Showing 151 - 200 of 220
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 854KB, 101 p.
நவீன அறிவியலும் விளக்க முடியாத பல விஷயங்களுள் பறக்கும் தட்டும் ஒன்று. அமெரிக்காவில் பல லட்சம் டாலர் செலவழித்து பறக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ப்ராஜக்ட் ப்ளூ புக் என்று பெயரிடப்பட்ட ஆய்வின் முழு விவரங்கள், பறக்கும் தட்டுகளைப் பார்த்தோர், அயல் கிரகவாசிகளுடன் பேசியோர், அவர்களால் கொண்டு செல்லப்பட்டோர் என்று ஏராளமான சம்பவங்களை விளக்கும் அரிய நூல்! 29 அத்தியாயங்களில் பறக்கும் தட்டுகளின் மர்மம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கலைமகள் ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் தனது முன்னுரையில், நூலாசிரியரின் “பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும்
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 869KB, 115 p.
சிலருக்கு இரத்ததானம் ஒரு சாதாரண விஷயம். இன்னும் சிலருக்கு இதுவே மிகப் பெரிய விஷயம்.உன்னதமான இந்த இரத்ததானத்தின் போது முறையான வழிமுறைகள் கடைபிடிக்கப்பாடாது போவதால்ஒரு மனிதனுடைய வாழ்வில் ஏற்படும் விபரீதங்களை விவரிக்கிறது 'பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்' குறுநாவல். 'செல்வகிருஷ்ணன் காயமடைந்து ஹாஸ்பிட்டலில் இருப்பது விபத்தல்ல' என்று ஓர் அனாமதேய அழைப்பு வந்ததும் போலீஸ் நடந்தது விபத்தா, கொலையா என்று தங்களுடைய விசாரனையைத் தொடங்குகின்றனர். தொடர்ச்சியாக ஏற்படும் கொலைகளுக்கான காரணம் 'சென்ற இடமெல்லாம் இறப்பு' குறுநாவலில் விவரிக்கப்பட்டுள்ளது.
Author: மதுமிதா
Publisher: | Audience: Adult | 587 KB, 116p.
பன்முகத்தன்மை வாய்ந்த கவிதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றது.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 621KB, 108 p.
பொதுவான, பலதரப்பட்ட, வாழ்க்கை சார்ந்த சமாச்சாரங்களைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு.
Author: வேங்கட ரமணி, டி.எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 621.39KB, 41 p.
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, ” இவற்றினையுடைய காவியம் ஒன்று தந்து தாய்மொழிக்குப் புத்துயிர் தர விழைந்த பாரதியின் உணர்ச்சிக் காவியம்தான் பாஞ்சாலி சபதம். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லாருக்கும் பொருள் நன்கு விளங்க வேண்டும். அதே நேரத்தில் காவியத்துக்குள்ள நயங்கள் குறையக் கூடாது. இந்த வேட்கையுடன் ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக இந்தக் காவியத்தை இயற்றியுள்ளதாக பாரதி சொல்கிறான். பாஞ்சாலி சபதத்தை ”கள்ளையும் தீயையும் சேர்த்துக் காற்றையும் வான வெளியையும் சேர்த்து” பாரதி ஆக்கிய தீஞ்சுவைக் காவியம் என்று திண்ணமாகச் சொல்லலாம். அவனது தலை சிறந்த காவியம் என்று இதைச் சொல்ல முடியும். கவிச் சுவை “நனி சொட்டச் சொட்ட”க் கிடைக்கிறது. பாரதியின் மூச்சுக் காற்றான பாரத தேசத்துப் பற்று காவியம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. பண்டைய நிலையைச் சொல்லிப் பரவசமும், இன்றைய நிலையை எண்ணி ஏக்கமும் நெஞ்சு பொறுக்காத கோபமும் வெளிப்படுகின்றன. தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் “த்சொ,த்சொ,” சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது. இவர்களே தேவலை, தவறு என்று தெரிந்தும் அதை நியாயப் படுத்தச் சக்கரவட்டமாகப் பேசுகிற அறிவு ஜீவிகளை மோதி மிதித்து விட வேண்டும் போல் அவனுக்கு ஏற்படுகிற ஆக்ரோஷம் நம்மைத் தாக்குகிறது. அரச நீதி, ஜனநாயக நெறி, செல்வந்தர்களின் கடமை, பொறாமையும் காமமும் இட்டுச் செல்லும் அழிவுப்பாதை போன்ற நன்னெறிகளும் இந்தக் காவியத்தில் பாரதி வாயிலாக வெளிப் படுகின்றன. இத்தனை சிறப்புகளையும் பாரதியின் கவிதை வரிகளுடன், சிந்தனை தோய்ந்த விளக்க உரைகளுடன் படிக்கும் மனங்களில் தேனூற எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
Author: உஷாதீபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 798.68KB, 83 p.
