சிக்கிடாமல் அணுகுண்டை மீட்கச் செல்லும் விஞ்ஞானி சைந்தவி, விவேக் மற்றும் விஷ்ணு நிலை என்ன என்பதை சொல்கிறது 'ஒன்லி விவேக்' குறுநாவல்.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1.03MB, 158 p.
பரம்பரை பரம்பரையாக வாசித்துப் பழகிய குடும்பத்து உயர்சாதிப் பையன் ஒருவனும், படிப்பு அறிவு அதிகம் வாய்க்காத ஏழைப் பையன் ஒருவனும் நல்ல நண்பர்கள். கல்வி தனக்குக் கற்றுத் தருவதைக் காட்டிலும், வாழ்வனுபவத்தில், தன் பயன்படுத் தும் திறனால், ஆர்வத்தினால் சமூகமும் வாழ்க்கையும் அதிகம் கற்றுத் தர வல்லது என்பதை உயர்சாதி இளைஞன் உணர்வதே நாவலின் மையக்கரு. இந்த சமூக ஒழுங்குகளில் பிடிவாதமான பற்றும் நம்பிக்கையும் கொண்ட அடிமை மனோபாவ உயர்சாதிக் கதாநாயகன். இதை விலக்கி வாழ்க்கையின் உண்மை முகத்தை, தரிசனத்தைத் தேடி தனிமைப்பட்டு விலகிப் போகும் ஒடுக்கப்பட்ட சாதி நண்பன். இறுதியில் உயர்சாதிக்காரன் தனது கல்வி என்பது கட்டிக் கொடுத்த சோறே. , ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது, என உணர்வதாக உச்சம் பெறும் கதை. கதையின் நிகழ்ச்சிகள், பாத்திர வார்ப்புகள் என அனைத்தும் மிக வித்தியாசமாக அமைந்த நாவல்.
Author: ஷங்கரநாராயணன்
Publisher: | Audience: Adult | 897 KB, 148p.
ஓர் ஆணின் வாழ்வில் பெண்மைக்கும் பெண் வாழ்க்கையில் ஆணுக்கும் உள்ள பரஸ்பர உற்சாக பந்தத்தை அபார நகைச்சுவையுடன் முன்வைக்கிற எஸ். ஷங்கரநாராயணனின் முதல் நாவல் இது.வேலைக்குப் போகிற பெண்ணா எனத் தயங்கும் கதாநாயகனை முதுகுத்தண்டை நிமிர்த்துகிற மனைவி. அவளோடு ஏற்பட்ட பிணக்கையே இறுதியில் வெற்றிகரமாய்ச் சமாளிக்கும் அவன் என்பது கதை.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 524.27KB, 68 p.
அன்பே உருவான தாய்மையின் அடையாளம் பங்கஜம். ஆனால் அவள் ஒரு சபிக்கப்பட்ட தாயாகிப் போனாள். காரணம், விதவையாகி பெற்றோர் வீடு திரும்பிய அவளது நாத்தனாரின் அராஜக தாண்டவம். பங்கஜத்தின் குழந்தை ராஜாவைக் கொஞ்சக் கூட அனுமதிக்காமல் அவளிடமிருந்து மிரட்டிப் பறித்து வைப்பாள். காலம் செல்லச் செல்ல ராஜா வளர்ந்து பெரியவன் ஆனான். அத்தையுடனே ஒட்டி வாழ்ந்ததினால் தாய்ப்பாசம் அறியாப் பிள்ளையாகிப் போனான். ஒவ்வொரு நாளும் பரிதவிப்புடன் காத்திருக்கும் தாய் மேல் வெறுப்பு வரும் அளவிற்கு ராஜாவை மாற்றி விட்டிருந்தாள் அவனது அத்தை. அத்தையின் மகள் சுகுமாரியை மணந்தான் ராஜா. அவனது திருமணத்திற்குப் பிறகு மிகப்பெரும் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அது என்ன? பங்கஜத்தின் நிலை என்னவாயிற்று? மகனுடன் இணைந்தாளா? சுகுமாரி வாழ்க்கை என்னவானது? வாசகரைக் கட்டிப்போடும் கதை இது. மன எழுச்சிகளின் வீரியம் குன்றாமல் கதையை நகர்த்திச் செல்லும் பாணி அலாதியானது.
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 396 KB, 76p.
இது ஒரு புதினம். இந்த கதையில் வரும் நாயகி சுகன்யா மணமாகாமல் கர்ப்பமாக பழி ஞானாவின் (சாஸ்திரிகளின் உதவியாளன்)மேல் விழுகிறது. நாயர் மற்றும் செல்லியின் உதவியுடன் சுகன்யாவின் உண்மைக் காதலனுடன் அவளைச் சேர்த்து வைக்க முயலும் ஞானா சந்தித்த சோதனைகள் என்ன, அவன் வெற்றி பெற்றானா என்பதற்கான விடைகள் நாவலில்.
