Showing 1 - 50 of 220
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 511.30KB, 100 p.
‘ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என்ற அமைப்பு மூலம் மாதா மாதம் சிறந்த கதைகள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. அதில் இருந்து ஆண்டின் சிறந்த கதையும் பிரபலம் ஒருவரால் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்து. அந்தக் கதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் ஷங்கரநாராயணன். புதிய முயற்சி இது. குறிப்பிட்ட ஆண்டின் சிறந்த கதையைத் தேர்வு செய்தவர் இயக்குநர் பாலு மகேந்திரா.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 561.51KB, 84 p.
‘ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என்ற அமைப்பு மூலம் மாதா மாதம் சிறந்த கதைகள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. அதில் இருந்து ஆண்டின் சிறந்த கதையும் பிரபலம் ஒருவரால் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது. அந்தக் கதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் ஷங்கரநாராயணன். குறிப்பிட்ட ஆண்டின் சிறந்த கதையைத் தேர்வு செய்தவர் நடனக் கலைஞர் அனிதா ரத்னம்.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 807.20KB, 91 p.
‘ஜோதி விநாயகம் சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என்ற அமைப்பு மூலம் மாதா மாதம் சிறந்த கதைகள் தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டது. அந்தக் கதைகளைத் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் ஷங்கரநாராயணன். தொடர்ச்சியான மூன்றாம் ஆண்டுத் தொகுதி இது.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: | Audience: Adult | 1.05MB, 122 p.
மனித சமுதாயத்தோடு கூடி வாழும் அல்லது அவனைப் பாதிக்கும் விலங்குகளும் அவற்றோடு மனிதன் பாராட்டும் உறவோ, துவேஷமோ கதைப் பொருளான கதைகள். மிருகங்கள் அபரிமிதமாய் உள்ள இந்த பூமியில் விகிதாச்சாரப்படி நாம்தான் அவற்றின் உலகில் வாழ்கிறோம். என்றாலும் இந்த அதிகார வெறி, சுயநலம் மனிதனை எப்படிப் பிடித்து ஆட்டுகிறது என்பதை இத்தொகுதியின் ஊடே நாம் தரிசிக்கலாம். இனம் என்கிற கதையில் வீட்டு வாசலில் கூர்க்கா காவல் செய்தாலும் அவனுக்குக் கிடைக்காத கவனம், அந்த வீட்டு அல்சேஷன் நாய்க்குக் கிடைப்பதை அவர் எழுதிய பாங்கு மனதை என்னவோ செய்கிறது.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1021KB, 161 p.
அக்கரை சிவப்பு, பூமாலை நீயே மற்றும் வாய்மையே வெல்லும் ஆகிய மூன்று குறு நாவல்கள் இந்நூலில் உள்ளன. பல வருடங்களாக பிரிந்து வாழும் தம்பதியரான மனோஜ் மற்றும் நித்யா ஒன்று சேரும் நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது ‘அக்கரை சிவப்பு’ குறுநாவல். மைக்ரோ பயாலஜியில் உச்சபட்ச பட்டம் வாங்கிய பேராசிரியரின் ஆர்வத்தினால் ஏற்படும் விளைவுகள் ‘பூமாலை நீயே’ குறுநாவலில் விளக்கப்பட்டுள்ளன. படித்த வேலையில்லா இளைஞர்கள் சமூக விரோதிகளால் தவறான வழிகளில் செலுத்தப்படுவதன் விபரீதத்தை விளக்கியுள்ளது ‘வாய்மையே வெல்லும்’ குறுநாவல்.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1633KB, 190 p.
