Tamil banner


Showing 201 - 220 of 220

  1. Author: விமலா ரமணி

    Publisher: | Audience: Adult | PDF icon 333 KB, 60p.

    தான் காதலிக்கும் ஹம்ஸிகாவின் குழந்தையைத் தேடி புறப்படும் தீபக், குழந்தையை மற்றொருவரின் வளர்ப்புமகனாகக் கண்டுபிடிக்கிறான். ஹம்ஸிகாவுடன் சென்று குழந்தையை மீட்டுக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் அவன் அவளை குழந்தையின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அதன் பின் நடந்த நிகழ்வுகள் தீபக்குக்குக் தந்தது ஆனந்தமா அதிர்ச்சியா என்பதை இக்கதை சித்தரிக்கிறது.

  2. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | PDF icon 538.07KB, 86 p.

    (ரேடியோ நாடகங்களின் தொகுப்பு) இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்ற பாரதத்தை உய்விக்க வந்த காந்தி மஹான் வாழ்க்கையை நாடக வடிவில் சித்தரிக்கும் நூல் இது! வானொலி மூலம் வாரா வாரம் பல்லாயிரக் கணக்கானோரை மகிழ்வித்த நாடகம் நூல் வடிவில் வந்துள்ளது. காந்திஜியின் தென்னாட்டு வருகையின்போது நடந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட நாடகம் இது! இந்த நூல் தொகுப்பில் மற்ற சில நாடகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நாடகம் மூலமாக நற்பணி செய்ய விரும்புவோருக்கும் நாடகப் பிரியர்களுக்குமான நூல் இது!

  3. Author: ம.ந.ராமசாமி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 983KB, 152 p.

    இந்நூல் தன்னுள்ளே 18 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. 'யந்மே மாதா...' என்னும் சிறுகதை பரவலாகப் பேசப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. 'சிறப்பான தமிழ்நூல்களுக்குப் பரிசளித்து வரும் அரசுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களின் பார்வைக்கும் அவசியம் கொண்டுவர வேண்டிய நூல் இது' என்று அன்றைய பிரபல எழுத்தாளர் அமரர் மாயாவி அவர்களால் மதிப்புரை பெற்றது.

  4. Author: ஜெயந்தி சங்கர்

    Publisher: | Audience: Adult | PDF icon 820 KB, 56p

    இந்நாவல் நகர வாழ்க்கைச் சுழலில் பிள்ளைகள் வளரும் விதத்தைச் சித்தரிக்கிறது.

  5. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 759.55KB, 60 p.

    வளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன! ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை உணரும்போது நமக்கு ஆச்சரியத்துடன் கூடிய பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ஞான ஆலயம் மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள தொடரில் 27 அத்தியாயங்கள் உள்ளன. நூலில் மெய்ஞானக் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: 1) அகிலாண்ட கோடி பிரம்மாண்ட (மல்டிவர்ஸ்) நாயகியே சரணம்! 2) ஓம் உடலில் செய்யும் அளப்பரிய ஆற்றல்கள்! 3) மனிதனுக்கு மறுபிறவி உண்டா? 4) மஹாபாரதத்தில் மறு ஜென்மம்! 5) அதிக வரம் தரும் அம்பிகை! 6) கடைசிப் புகலிடம் காயத்ரி மந்திரமே! 7) வெள்ளையருக்கும் அருள் வெள்ளம்!

  6. Author: Compiler:சம்ரட்சணா டிரஸ்ட்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 39.57MB, 78 p. : ill.

    வாழ்க்கையைப் பற்றி நம் மனதில் முற்றுகையிடும் கேள்விகளுக்கான பதில்தான் இந்த 'விடை இவன்'! இந்தத் தொகுப்பு வாழ்க்கை பற்றிய விசாலமான பார்வை அளித்து, நம்முள் ஒளிந்திருக்கும் நம்மை வெளிக்கொணர்வதற்கு உதவும் ஒரு ஞானப்புதையல். உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய எளிய விளக்கங்களுடன் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்விற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது இந்த நூல்.

  7. Author: எஸ்.நாகராஜன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 840KB, 78 p.

    பாக்யா இதழில் வெகுவான வாசகர் கவனம் பெற்ற ‘விண்வெளியில் மனித சாதனைகள்!’ தொடரின் மூன்றாம் பாகமாக இந்நூல் வெளிவந்துள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழும் இந்நூல் தொகுப்பு முதல் இரண்டு பாகங்களில் விடுபட்ட பல செய்திகளைக் கொண்டுள்ளது. நூலில் உள்ள அத்தியாயங்களில் சில : 1) சந்திரனில் மனிதக் குடியிருப்பு! 2) டீப் இம்பாக்ட்- திரைப்படம் 3) சாடிலைட் புரட்சி! 4) விண்மீன் பயணம் 5) டிஸ்கவரி சாதனை 6) விடாதே பிடி, விண்கல்லை! 7) விண்வெளியில் ஸ்போர்ட்ஸ்! 8) விண்வெளியும் ஜேம்ஸ் பாண்ட் படங்களும் 9) பீனிக்ஸ் மார்ஸ் லேண்டர்!