நேசமும் நிதானப் பார்வையும். பலவீனங்களோடும், பலங்களோடும் இருப்பவர்கள்தான் மனிதர்கள். வியத்தலும் இலமே. இகழ்தல் அதனினும் இலமே என்று ஒவ்வொன்றையும் நிதானத்தோடு நோக்க வேண்டுமென்ற உணர்வுகளை வாசக நெஞ்சங்களில் துளிர்க்க வைக்கும் தொகுப்பு.
Author: ஷங்கரநாராயணன்
Publisher: | Audience: Adult | 654 KB, 74p.
நீர் நிலம் நெருப்பு காற்று காயம் - எனப் பஞ்சபூதங்களையும் பின்புலமாக்கி ஷங்கரநாராயணன் புனைந்த கதை இது. பூதங்களின் ஸ்ரூபத்தை விஸ்தரிக்கும் விவரப் படுத்தும் பெரு முயற்சி.
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 499KB, 79 p.
பிரமிடின் அபூர்வ சக்திகள் ஏராளம். அதன் மர்மங்களை விளக்கும் கட்டுரை உள்ளிட்ட 29 கட்டுரைகளை இந்த நூலில் காணலாம். உறைபனி சடலங்கள், நடமாடும் பிணம், ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மனித ரத்தத்தில் நிஜமாகவே குளித்த மகராணி, ஜெயிலுக்கு வந்த பேய் என்று பல்வேறு அதிசய சம்பவங்களை விளக்குகிறது இந்த நூல். டெலிபதி மனிதர், அயல்கிரகக் கடத்தல் என்று அயல் கிரகவாசிகள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இந்த நூலில் படிக்க முடியும்.
Author: களந்தை பீர்முகம்மது
Publisher: | Audience: Adult | 763 KB, 112p.
இஸ்லாமிய மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை நம் கண் முன்னே கொண்டு வருகிறது இந்நூல்.வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக விளக்கி இச்சிறுகதைகளின் இலக்கியத்தரத்தை வெகுவாய் உயர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: | Audience: Adult | 987 KB, 93p.
இது ஒரு பதினாரு சிறுகதைகளின் தொகுப்பு.சிங்கப்பூரின் சின்னச் சின்ன நிகழ்வுகளை, அதன் நெகிழ்வுகளைத் தொட்டுச் செல்லும் சிறுகதைகள் இவை.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 776KB, 148 p.
நயவஞ்சகத்தை மட்டுமே மூலதனமாக வைத்திருக்கும் இந்த உலகத்தில் வாழ்ந்த நிருபமாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை க்ரைம் கலந்து 'புதிய பூ பூத்தது' குறுநாவலில் தன்னுடைய பாணியில் கதையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மனித மனம் ஒரு ஆழ்கடல். அதற்குள் சில சுனாமி எண்ணங்கள் தூக்கக் கலக்கத்தில் வந்து கொண்டிருக்கும். அந்த எண்ணங்கள் தூக்கத்திலிருந்து விடுபட முயற்சித்தால் ஏற்படும் விளைவுகளை அடித்தளமாகக் கொண்டு 'வெல்வெட் யுத்தம்’ குறுநாவல் உருவாக்கப்பட்டுள்ளது. சிலருக்கு இரத்ததானம் ஒரு சாதாரண விஷயம். இன்னும் சிலருக்கு இதுவே மிகப் பெரிய விஷயம்.
Author: Vijaya Raghavan
Publisher: | Audience: Adult | 1586 KB, 109p.
இந்த புத்தகம் பிரபல விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கணித மேதைகளுடைய அறிய படைப்புகளைப் பற்றி ஆராய்கிறது.
Author: உஷாதீபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 620.58KB, 63 p.
புயலுக்குப்பின்னே அமைதி, மூலக்கரு, இவன் ஆகிய மூன்று குறுநாவல்களை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்னைகளையும், சிக்கல்களையும், கடைசி வரை உணர முடியாத கருவினையும் உள்ளடக்கிய படைப்புக்கள்
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 469.12KB, 76 p.
ஹிந்து மதத்தின் இணையில்லாத 18 புராணங்களில் வாழ்க்கைக்குத் தேவையான ஆயிரக்கணக்கான அற்புத ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஆன்மீக முன்னேற்றத்திற்கான தகவல் களஞ்சியமாக புராணங்கள் இலங்குகின்றன. சமஸ்கிருதத்தில் சுமார் நான்கு லட்சம் சுலோகங்களில் உள்ள புராணங்களை முற்றிலுமாகப் படிப்பது எளிதல்ல! இவற்றிலிருந்து மிக முக்கியமான சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் சிறு நூல் வடிவில் தந்துள்ளார்.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 715.08KB, 140 p.