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 697.31 KB, 84 p.
பரந்துபட்ட ஒளிக்கதிர்கள் பல திசைகளிலிருந்தும் புறப்பட்டு ஒரு புள்ளியில் குவிகின்றன. குவி ஆடி வழியாக குவிக்கப்பட்ட வெப்பம் ஒரு தாளையே எரிக்கவல்லது. குவியம் ஒரு மனதின் படிமமாக எடுத்துக் கொண்டால், இந்நாவலில் அவள் எல்லாவிதமான வெப்பங்களையும் குளிர்ச்சியையும் ஏற்றுக் கொள்ளும் ஊடகமாக மாறி, மாறுபட்ட வெவ்வேறு தரப்புகளையும் சமாளிக்கிறாள். ஆனால், அவள் பெறுவதுதான் என்ன? அனுபவங்களின் பதிவுகளைத் தவிர வேறொன்றுமே இல்லை. குவியமாகச் செயல்படும் சுவாதிக்கும் அதே நிலைதான். உறவுகளில் குவியமாக செயல்படும் மனிதர்கள் இருப்பதைப் போலவே சமூகத்திலும் குவியமாக செயல்படும் சில குட்டிச் சமூகங்களும் உண்டு. சுவாதியின் கதையா, இல்லை மோகனின் கதையா? இருவரது கதையுமேதான். நேர்க்கோட்டுத் தன்மையில்லாத் தன்மையில் அமைந்த இப்புதினம் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
Author: ரஜினி பேத்துறாஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 614KB, 55 p.
ஒரு நேர்மையான அரசியல்வாதி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தியாகசீலர் என்றெல்லாம் பெயர் பெற்ற சிறந்த தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூல். குழந்தைகளுக்கு நல் வழிகாட்டியுமாகவும் அமைந்துள்ளது.
Author: எஸ். ஷங்கர நாராயாணன்
Publisher: | Audience: Adult | 711 KB, 52p.
இது எஸ். ஷங்கர நாராயணனின் முதல் கவிதை தொகுப்பு.
Author: சம்ரட்சணா டிரஸ்ட்
Publisher: | Audience: Adult | 1413 KB, 134p.
Author: புகாரி
Publisher: | Audience: Adult | 730 KB, 64p.
இது காதலை மையமாக வைத்து புணையப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.
Author: ஜம்புநாதன், டி. எஸ்.
Publisher: | Audience: Adult | 5583 KB, 98p.
கட்டுரைகள், முதுமொழிகள், நிகழ்வுகள் ஆகியவற்றைத் தொகுத்துள்ள நூல் இது.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1376KB, 223 p.
நகரில் இருந்து வாழ்ந்து பழகிய இளைஞன், கிராமத்துச் சூழ்நிலையை அறிய வந்து, காணும் அனுபவங்களைச் சொல்வதான நாவல் இது. இந்நூலுக்கு முகவுரை தரமுன் வந்த பிரபல எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் அவர்கள், 'மானுடக் குழந்தையை மடியில் இறுக்கி மருந்து புகட்டுகிறார் ம.ந.ரா, சவுக்கடி சித்தர்' என்று கூறியுள்ளார்.
Author: உஷாதீபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 798.78KB, 122 p.
சிறு சிறு சொற்களில் ஆழமான ஆளுமைப் பண்புமிக்க மாந்தர்களைப் படைத்து சமூக குடும்பப் பிரச்னைகளைப் பளிச்செனக் காட்டுவதுடன் மனித நேய அடிப்படையில் தீர்வுகளையும் தந்துள்ள நல்ல வடிவச் செம்மையும் கலைத்திறனும் உடைய கதைகள் இவை. நல்ல கனமான பாத்திரப்படைப்பு, ஆளுமைத் திறனும், உயர் பண்பும் உடைய மாந்தர் படைப்பு மிக இயல்பாக வெளிப்பட்டுள்ள தமிழ் கூறு நல்லுலகம் வரவேற்கத்தக்க தொகுப்பு.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 375.67KB, 31 p.