  8. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 2.21MB, 131 p

    பாக்யா வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடர்! விண்வெளி பற்றிய கலைக் களஞ்சியமாக இது திகழ்வதோடு அறிவியல் முன்னேற்றம் விண்ணை அளாவி எப்படி உயர்ந்து வருகிறது என்பதை நூல் விரிவாக விளக்குகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள், நமது காலக்ஸி, விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், சந்திரனுக்கு மனிதன் மேற்கொண்ட பயணம், விண்வெளி வீரராவதற்கான தகுதிகள், பயிற்சிகள், விண்கல அமைப்பு, விண்கற்களில் இறங்க மனிதனின் திட்டம், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றில் மனிதன் கால் பதித்து காலனி அமைக்க எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றை விரிவாக இந்த நூல் சுவாரஸ்யமாக விளக்குகிறது! நூலில் உள்ள அத்தியாயங்களில் சில : 1) சந்திரனில் மனிதக் குடியிருப்பு! 2) செவ்வாயில் வயல்வெளிகள் உருவாக்குவோம்! 3) விண்வெளியில் செக்ஸ் சாத்தியமா? 4) விண்வெளி தூசிகள் பற்றிய ஆராய்ச்சி 5) மூன்று சூரியோதயங்கள் உள்ள உலகங்கள்!

  9. Author: NIL:ச.நாகராஜன்

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 945KB, 101 p.

    பாக்யா வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடரின் இரண்டாம் பாகம் இந்நூல். விண்வெளி பற்றிய கலைக் களஞ்சியமாக இது திகழ்வதோடு அறிவியல் முன்னேற்றம் விண்ணை அளாவி எப்படி உயர்ந்து வருகிறது என்பதையும் நூல் விளக்குகிறது. பல்வேறு விண்வெளிப் பயணங்களைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. விண்கலங்களின் பயன்பாடுகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது. நூலில் உள்ள அத்தியாயங்களில் சில : 1) ஸ்டார் ட்ரக் பயணம் சாத்தியமா? 2) பன்னாட்டு விண்வெளி நிலையம் 3) காஸினியின் சனி கிரக பயணம்! 4) கென்னடி கண்ட கனவு! 5) சந்திர மனிதன்

  10. Author: ச. நாகராஜன்

    Publisher: | Audience: Adult | PDF icon 578 KB, 84p.

    ஐம்புலன்களையும் மீறிய விந்தைகளை நிகழ்த்தும் விசேஷ மனிதர்களைப் பற்றி அறியும் போதோ பிரமிப்பின் உச்சத்திற்கே நாம் செல்கிறோம். உண்மையில் வாழ்ந்த இப்படிப்பட்ட 28 பேரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விந்தை மனிதர்களாகத் திகழ்வதற்கான காரணத்தையும் விளக்கும் விந்தை நூல் இது!

  11. Author: ஷங்கரநாராயணன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 823.93KB, 107 p.

    முழுக்க முழுக்க எழுத்தாள கதாபாத்திரங்கள் உலா வரும் தொகுதி இது. எழுத்தாளன் தனி ஆத்மாவா, சமுதாயத்தோடு இயைந்து வாழ்கிறானா அல்லது முரண்பட்டு வாழ்கிறானா என விளக்கிப் பயணிக்கும் சுவை அலாதியான தொகுப்பு இது.

  12. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 601.12KB, 65 p.

    விலங்கு உலகம் ஒரு அதிசய உலகம். அதில் ஆயிரக்கணக்கான விநோதப் பழக்க வழக்கங்களும் ரகசியங்களும் உள்ளன! மிருகங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழியும் தனிதான்! மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு மிருகங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. அந்த வகையில் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்த நூல் விலங்கு உலகத்தின் அற்புதங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.நூலில் உள்ள அத்தியாயங்களில் சில: 1) மிருகங்கள் பேசும் மொழி! 2) ராட்சஸ மிருகம் ஓகோபோகோ! 3) டார்ச் போல் விளக்காக ஒளிரும் மீன் 4) நீலத் திமிங்கிலங்களின் ஓலக்குரல் 5) எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி

  13. Author: சுவாமிநாதன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | PDF icon 2.30MB, 289 p.

    பிபிசி தமிழ் வானொலியின் தமிழோசை நிகழ்ச்சியில் வாசகர்கள் கேட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு எஸ்.சுவாமிநாதன் தந்த பதில்களின் தொகுப்பே இந்நூல். வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், இயற்கை அதிசயங்கள் என பல்வேறு துறைகளையும் தொட்ட இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி 19000 பாராட்டுக் கடிதங்களைப் பெற்றதோடு பிபிசி நிகழ்ச்சிகளின் தர வரிசையிலும் நேயர்களின் மனதினிலும் ஒரு நல்ல இடத்தைப் பிடித்திருந்தது.

  14. Author: ச. நாகராஜன்

    Publisher: | Audience: Adult | PDF icon 693 KB, 82p.