கிராமத்தில் இருந்து வேலை தேடி நகரம் புகும் இளைஞன் எங்ஙனம் நகர வாழ்க்கையோடு ஒத்திசைய முடியாமல் தடுமாறுகிறான். பிறகு அதற்குப் பழகிக்கொண்டு தானும் வேகமெடுக்கிறான் என்பதை ஓர் இளைஞனின் பார்வையாக சுவாரலஸ்யமாக விவரித்துச் செல்கிறது நாவல். முதல் இரண்டு நாவல்களையும் கிராமத்து வியூங்களுடன் அமைத்துக் கொண்டிருந்த ஷங்கரநாராயணன் இந்நாவலில் பட்டணத்தின் சாயல்களை அடையாளம் கொண்டுவருகிறார். கிராமத்து இளைஞனுக்கும் பட்டணத்து இளைஞனுக்குமான மாறுபாடுகளை இத்தனை தெளிவாக அவர் விளக்கி வரைவது அழகு. தனித் தனி வீடுகள் என்கிற கிராமத்து பாரம்பரியத்தில் இருந்து அடுக்கு வீடுகளான அமைப்பு, அடுக்குப் படுக்கைகளில் (பெர்த்) உறங்குதல் போன்ற புதிய வாழ்க்கை முறைகளை கிராமத்து இளைஞன் சந்திக்கிறான். இந்தே வேகமான வாழ்க்கையைக் கண்டு முதலில் திகைத்தாலும், ஓடும் பஸ்சில் தொற்றியேரும் சனத்தோடு அவனனும் கலந்துவிடுகிறான். ஷங்கரநாராயணன் நாவலாக எழுதும் ஒரு சிறு கவிதை – மொட்டை மாடியில கரையும் காகம் எந்த ஃபிளாட் விருந்தாளிக்காக?
Author: நட்சத்ரன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 3.26MB, 69 p. : ill., some col.
இது நட்சத்ரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஒருவித பூடகத் தன்மையுடன், தொலைவுகாணா வெட்டவெளியிலிருந்து வரும் சூட்சும அதிர்வுகளை வார்த்தைகளூடாய் வெளிப்படுத்த முயலும் நட்சத்ரனின் கவிதைகள் தன் உள்முக ஆன்மீக அனுபவங்களை, வார்த்தைகளின் மூலம் அனுபூதி நிலைக்கு கொண்டுவர யத்தனிப்பவை. இவரது கவிதைகள் வாசகர்களின் இதயங்களில் ஏதோவொரு விவரிக்க இயலாத ஆன்ம அனுபவத்தைக் கொண்டுவர முயல்கின்றன. வார்த்தைகளைக் கடந்து தம் சிறகுகளை எல்லையற்ற பெருவெளியில் ஆனந்தமாய் விரிக்க முயலும் நட்சத்ரனின் இந்தக் கவிதைகள் வாசகர்களின் இதயங்களில் ஆழமாக இடம்பிடிக்க வல்லவை.
Author: பீ.நடராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Children | 458KB, 58 p.
பாட்டி குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பு நீதியினைக் குறிக்கும் கதைகளைச் சொல்கிறாள். குழந்தைகள் அன்றைய நீதியைப் புரிந்து கொள்கின்றனர். புவனா, சந்தர் இரு குழந்தைகளும் பாட்டியிடம் கதையின் போக்கில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான படிப்பினையினை இயல்பாக அளிக்கின்றன. கதைகள் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிதான வார்த்தைப் பிரயோகத்தால் பின்னப்பட்டுள்ளன. குழந்தைகளின் புத்தி சாதுர்யத்தை வளர்க்கும் விதமான இக்கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. பெரியவர்களுக்கும் படிப்பினைதான்.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 954KB, 176 p.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய உபகண்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அன்றைய குருகுல வாசம் பற்றிய வரலாற்று நாவல். இன்றைக்கும் தொடர்ந்து சமூகத் தாக்கம் இருந்து வரும் செயல்பாடுகள் குறித்துத் தெரிவிப்பதான கதை. 'மந்த்ர புஷ்பம்' என்பது வேதத்தில் உள்ள அழகிய சமஸ்கிருதக் கவிதை.
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: | Audience: Adult | 421 KB, 68p.
நூலாசிரியர் ஆன்மீகத்தைப் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Children | 830KB, 96 p.
பாட்டி குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பு நீதியினைக் குறிக்கும் கதைகளைச் சொல்கிறாள். குழந்தைகள் அன்றைய நீதியைப் புரிந்து கொள்கின்றனர். புவனா, சந்தர் இரு குழந்தைகளும் பாட்டியிடம் கதையின் போக்கில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான படிப்பினையினை இயல்பாக அளிக்கின்றன. கதைகள் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிதான வார்தைப் பிரயோகத்தால் பின்னப்பட்டுள்ளன. கதைகளினிடையே பாடல்களும் அமைந்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. இப்படிப்பட்ட பாட்டிகள் அரிதான இன்றைய சூழலில் இது போன்ற கதைகள் அவசியம் தேவை. பேராசை கூடாது, பொய் கூறக்கூடாது, இரவல் வாங்கக் கூடாது போன்ற தேவையான நீதிகளைக் கதையின் போக்கில் சொல்கையில் இடையிடையே கேள்விகள் கேட்டு குழந்தைகளுக்கும் நமக்கும் கதை கேட்கும் ஆர்வத்தை வளர்த்து விடுகிறார் பாட்டி. குழந்தைகளும் கதையின் போக்கினைச் சரியாகப் புரிந்துகொண்டு சமர்த்தாக நடந்து கொள்கின்றன. பாட்டி சொல்லும் கதைகளும் இன்றைய குழந்தைகளின் மனநிலைத் தேவைக்கேற்ப அமைந்துள்ளன. அறிவுரை என்று தோன்றாத அளவில் நாமும் சேர்ந்து கதைகேட்கும் அனுபவமாகவே நடை இழுத்துச் செல்கிறது கதையுலகுக்குள். பாட்டியின் பத்து கதைகள் அடங்கியிள்ள 'மயில் போல' குழந்தைகளுக்கான கதைகள் மட்டுமல்ல. பெரியவர்களுக்கான படிப்பினையும்கூட.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 604KB, 73 p.