ஆப் ஃப்ரம் ஸ்லேவரி' என்பதான புக்கர் டி.வாஷிண்டன் அவர்களின் சுயசரிதை. 'நல்லி-திசை எட்டும்' விருது பெற்ற நூல் இது. 'வாசித்தபின் உறக்கம் தொலைத்த இரவுகள் பல' என்கிறார் பதிப்பாசிரியர் எஸ்.ஆர்.சுவாமிநாதன். 'அழகாகத் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்...' என்று குமுதம் இதழால் பாராட்டப்பட்டது. 'ஒரு சுயசரிதை நூலுக்கான முதல் பரிசை வழங்கலாம்' என்றார் பொதிகைத் தொலைக்காட்சி இயக்குனர் ஏ. நடராஜன் அவர்கள். 'புத்தகத்தை வெளியிட்ட பதிபகத்தாரும், மொழி பெயர்த்த ம.ந.ராமசாமியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்' என்றது அமுதசுரபி இதழ். 'அழகுத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் ராமசாமி' என்றது தினகரன்.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 686KB, 127 p.
ஒருவன் தான் செய்யும் தவறுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மனிதனின் மனதில் தோன்றும் சந்தேகம் அவனுடைய வாழ்க்கையை அழிப்பது மட்டுமில்லாமல், அவனுடைய உறவுகளையும் அது பாதிக்கும். ஆத்திரத்தில் உயிரைப் பறித்தாலும் சரி, சாவகாசமாய் யோசித்து திட்டம் போட்டு உயிரை எடுத்தாலும் சரி, சட்டம் அதனை கொலை என்றுதான் சொல்கிறது. என்னதான் படித்திருந்தாலும் சுயநலம் தலைதூக்க ஆரம்பித்தால் அதற்காக ஒருவன் எது வேண்டுமானாலும் செய்வான் போன்ற கருத்துகளை வலியுறுத்தும் குறுநாவல்கள் இதில் அடங்கியுள்ளன.
Author: ச. நாகராஜன்
Publisher: | Audience: Adult | 685 KB, 80p.
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று உலகமே வியக்கும் அளவில் பெரிய சூப்பர் ஸ்டாராகத் திகழும் ஜாக்கிசானின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல் இது.
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 584KB, 48 p.
ஹவாய் சுவாமி என்றழைக்கப்படும் ஹவாய் ஆதீன பீடம் ஸ்ரீசிவாய சுப்ரமுனிய சுவாமிகளின் வரலாற்று நூலை ஆசிரியர் மிகுந்த பக்தி சிரத்தையுடன் எழுதியுள்ளார். அன்னாரது வரலாறு பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கும் பரவசத்தை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை. இது வெளிநாடுகளில் நம் ஆன்மிக, கலாச்சார நிகழ்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. அகத்தூய்மையையும் ஆலயத் தூய்மையையும் பற்றி ‘விநாயகர் கடிதங்கள்’ விளக்குகின்றன. வேதங்களை ரிஷிகள் தவவலிமையால் செவிமடுத்தது போல், இந்த விநாயகர் கடிதங்கள் சுவாமிகளின் அகக்கண்ணில் புலப்பட்டு எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Author: நீல உடன் ஆத்மன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1136KB, 99 p.
கிராமத்தில் வாழும்போது அருகிருக்கும் நகரத்தின் சுறுசுறுப்பு ஆச்சர்யப்பட வைக்கிறது. பின் மாநகரத்துக்குப் புலம் பெயர்கையில் அவ்வூரின் பரபரப்பு வியக்க வைக்கிறது. முதல் அயல்நாட்டுப் பயணத்தில் அத்தனையும் பிரமிப்பாயிருக்கிறது. மேலும் சில பயணங்களில் இத்தகைய நுண்ணுணர்ச்சிகள் மரத்துப் போய்விடுகின்றன. பெரிது - சிறிது என்பதற்கான வரையறை மட்டுமல்ல, சரி - தவறு என்பதற்கான விதிமுறைகளும் கூட நம் வாழ்க்கையின் விசாலத்துக்குத் தக்க மாறும் விந்தை நம் பயணம் விரியும்போது புலப்படுகிறது. இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குப் புலம் பெயர்ந்திருக்கும் கட்டுரை ஆசிரியர்கள், தங்கள் கூர்மையான பார்வையினால் வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களிலிருந்து கூறு போட்டுப் பார்க்கும் கட்டுரைகளின் தொகுப்பே அமுதென்றும் நஞ்சென்றும். நன்றி புதிய பார்வை இதழில் இவை தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
Author: ச. நாகராஜன்
Publisher: | Audience: Adult | 623 KB, 44p.