    மகத்தான சோழப் பேரரசை அடிகோலியவன் மாவீரன் விஜயாலயன். துர்க்கைக்கு என தஞ்சையில் நிசும்பசூதனி ஆலயத்தை எழுப்பிய மாமன்னன் அவன். பல்லவப் பேரரசரான நிருபதுங்க வர்மனை அவன் சந்தித்து தனது வீரத்தைக் காட்டி மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் அமைத்தான். வரலாற்றின் ஆதாரங்களோடு 21 அத்தியாயங்களில் சுவையான நிகழ்வுகளுடன் புனையப்பட்ட சரித்திர நாவல் இது.

  15. Author: டி.எஸ்.வெங்கடரமணி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | PDF icon 1170KB, 186 p.

    நிலாச்சாரல் இணைய இதழில் தொடராக வெளிவந்த சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கை வரலாறு தற்போது மின்னூல் வடிவில். சுவாமிஜியின் பல்வேறு காலகட்ட வாழ்க்கை நிகழ்வுகள் சுவாரசியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அச்சமின்றி எதையும் கேள்வி கேட்கும் இளைஞனாக அவர்தம் இளம்பருவம் அமைந்திருந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சரை வந்தடைந்தபின் ஐய நிலைப்பாட்டில் இருந்து விலகி இறைவனின்பால் தீவிர நம்பிக்கையாளராக மாறினார். இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து சுவாமிகள் ஒடுக்கப்பட்ட ஏழை எளியோரின் துயரங்களை நேரில் கண்ணுற்றார். குமரிமுனையில் தவத்தில் ஆழ்ந்தபோது கிடைத்த மாற்றம் அவரை வேறு தளத்திற்கு உயர்த்தியது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று சூறாவளியாய் நிகழ்த்திய உரை, உலகை அவர்தம்பால் திரும்பச் செய்தது. மோட்சம் அடைவதைக் காட்டிலும் மனிதர்களுக்கு சேவை செய்து முக்தி பெறுவதே சிறந்தது எனக் கூறி துறவிகளுக்கொரு முன்னுதாரணமானார்.

  16. Author: விமலா ரமணி

    Publisher: | Audience: Adult | PDF icon 668 KB, 31p.

    இது அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்.

  17. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 909.04KB, 58 p.

    உலகின் மிக முக்கிய கலையாக இன்று கருதப்படுவது ஜோதிடம். உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள பிரபல பத்திரிக்கைகளில் ஜோதிடப் பகுதி இடம் பெறுவது கண்கூடு! வேத ஜோதிடக் கலையை உருவாக்கி வளர்த்த மேதைகளின் வரலாறுகளை ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட அரிய மேதைகளின் அபூர்வ வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் விரிவாக விளக்கும் நூல் இது. மஹரிஷி கர்கர், நாரதர், சஹாதேவன், ஸ்ரீ பதி, பி.வி.ராமன் உள்ளிட்ட ஜோதிட மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எளிய இனிய நடையில் தரும் நூல் இது! நாஸ்டர்டாமஸின் வாழ்க்கை வரலாறையும் இந்நூலில் காணலாம்!

  18. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | PDF icon 481.16KB, 65 p.

    உலகின் விஞ்ஞானிகள் சிலரால் மறுக்கப்பட்டுள்ள கலையாக ஜோதிடம் இருப்பதை அனைவரும் அறிவர். அறிவியல் நோக்கில் அவர்களின் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா என ஆய்வு செய்யும் நூல் இது. 25க்கும் மேற்பட்ட அத்தியாயங்களில் அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞானபூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை உள்ளடக்கியுள்ள ஆய்வு நூல்!

  19. Author: காயத்ரி

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | PDF icon 609.36KB, 25 p.

    நகைச்சுவை மனிதனின் ஓர் அற்புத உணர்வு. வாழ்வை நகைச்சுவையுடன் பார்க்க உதவும் நூல் இது. இந்த நூலில் நண்பர்கள், தம்பதியர், ஆசிரியர் -, மாணவர், காவலர் போன்ற பல வகைப்பட்ட மனிதர்களுக்கிடையை நடக்கக்கூடிய நகைச்சுவை உரையாடல்களை உரையாடல்கள் சுவைபட இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

  20. Author: நாகராஜன், எஸ்.

    Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | PDF icon 563.04KB, 52 p.

    உலகின் மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுட், மக்களை மகிழ்விக்கும் திரைப்படங்களை உருவாக்கும் இடம். பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள், உலகின் பிரபலமான நடிகர்கள், நடிகையர் ஆகியோரைப் பற்றிய திரைப்பட நூல் இது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் உருவான வரலாறு, எலிஸபத் டெய்லர், மரிலின் மன்ரோ, ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் உள்ளிட்ட பிரபலங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல். 27 அத்தியாயங்கள் கொண்ட நூல் இது. ஆங்கிலத் திரைப்பட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து!

F: 18AND226AND181AND36;

R: 100AND121AND102AND74;

0
False
False
https