தசரதன் ரயிலில் மும்பைக்குப் பயணித்துக் கொண்டிருக்கிறான். ஒரு புதுமண ஜோடி அவசரமாக ரயிலில் ஏற, அழகிய அந்தப் பெண்ணை தசரதன் வியப்புடன் பார்க்கிறான். அவர்களுக்குள்ளான நெருக்கம் அவனை தடுமாறச் செய்கிறது. இரண்டு நாட்கள் பயணத்தை எப்படி முடிப்பது எனத் திணறுகிறான். அன்று நடுநிசியில் இவன் படுத்திருக்கும்போது அப்பெண் அழுதபடி நிற்கிறாள். தான் காதலனுடன் ஓடி வந்ததாகவும் அவன் இவள் நகைகளைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகவும் அழுதபடி கூறுகிறாள். தசரதன் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று காதலனைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறுகிறான். அங்கு அவள் அந்த இடத்தின் தேவதையாக வலம் வருகிறாள். தசரதன் காதலனைக் கண்டுபிடித்தானா? உண்மையில் என்ன ஆயிற்று? மெல்லிய வருடலுடன் பயணிக்கிறது கதை.
Author: மதுமிதா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 1.15MB, 190 p.
மரங்கள் அளிக்கும் பௌதீக பலன்களை அனுபவிப்பது ஒருபக்கம் இருக்க நமது வாழ்க்கையில் அதனுடன் இணைந்து வாழ்ந்த பல அனுபவ நினைவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தங்கள் அடிச்சுவடுகளைப் பதித்துவிடுகின்றன. மனதில் நினைவலைகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பதிவாக்கும் விருப்பமாக பூத்திருக்கிறது இப்புத்தகம். சற்றே பின்னோக்கிப் பயணித்து நினைவுகூர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இவற்றில் நாம் இழந்த தொன்மங்கள் நம்மை நோக்கி கைகொட்டி சிரிக்கின்றன. நாம் வாழ்ந்த காலந்தோறும் இழந்துகொண்டே வந்த வாழ்க்கை முறையினைப் பார்க்க முடிகின்றது. மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மரம் சார்ந்த நினைவுகளை முன்னிறுத்தியும் பல படைப்பாளிகளின் எண்ணங்களின் வண்ணங்கள் நினைவுகளாகவும் புனைவுகளாகவும் சிரத்தையுடன் தொகுக்கப்பட்டுள்ளன. 29 படைப்பாளிகளின் கட்டுரைகள் இத்தொகுப்பில் மரமாய் செழித்து வளர்ந்திருக்கின்றன.
Author: நிலா
Publisher: | Audience: Children | 657 KB, 43p.
இந்நூலில் சிறுவர்களுக்கான நான்கு கதைகள் இடம்பெற்றுள்ளன.
Author: உஷாதீபன்
Publisher: | Audience: Adult | 768.06KB, 79 p.
மழைக்கால மேகங்கள் மற்றும் ஊடலாகி, உருகி, பின் கூடி…என்ற உள்ளார்ந்த பொருள் தரும் காதல் மனதைப் பறைசாற்றும் படைப்புக்கள்
Author: விஜயராகவன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 491.25KB, 75 p.
மனித உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும் இந்நூல் ஆசிரியரின் ‘மனித உடலியல்’ தொகுதியின் இரண்டாம் பாகம் ஆகும். உச்சி முதல் உள்ளங்கால் வரை அத்தனை வெளி, உட்புறப் பகுதிகளின் வேலைகளும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நிலை மாணவர்களுக்கும் புரியும் வகையில் கேள்வி பதில் வடிவில் எளிய தமிழில் எடுத்தாளப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
Author: ரிஷபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 847KB, 73 p.
"வாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே ('மனிதம்') மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப் பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.
Author: என். கணேசன்
Publisher: | Audience: Adult | 2721 KB, 328p.
இது ஒரு மர்ம நாவல்.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 523.75KB, 37 p.