இடப்பக்க, வலப்பக்க மூளைகளின் குணாதிசயங்களும், அவை மனிதர்களின் பண்புகளில், நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 545.90KB, 60 p.
இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு ஆற்றும் உதவி பெரிது. சூரிய குடும்பம், விண்வெளி, நட்சத்திரங்கள், கடல், அண்டார்டிகா, பனி மனிதன், ஆதி மனிதன், காலப் பயணம், விந்தை மனிதர்கள், அதிசய இடங்கள், புதிய சிகிச்சை முறைகள் என பலதரப்பட்ட களங்களைத் தொட்டுச் செல்லும் அறிவியல் கட்டுரைகள் அடங்கிய சுவையான நூல்.நூலில் அத்தியாயங்களில் சில : 1)சூரியனிலிருந்து பூமியை நகர்த்தப் போகிறார்களா? 2)ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? 3)ஆயிரம் கண்டுபிடிப்புகளைத் தந்த அபூர்வ மேதை! 4)செயற்கைப் பெண் இயந்திரம் தயார்! 5)அறிவு வளர குழந்தைகளுடன் பேசுங்கள் 6)ஹிட்லரின் சங்கேத மெஷின் 7)ஆர்டர் கொடுத்தால் உங்கள் குரூப் ரத்தம் தயார்
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 782KB, 70 p.
அறிவியல் அதிசயங்களும், கண்டுபிடிப்புகளும் வியக்கத்தக்க வகையில் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. அந்த வகையில் ‘அறிவியல் அதிசயங்கள்’ நூல் மூன்றாம் பாகமாக வந்துள்ளது. மூன்று பாகங்களும் சேர்த்து மொத்தம் நூறு கட்டுரைகள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை எண்ணி பிரமிக்கச் செய்கின்றன. நூலில் உள்ள அத்தியாயங்களில் சில : 1) ஓஸோன் துளை பெரிதாகிறது! 2) நீரின்றி வளரும் தாவரம் 3) காலப் பயணம் 4) ஜாக்கிரதை! வருகிறது ந்யூரோ மார்க்கெடிங் 5) மார்பகப் புற்று நோய் - இனி பயமில்லை 6) மனிதனுக்குப் பன்றியின் உறுப்புகள்
Author: விஜயராகவன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 1.76MB, 76 p. : ill., some col.
நம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுப் புறத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அவற்றைப் பார்க்கிறோம், உணர்கிறோம், கேள்விப்படுகிறோம். அனால் அவை பற்றிச் சிந்திப்போமானால் ஏன், என்ன, எப்படி, எவ்வாறு என்னும் வினாக்கள் தோன்றும். அவ்வினாக்களுக்கு விடை காண முயன்றால் அறிவியல் காரணங்கள் மலரும். "நமக்கு ஏன் கை, கால்கள் மரத்துப் போகின்றன?, சோடாவில் சிறிதளவு உப்பைச் சேர்த்தால் அது பொங்கி வழிவது ஏன்?, கெட்டித் தன்மை வாய்ந்த காய்கறிகள் வெந்தவுடன் மென்மையாகிவிடுவது எப்படி?, மின்மினிப் பூச்சிகளிலிருந்து வெளிச்சம் உண்டாவது எவ்வாறு? நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு எவ்வாறு அளவிடப்படுகிறது?" இத்தகைய வினாக்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அறிவியல் காரணங்கள் உண்டு. அவ்வாறு திரட்டப்பட்ட காரணங்களை இந்நூல் பகிர்ந்து கொள்கிறது.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 895.86KB, 83 p.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் மனித குலத்திற்குத் தரும் நன்மைகள்தான் எத்தனை! வாரா வாரம் பாக்யா வார இதழில் நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பற்றி எழுதப்பட்டு வரும் இந்தத் தொடரின் முதல் பாகம் இப்போது மின்னூலாக வெளி வந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அறிவியல் அறிஞர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த பொருள் பொதிந்த சம்பவம் ஒன்றும் இடம் பெறுகிறது.நூலில் உள்ள சில அத்தியாயங்கள்: 1) கெப்ளர் விண்கலம் காணும் 1000 கிரகங்கள்! 2) சாவுக்கடல் சாகிறதா? 3) ககாரின்.. விண்ணில் கடவுளைப் பார்த்தீர்களா? 4) ஒஸாமா பின்லேடனைப் பிடிக்க உதவிய சாடலைட்டுகள்! 5) 6 மில்லியன் டாலர் பயோனிக் மூளை! 6) நாம் எல்லோருமே ரஜினிகாந்த் தான்! 7) நூறு ஆண்டுகள் வாழ ஒரு அதிசய மாத்திரை!