மீராவும், வித்யாவும் சகோதரிகள். கமலாம்பாள் அவர்களின் தாய். தந்தை கோவிந்தராஜனுக்கோ இது மற்றுமொரு குடும்பம்! ஊரறிய வாழ நினைக்காத தந்தையைப் பிள்ளைகள் வெறுக்கிறார்கள். மீரா மேற்படிப்புப் படிக்க எண்ணி வெளியேற நினைக்க தந்தை தடுக்கிறார். ஆனால் மீரா காணாமல் போய்விடுகிறாள். தங்கையை எண்ணி வருத்தமுறும் வித்யா பிடிவாதமாய் மேற்படிப்பில் இணைகிறாள்; பரசுவைக் காதலிக்கவும் ஆரம்பிக்கிறாள். ஒருநாள் மீரா ஊருக்குத் திரும்புவதாய் தகவல் வர, ஆசையுடன் இவர்கள் காத்திருக்க, மீரா விபத்தில் சிக்கிய தகவல் வருகிறது. ஒரு குழந்தையுடன் மீராவின் கணவன் ஊருக்கு வருகிறான். அவனையே வித்யாவிற்கு மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறாள் தாய். இது வித்யாவிற்கு அதிர்ச்சியைத் தருகிறது. வித்யாவின் திருமண ஏற்பாடுகளை அறிந்த பரசுவிற்கு மனநிலை தவறுகிறது. பரசுவின் வாழ்க்கை என்னவாயிற்று? வித்யாவிற்கு திருமணம் நடந்ததா? மீராவின் குழந்தையும் கணவனும் என்ன ஆனார்கள்? என்பதை சுவாரசிய திருப்பங்களுடன் சொல்லும் கதை, இறுதியில் கண்ணீருடன் முடிக்கிறது. (சுஜாதா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற குறுநாவல்)
Author: களந்தை பீர் முகம்மது
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 937.32KB, 102 p.
இஸ்லாமிய வாழ்வின் பலமுனைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் பண்பாட்டுக் கூறுகளின் சில அபூர்வமான சேர்க்கைகளின் தொகுப்பு. அன்பின் நிரந்தரச் சுவையை ருசிக்கும்போது எல்லா எல்லைகளும் தம்மை மேலும் விரித்துக் கொள்கின்றன. மனிதர்கள் அணிந்து கொண்ட போலி முகங்கள் கழன்று விடுவதற்கு ஒரு சிறிய மன அதிர்வே போதும். சிறுபொழுது துன்பங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் உவகையே நம்முடைய நிரந்தரப் பலங்களாகிவிடுகின்றன. மானுடம் நம் சுவாசத்தில் நிரந்தரமாய் மணக்கின்றது. காலம், வெளி என்பன மனிதப் பண்பாட்டின் செழுமைக்குத் தடையில்லாத நீரூற்றை அளிக்கின்றன. இந்த வகையில் மானுடம் தன்னை ரகசியமாகவும் வைத்துக் கொள்கின்றது; அதே சமயம் வெளிப்படையாகவும் உரையாடுகின்றது. அந்தத் தருணங்களைப் படம்பிடித்துக் கொண்ட படைப்புகள் இவை.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 476.79KB, 82 p.
'க்ரைம்'க்கு உரிய நிறம் சிவப்பு. காதலுக்குரிய சின்னம் தாஜ்மஹால். இரண்டையும் இணைத்து 50% க்ரைம் மற்றும் 50% காதலுமாக உருவாக்கப்பட்டது 'சிவப்பு தாஜ்மஹால்'. பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் யமுனா நதிக்கரையோரம் தன்னுடைய காதலன் நிகிலுடன் நித்யா நடந்து கொண்டிருக்கிறாள். அப்போது திடீரென தாஜ்மஹால் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறுவது நித்யாவின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. பலமுறை தொடர்ந்து வரும் இந்தக் கனவினால் பாதிக்கப்படும் நித்யா, நிகிலனின் துணையுடன் சைக்கியாட்ரிஸ்ட் சந்திரமௌலியின் உதவியை நாடுகிறாள். ஒரே கனவு திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட மாறாமல் ஒருவருக்கு வருவது ஒரு பர்சண்ட்கூட சாத்தியமில்லாததால், சிவப்பு தாஜ்மஹாலின் காரணம் பற்றி ஆராய முயலுகிறார் சந்திரமௌலி. விஞ்ஞான சங்கதிகளை கம்ப்யூட்டர் வல்லுநர்களின் உதவியுடன் மிகவும் சிரத்தையுடன் ஆசிரியர் இந்நாவல் வடிவமைத்துள்ளார்.
Author: ச.நாகராஜன்
Publisher: | Audience: Adult | 550 KB, 93p.
ஹிந்துப் புராணங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு கதைகளை இந்த நூலில் காணலாம். திட உறுதிக்கு உதாரணமான துருவன், பக்திக்கு உதாரணமான பிரகலாதன், விடா முயற்சிக்கு உதாரணமான பகீரதன், வாழ்க்கையை வாழ வேண்டிய முறையில் வாழ கீதை மூலம் பாதை வகுத்துத் தந்த அவதாரபுருஷன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கியோரின் சரிதங்களை புராணத்தின் மூலத்தில் உள்ள சரித்திரம் வழுவாமல் சுவையான தமிழ் நடையில் இந்த நூலில் படிக்கலாம்.
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 714 KB, 55p.
இது ஒரு மர்ம நாவல்.