கதை நேர்க்கோட்டில் செல்லாமல் அதிர வைக்கும் திருப்பங்களுடன் செல்கிறது. ஒவ்வொரு கதை மாந்தருக்கும் கனமான பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாகலஷ்மி, அவளது கணவர் ஆத்மா, ஆத்மாவின் தங்கை ஸ்வர்ணா, நாகலஷ்மியின் தங்கை பவானி, நாகு-ஆத்மா தம்பதியினரின் குழந்தை மோகன் – இவர்களிடையே கதை பயணிக்கிறது. சிக்கலான முடிச்சுகளுடன் செல்லும் இக்கதையில் அம்முடிச்சு அவிழும் ஒவ்வொரும் கணமும் வாசகரின் இதயத் துடிப்பை களவாடுகிறது. நாகு, பவானி, ஆத்மா, ஸ்வர்ணா, மோகன் இவர்களின் உறவுப் பிணைப்பையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும், அவர்களது முழு வாழ்க்கையின் வடிவில் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது கதை.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 976KB, 144 p.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்தும் குழுவினர் பற்றிய கதை 'மாதே ஸ்வதந்த்ர தேசம்...'. 2003ம் ஆண்டில் நூலாக வெளிவந்தது.
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 624 KB, 19p.
இந்த புதினம் சுவாரஸ்சியமானது.சந்துருவுக்குத் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியம்மா மீது பற்று.தன் மகனால் விரட்டியடிக்க்ப்பட்ட பெரியம்மா தான் வளர்த்த சந்துருவைத் தேடி வர, சந்துருவின் மனைவி லலிதா இதை விரும்பவில்லை! பெரியம்மா அந்த வீட்டு வேலைக் காரியாய் சமையல்காரியாய் உழைத்த போதும் லலிதா அவளின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடித்து ஏசுகிறாள். அதே வேதனையுடன் பெரியம்மா இறந்து போக, சந்துருவே எல்லாக் காரியங்களும் செய்கிறான். ஜோதிடர் பெரியம்மா பற்றிச் சொல்லும் செய்திகளும் அவளின் மறுபிறவி பற்றிய தகவல்களும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. லலிதாவும் சந்துருவும் மறுபிறவி எடுத்த பெரியம்மாவைத் தேடி கிளம்புகிறார்கள். அடுத்து நடந்ததென்ன என்பதைப் பற்றிய கதை இது.
Author: கோரி, ஏ.ஏ.ஹெச்.கே.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 1005,29KB, 115 p.
மனித உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து வாசித்துப் பார்க்கையில் கிடைக்கும் சுவை அலாதியானது. கோரியின் எழுத்துகளில் கிடைக்கும் அந்த சுவையே இத்தொகுதிக்கு தலைப்பாயும் அமைந்துள்ளது! உயிருடன் உலவும் மாந்தர்களும் அவர்தம் சுற்றுப்புறமுமே ஆசிரியரின் கதைக் களன்களாக உள்ளன. மிக இலகுவாய் செல்லும் கதைகளின் இறுதியில் ஒரு யதார்த்தமான உண்மை முகத்தில் அறைந்து ‘அட!’ போட வைக்கிறது. வடக்கு வாசல், கவிதை உறவு, யுக மாயினி உள்ளிட்ட பல இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன இச்சிறுகதைகள்.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 705.22KB, 46 p. : ill., some col.
நிலாச்சாரல் மின்னிதழில் வாராவாரம் வெளி வந்த கணித சம்பந்தமான தொடர் நூலாக மலர்ந்துள்ளது. மாயச் சதுரங்களின் வரலாறு, சிக்கலான மாயச் சதுரங்கள், அவற்றை அமைக்கும் வழிமுறைகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், கணித ஆர்வலர்களுக்கும், புதிர்களைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் ஏற்ற எளிய இனிய தமிழ் நூல்!
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 733.94KB, 70 p.
பாக்யா வார இதழில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. உலகில் விசித்திரமான மனிதர்கள், விசித்திரமான அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் நிகழ்வுகள், விசித்திர இடங்கள், சங்கங்கள், அபூர்வ நிகழ்வுகள், அற்புத புருஷர்கள் போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: 1) டியோடிஹூவாகாவின் சந்திர சூரிய பிரமிடுகள்! 2) 2012-ல் உலகப் பேரழிவு ஏற்படும்- எச்சரிக்கை தருகிறது பழைய நாகரிகம்! 3) செவ்வாயில் மனிதன் - ஒபாமாவின்கனவு! 4) அமேஸானை 4200 மைல் நடந்தே கடந்தவர்! 5) தவறான ஜோதிடத்தால் ஹிட்லரை வீழ்த்திய ஹிம்லர்! 6) மாஜிக் கலை ரகசியங்கள் அம்பலம்! 7) ஜேம்ஸ்பாண்டு, 007 ஆனது எப்படி?
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 702.95KB, 63 p.