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 896.07KB, 91 p.
அறிவியல் துளிகள் நூலின் இரண்டாம் பாகமாகும் இது. அறிவியல் மனித குலத்திற்கு மகத்தான கண்டுபிடிப்புகளைத் தருவித்துள்ளது. இந்நூலில், வளர்ந்து வரும் நவீன கண்டுபிடிப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அறிவியல் துளிகள் என்பதைக் காட்டிலும் அறிவியல் வெள்ளம் என்று சொல்லும் அளவிற்கு தகவல்கள் பல பொதிந்துள்ள இந்நூல் அனைவரின் வீட்டிலும் தவழ வேண்டிய நூல். நூலில் உள்ள சுவையான அத்தியாயங்களில் சில: 1) சந்திரனில் குகைப் பள்ளங்கள் 2) காமடியில் சைபர்னெடிக்ஸ் 3) ரொபாட் டிரைவர் ஓட்டும் விபத்தில்லாத கார்! 4) மூளையே இனி போர்க்களம்! 5) வருகிறது செக்ஸ் சிப் 6) உலகையே மாற்றப் போகும் பத்து பிரம்மாண்டமான கண்டுபிடிப்புகள் 7) ஆற்றலைக் கூட்டினால் நீங்கள் ஏழரை லட்சம் பேரை உயர்த்த முடியும்!
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 902KB, 120 p.
ஹிந்து மதம் வெறும் தத்துவம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை! அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களை 27 அத்தியாயங்களில் இந்நூல் தெளிவாகத் தருகிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமையை நாமங்கள் ஆயிரம் நலங்கள் பல்லாயிரம் கட்டுரையில் படிக்கலாம். சப்த சக்தி என்ன செய்யும், எண்ண சக்தி என்ன செய்யும், காயத்ரி மந்திரத்தின் பெருமை, அஷ்ட நிதிகளை அள்ளித் தரும் பத்மினி வித்யா உள்ளிட்ட அபூர்வ ரகசியங்களை இந்த நூலில் படிக்க முடியும்! இந்த நூலுக்கு முன்னுரை தந்துள்ளவர் முன்னாள் தமிழ் நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநரும் தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள். அவர் தனது உரையில், “அன்பிற்குரிய நண்பர் திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விட சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 873KB, 92 p.
ஹிந்து தத்துவம் விளக்கும் ஆன்மீக ரகசியங்களை அறிவியல் ஆராயத் தலைப்பட்ட போது அதன் முடிவுகள் பிரமிக்க வைப்பதாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மந்திரங்களின் மகிமை, ஒலியின் மகிமை என்று ஒவ்வொன்றாக ஆராயப்பட்டு அவற்றை அறிவியல் ஆமோதித்த போது பழம் பெரும் தத்துவங்களின் உண்மையும் அவற்றைக் கண்ட ஞானிகளின் பெருமையும் உலகிற்குத் தெரிய வந்தது. இந்த அறிவியல் சார்ந்த ஆன்மீக நூலில் ஏற்றம் பெரும் ஹிந்து தத்துவங்களையும் அறிவியல் முடிவுகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.
Author: ச. நாகராஜன்
Publisher: | Audience: Adult | 632 KB, 94p.
மனம், எண்ணம் பற்றிய ஆராய்ச்சிகள் ரஷியா, செக்கோஸ்லேவேகியா, பல்கேரியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்து வருகின்றன. இந்த நாட்டு விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்த, இப்போது கண்டுபிடித்து வரும் முடிவுகளைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 637KB, 138 p.