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Children | 576KB, 47 p.
தாய்மையின் பாசத்துடன் குழந்தைகளுக்காக எழுந்த அன்புத் தாலாட்டுதான் இந்த சின்னஞ்சிறு கிளியே! சின்னஞ்சிறு கதைகள் கூறி சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லித்தர வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ண வெளிப்பாடுதான் இக்கதைகள். கல்வி அறிவோடு வாழ்வில் நன்மைகளை நாடவும், தீமைகளை விலக்கி வைக்கவும் ஏதுவான சிந்தனைகளை இந்நூல் தூண்டுகிறது. அத்தனை கதைகளையும் தங்கள் சிறார்களுக்கு வாசித்துக் காட்ட பெற்றோர் அவசியம் வாங்க வேண்டிய நூல் இந்நூல்.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 370.92KB, 34 p.
தாமிரபரணி நதிக்கரையோரம் நிகழ்கிறது இக்கதை. பானுவுக்கு மூன்று சகோதரிகள். ஒழுக்கமில்லாத தந்தையும் நோய்வாய்ப்பட்ட அன்னையும் பானு ஒற்றை ஆளாய் குடும்பத்தைத் தாங்கக் காரணமானார்கள். அவளைக் காதலிக்கும் நாகுவுடன், சில நிபந்தனைகளுடன் பானுவின் திருமணமும் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பின்பும் அவள் தன் குடும்பப் பொறுப்புகளை அதீதமாய் சுமப்பதில் வெறுத்துப் போய் நாகு அவளை விட்டுச் செல்கிறார். பானுவின் தங்கைகளுக்குத் திருமணம் நடந்ததும் பானுவை ஊதாசினப்படுத்தத் தொடங்குகின்றனர். பானு மனம் மாறி நாகுவைத் தேடிச் செல்கிறாள் கைக்குழந்தையுடன் அங்கு அவள் கண்ட காட்சி அவளை திகைப்பில் ஆழ்த்தியது. நாகு அவளை ஏற்றுக்கொண்டானா? இல்லையா? என்பதை திடுக்கிடும் திருப்பங்களுடன் கதை சொல்கிறது. மனித உறவுகளின் உன்னதத்தையும், அதில் ஊடாடும் சிக்கலான தன்மையையும் அப்பட்டமாய் அறைந்து சொல்கிறது இக்கதை.
Author: வசந்தி சுப்பிரமணியன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 908.92KB, 35 p. : col. ill.
உணவு வகை நூல்களுக்கு என்றுமே ஓரு தனி வரவேற்பு உண்டு. விதவிதமான டிபன் வகைகளை எளிதாகச் செய்ய உதவுகிறது இந்த நூல். பலவிதமான பதார்த்தங்களை சுவையாகவும், மலிவாகவும் செய்ய விரும்பும் இல்லத்தரசிகளுக்கு இந்த நூல் நல்ல தோழியாக உதவியாக இருக்கும். திருவாதிரைக் கூட்டு, வெந்தய இட்லி, பான்லி மாவு, இட்லி மாவு போண்டா, மோர் களி போன்ற பல வித்தியாசமான உணவு செயல்முறைகளை அடக்கியிள்ளது இந்த நூல்.
Author: களந்தை பீர் முகம்மது
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 650.65 KB, 122 p.
முத்துக்கள் மீது தூசு படியலாம், கரித்துகள்களும் ஒட்டிக் கொள்ளலாம்! ஆனால் ஒளிரும் முத்து அதைப்பற்றிக் கவலை கொள்ளாது; தன் ஒளியையும் சுருட்டிக் கொள்ளாது; இவற்றின் மறைப்புகளால் அதன் மதிப்பும் குறையாது. ஆனால் எல்லாம் அதனதன் போக்கில் தொடர்ந்து செயல்படவே செய்கின்றன. வாழ்க்கையின் சூட்சுமம் இப்படித்தான் இருக்கின்றது. நம்மிடையே எதிரிகள் தோன்றுவதும், நண்பர்கள் தோன்றுவதும் சகஜமானபடியே உள்ளன. எல்லாமே ஒரு வட்டத்திற்குள் அடங்குகின்றன; சுழல்கின்றன. வாழ்க்கை என்பது அற்புதமானது என்று உணர மறுப்பவர்களும், உணர்ந்து கொண்டவர்களும் மோதியபடியே இருக்கிறார்கள். வெற்றியானாலும் தோல்வியானாலும் விட்டுக்கொடுக்காமல் போராடுவதில் சுகம் இருக்கின்றது, அறமும் இருக்கின்ரறது. அதற்குமுன் வாழ்வின் முன்னே படிந்திருக்கின்ற கசடுகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அவற்றை சதா எதிர்கொண்டபடியே நமக்குள் வாழும் மனிதர்களின் கதைகள் இவை!