பாக்யா வார இதழில் வந்த தொடரின் இரண்டாம் பாகம் நூல் வடிவில் வந்துள்ளது. உலகின் விசித்திரமான மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகளைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். மண்ணிலிருந்து விண்ணுலகம் வரையுள்ள விசித்திரங்களை விவரிக்கும் மாயாலோகம் இது. நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: 1) 200 நிமிடங்கள் அந்தரத்தில் நின்று சாதனை 2) ஐன்ஸ்டீன் மூளையின் அதிசயப் பயணம்! 3) ரத்தம் உறிஞ்சும் சுபாகாப்ரா! 4) கொட்டிக் கிடக்கும் தங்கக் கட்டிகள் 5) மூளையியல் விற்பனை! 6) சந்திரனை அடைய விண்வெளி தூக்கி
Author: எஸ்.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 740.64KB, 75 p.
பாக்யா வார இதழின் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ற மாயாலோகம் தொடரின் கடைசி பாகம் இது. ஆன்மிக அவதாரங்கள், மனிதர்களின் விசித்திர குணாதிசயங்கள், அதிசயமான பிரதேசங்கள், விண்வெளியின் வியப்பூட்டும் விந்தைகள் என பல சுவாரஸ்யங்களை விவரிக்கும் கட்டுரைகள் உள்ளன. நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: 1) செவ்வாய் பயணத்திற்கான அதிசய சோதனை! 2) பெல்மெல் முகங்கள்! 3) உலகின் அதிர்ஷ்டக்காரப் பெண்மணி 4) தூர திருஷ்டி நிஜமா? 5) மஹாவதாரம் பாபாஜி! 6) மரணப் பள்ளத்தாக்கு 7) பார்வையற்றவர் மலையேறி உலக சாதனை படைக்கும் அதிசயம்!
Author: நிலா
Publisher: | Audience: Adult | 918 KB, 45p.
இது பதினொன்று சிறுகதைகளின் தொகுப்பு.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 691.08KB, 157 p.
தனி மனித கதாபாத்திரங்களூடே ஒரு கிராமத்தின் வரலாறு போல விரிகிறது நாவல். தனி மனிதன் பல்வேறு கால கட்டங்களில் இயற்கைச் சூழலில் பெற்ற பாதிப்புகளை, அத்தோடு பெற்ற பலன்களை, பாடங்களை யெல்லாம் வாழ்க்கைச் சம்பவங்கள் போலத் கோர்த்துச் சொன்னாலும் வாசித்து முடிக்கையில் அது ஊரின் கதையாகவே மனதில் சித்திரப்படுகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியப் பயில் நூலாக, அங்கீகாரம் பெற்ற பாடநூலாக அமைந்தது.
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: | Audience: Children | 935 KB, 123p.
இத்தொகுப்பில் முப்பத்தி மூன்று சிறார்களுக்கான சீன கதைகள் இடம்பெற்றுள்ளன.
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: | Audience: Adult | 1003 KB, 93p.
இந்நூலில் மூன்று குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆவை வேண்டியது வேறில்லை, முடிவிலும் ஒன்று தொடரலாம், குயவன் ஆகும்.இக்கதைகள் சீனர்கள், தமிழர்கள், மலாய் மக்கள் என பல்வேறு இனத்தவர் கலந்து வாழும் சிங்கப்பூரின் வாசனையோடு அமைந்திருக்கின்றன.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1.03MB, 175 p.
எஸ். ஷங்கரநாராயணனின் எழுதிய முழு நீள 24 காரட் நகைச்சுவை நாவல் இது. ஒரு எளிய கார்ல டிரைவர் வாழ்க்கை போல கதை ஆற்றுப்படுகிறது. பட்டணத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி முதலாளி முதலாளியாய் மாறிக்கொண்டே இருக்கிற நிரந்தரம் அற்ற வாழ்க்கையில் ஊரில் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு தனியே தவிக்கும் அவலம் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சலிப்புத் தட்டாத அளவில் 30 அத்யாயியங்களுடன் வரை கடைசிப் பக்கம் வரை கீழே வைக்க முடியாத அளவு சிரிப்பும் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிரம்பிய நாவல் இது.
Author: Abirami Michael
Publisher: | Audience: Adult | 5854 KB, 71p.
கோலங்கள் பற்றிய அரிய தகவல்களை தருகிறது இந்நூல். கோலங்கள் ஒரு பாரம்பரை கலையாகும். ரங்கோலி என இதர கோலங்கள் பல வடிவங்களிலும் பற்பல வகைகளிலும், பலதரப்பட்ட திருவிழாக்களுக்கு உபயோகப்படும்.
Author: ஜ.ப.ர.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 968.27KB, 85 p.
இலக்கியம், இணையம், அறிவியல், திரை, ஆன்மீகம், கவிதைகள், நகைச்சுவை, இன்னும் எத்தனை எத்தனை துறைகளோ! தாங்கள் படித்து மகிழ்ந்த, கேட்டு ரசித்த, பார்த்து நெகிழ்ந்த அத்தனை அனுபவங்களையும் ஆழ்கடலில் மூழ்கி முத்துகளை எடுப்பது போல் சேகரித்து தந்திருக்கிறார்கள் ஜபர. பல புத்தகங்களைத் தேடி தேர்ந்து படிக்க வேண்டிய விஷயங்களை இந்த ஒரே தொகுப்பில் அவர்களின் நயமான நடையில் படித்து ரசிக்கலாம். தான் பெற்ற இன்பம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்த தொகுப்பு ஒரு நல்ல வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்பது உறுதி.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 408KB, 77 p.
மயூரி வரதனைத் தேடி உதவி கேட்டு வருகிறாள். கல்லூரி மாணவனான வரதன் இசை, நாடகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவன். அவனின் உதவியால் இவள் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு கிடைக்கிறது. நன்றி சொல்ல வந்தவள் வரதனைக் காணாமல் திகைக்கிறாள். கடன் தொல்லையால் வரதன் இடம் மாற, அதன் பின் ஒரு திருமண நிகழ்ச்சியில் பாட வந்த வரதன் மயூரியை மணப்பெண்ணாக சந்திக்கிறான். மயூரியின் மீதான தன் காதலை வரதன் சொல்லாமல் மறைக்கிறான். மயூரியின் கணவர் மேகநாதன் வரதனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை போட்டுத் தருகிறார். ஒருநாள் மயூரி இவன் இருப்பிடம் தேடி வந்து சில அதிர்ச்சியான செய்திகளைச் சொல்லுகிறாள். வரதனைக் காண மேகநாதனே அவன் வீட்டிற்கு வருகிறார். அவர் சொன்னது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வரதன் சிறை செல்ல நேரிடுகிறது. மயூரியைக் காணவில்லை. மேகநாதனுக்கு என்னாயிற்று? அடுத்தடுத்து நேரும் திருப்பங்கள் நாவலை வெகு சுவாரசியமாய் கொண்டு செல்கின்றன.
Author: சம்ரட்சண ட்ரஸ்ட்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 3365KB, 120 p.
"ரத்தினகிரி பாலமுருகனது ஆலய வரலாறு இது. பாலமுருகனடிமையின் தவ வரலாறு இது. 'ஞாயிறைச் சங்கிலியால் அளக்கலாமோ ஞானகுருவின் புகழை நாம் வகுக்கலாமோ?' என்றார் மகாகவி பாரதியார் . அளக்கக் கூடாதுதான். வகுக்க முடியாதுதான். ஆயினும் என் அன்பு என்னை எழுத வைக்கிறது. முருகன் தனிவேல் முனி அம் குரு! யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தார்! எனவே நாமேல் நடக்கிறேன்!
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 788.51KB, 126 p.
செய்யாதக் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அகஸ்டியன் உடல்நலமில்லாத தன்னுடைய அம்மாவைப் பார்க்க சிறையிலிருந்து சிறை காவலர்கள் உதவியுடன் தப்பிக்க முயலும்போது என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். நடந்த நிகழ்ச்சியின் பின்புலம் என்ன, உண்மையில் நடந்தது என்ன என்பதை மோனாலிசா அழுகை விவரிக்கிறது. நிரபராதியான தனக்கு உதவிடுமாறு 'தேர்ட் ஐ டிடக்டிவ்' ஏஜென்சியின் நரேன், கவிதாவை அணுகுகிறான் ப்ரீத்தி எக்விப்மெண்ட்ஸில் பணிபுரிந்த சத்யவந்தன். உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்கும் நரேன் மற்றும் கவிதா உண்மையைக் கண்டுபிடித்தார்களா என்பதை 'கண்ணுக்குள் ஒரு முள்' குறுநாவல் தெரிவிக்கிறது.
Author: மதுமிதா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 310KB, 75 p.
"பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. காதலின் வலியை, மகிழ்வை, பிரிவின் ஆற்றவியலா நெகிழ்வை சந்திப்பின் விளைவை என கவிதைகள் வாசிக்கையில் புது உணர்வினை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுகின்றன. இந்நூலில் உள்ள கவிதைகளை வாசிக்கையில் நாமும் மெளனமாகி விடுகிறோம். மெளனம் சிறந்த மொழி என்பார்கள். அதைப் பல இடங்களில் நிரூபிக்கின்றன இக்கவிதைகள். 'மெளனம் சொல்லாத சேதியையா மொழி சொல்லிவிடப் போகிறது?' என்னும் கவிதை இதன் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மனதில் ஊறும் அன்பினால் ஏற்படும் கலக்கங்களை ஆராவாரமில்லாமல் வெளிப்படுத்தி மனதில் நிலைத்துவிடுகின்றன இக்கவிதைகள் நம் சந்திப்பைத் தொடரை இயலுவதேயில்லை நீ ஒளிரும் சூரியக்கதிராய் நான் இரவின் பனித்துளியாய் அன்பிலும் பிரிவிலும் இயற்கையை இணைத்துத் தரும் இந்த ஒரு கவிதை - ஒரு சோற்றுப் பதம். இது போன்ற மெளனக் கவிதைகளை, உண்மையின் பதிவாக அன்பின் பதிவாக 84 கவிதைகளில் தாங்கி வருகிறது மெளனமாய் உன் முன்னே!
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 535KB, 34 p.
அகிலா தன் கணவன் மற்றும் வயது வந்த இரு பிள்ளைகளுடன் வசித்துவருகிறாள். ஆய்வுக்காக இந்தியா வந்த ஜெனி என்கிற அமெரிக்கப்பெண் இவர்கள் வீட்டில் இரண்டு மாதங்கள் தங்குகிறாள். அவளுக்கு இந்தியப் பாரம்பரியம், குடும்ப அமைப்பு, பண்பாடு என்று அனைத்தையும் கதை கதையாய் விவரிக்கிறாள் அகிலா. உல்லாச வாழ்க்கை, டேட்டிங், டைவர்ஸ் என்று தான் பார்த்துப் பழகிப் போன வாழ்க்கைக்கு மாறான வாழ்வியலை வியப்புடன் பார்க்கிறாள் ஜெனி. அகிலாவின் ஒன்றுவிட்ட சகோதரனும் நடுவே கலந்து கொள்ள, அகிலாவின் குடும்பம் ஜெனிக்கு மிகவும் பிடித்துப் போகிறது. ஆயினும் அகிலா தன் பிள்ளைகளை ஜெனியிடம் கவனமாகப் பழகுமாறு அறிவுறுத்துகிறாள். தினம் வெளியூர் போவதும், சிற்பக்கலைகளை ரசிப்பதும், கோயில்களுக்குச் செல்வதும், படம் பிடிப்பதுமாக பொழுது கழிகிறது. ஊருக்குக் கிளம்பும்முன் அகிலாவின் ரகசியம் ஒன்றை கூறவிருப்பதாகவும் ஊருக்குச் சென்றதும் கூறுவதாகவும் சொல்லிக் கிளம்புகிறாள் ஜெனி. அகிலா காத்திருக்கிறாள். ஜெனியிடமிருந்து பார்சல் ஒன்று வருகிறது. அதில் ஒரு கேசட் இருக்கிறது. கேசட் ஓட ஆரம்பிக்க, ஜெனியின் குரல் கேட்கத் துவங்குகிறது. அதில் ஏகப்பட்ட திடுக்கிடும் செய்திகள். குடும்பம், பண்பு, கலாசாரம் என்கிற அகிலாவின் உணர்வுகளுக்குத் தரப்பட்ட சவுக்கடிகள்; அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகளின் அசிங்கங்கள். ஜெனி அறிந்த அந்தக் கதைகளை அகிலா அறிந்தபோது திடுக்கிட்டாள். அவை என்ன உண்மைக் கதைகள்? நாவலின் முடிவில் தெரியும்!
Author: ரஜினி பேத்துறாஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 390KB, 47 p.
"பூமியின் பொறுமைக்கு வானத்தின் வாழ்த்துக்கள் மழை. போன்ற துளிப்பாக்களுடன் புதுக்கவிதை, மரபுக்கவிதை எல்லாமும் சேர்ந்த கவிதைத் தொகுப்பு நூல். திரு.நீல பத்மநாபன் மதிப்புரையுடன் வெளிவந்துள்ளது.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 495.15KB, 84 p.
யுத்தக் கதைகள் நிறைந்த இச்சிறுகதை நூல் கார்கில் போர்ப் பின்னணியில் எழுதப்பட்டது. போரில் இறந்துபோன பாகிஸ்தானிய வீரர்களின் உடல்களை பாகிஸ்தான் பெற்றுக்கொள்ள மறுத்தபோது, இந்திய ராணுவம் அவற்றை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த வரலாற்று உண்மைகளும் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டுப்பற்று உணர்வை எழுச்சியுடன் காட்டும் கதைகள் இவை : யுத்தம் என்பதே யுத்ததுக்கு முன்னும் பின்னும் யாரும் வசிக்காத எல்லைப் பிரதேசத்தைப் பிடிக்கிற போட்டியே என அவர் எழுதிக் காட்டும் கிண்டல் சிந்திக்கத்தக்கது
Author: ரிஷிகுமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 2.86MB, 140 p. : col. ill.
மனம் போன போக்கில் பல விஷயங்களைத் தொட்டு, அனுபவங்களை, ரசித்தவைகளை ஜாலியாகவும் உற்சாகமாகவும் மனசு விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்? ரிஷி ராக்ஸ் அப்படி இருக்கும். தனியொருவரின் சுய புராணங்கள், நட்பு வட்டாரங்கள், உறவுப் பாலங்கள், சமுதாயத்தைப் பார்க்கும் பார்வை, நெகிழ்ந்த சம்பவங்கள், சிலிர்த்த நிகழ்வுகள் – இவையனைத்தையும் சற்றே அறிவுக் கலப்புடன், கலகலப்பு மாறாமல் கொடுக்க முடிந்தால் - அதுவே ரிஷி ராக்ஸ்! நிலாச்சாரலில் தொடர்ச்சியாக வெளிவந்த அரட்டை பாணியிலான கட்டுரைத் தொகுப்பு. வெகுவான வாசகர் கவனம் பெற்றது; மூத்த எழுத்தாளர்களால் பாராட்டும் பெற்றது.