2003ம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் ஒரு குறுநாவல்களின் தொகுப்பு. நன்கு பேசப்பட்ட 'ஜீவாத்மா' என்னும் குறுநாவல் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
Author: ச. நாகராஜன்
Publisher: | Audience: Adult | 1178 KB, 182p.
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து வரும் அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறைத் தெளிவாக விளக்கும் நூல் இது.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 973.63KB, 74 p.
நூறாண்டுகள் வாழ்வோம்; நோய் நொடி இல்லாமல் வாழ்வோம் என நமது அறநூல்கள் அனைவருக்குமான பிரார்த்தனையில் குறிப்பிடுகின்றன! இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமாக நெடு நாள் வாழ்வதற்கான அடிப்படை ரகசியங்களைப் பல கட்டுரைகள் வாயிலாக இந்த நூல் விளக்குகிறது. 27 அத்தியாயங்கள் உள்ள இந்த நூலில் சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்புகள் பகுதி படிப்பவர்க்கு இன்றைய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்கிறது. அனைவரும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அரிய நூல்! நூலின் சில அத்தியாயங்கள்: 1) வளமான வாழ்க்கையைத் தரும் நடைப் பயிற்சி 2) நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க 4 இயற்கையான வழிகள் 3) மோர் நீர் அல்லது மோர்த் தெளிவில் உள்ள புரதச் சத்து பற்றிய உண்மைகள்! 4) தூங்கும் போது அளவுக்கு அதிகமாக வியர்க்கிறதா? 5) தூக்க வியாதியை எப்படி குணப்படுத்துவது? 6) ஒளி உணரும் மூளைத் திசுக்கள் நம்மை விழிப்புடன் வைத்திருப்பது எப்படி? 7) தாம்பத்ய வாழ்க்கையும் ஆரோக்கிய வாழ்வும் 8) அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாலியல் சந்தேகங்கள் சிறப்புப் பகுதி : மருத்துவக் கண்டுபிடிப்புகள்
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 631KB, 48 p.
ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களை சுவைபட விளக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். மருத்துவ ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய இந்நூல் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், பெரியோர் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஏதுவான உதவிகளை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. அனைவரும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அரிய நூல்!
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 655KB, 57 p.
இந்நூலில் ஆசிரியர் குடும்பக் கலாசாரத்தையும், சமுதாயத்தையும், தனி மனிதரின் ஆன்மிக வளர்ச்சியையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள அம்சங்களாகவே காண்கிறார். சமுதாயத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்க ஒட்டு மொத்தமான முயற்சி தேவை. அதற்கு நல்ல சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒவ்வொரு தனிநபரின் மனதிலும் பதியச் செய்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும். கனிவான இதயம் கொண்ட ஆசிரியர் அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இந்நூலில். அனைத்துக் கட்டுரைகளும் சீரிய சிந்தனைகளைக் கொண்ட பூங்கொத்துகள் என்றால் அது மிகையாகாது.
Author: புகாரி
Publisher: | Audience: Adult | 888 KB, 82p.
இது ஒரு முப்பது கவிதைகளின் தொகுப்பு.
Author: விமலா ரமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 634KB, 72 p.
பூர்விகா கண்ணனைத் தன் தோழியின் திருமணத்தில் சந்திக்கிறாள். மணமகளின் சகோதரன்தான் இந்தக் கண்ணன். பூர்விகாவைத் தேடி அவள் வீட்டிற்கு வரும் கண்ணனை அனைவருக்கும் பிடித்துவிடுகிறது. தான் வெளிநாடு சென்று திரும்பியபின்தான் திருமணம் என்று கூறிவிடுகிறான் கண்ணன். ஒருநாள் பூர்விகா கண்ணனின் கல்லூரித் தோழன் ராகுலை சந்திக்கிறாள். அவன் கண்ணனைப் பற்றிய சில விபரங்களைக் கூற பூர்விகா திகைக்கிறாள். கண்ணனின் மெயில் ஐடியை திறந்து பார்க்கும் அவள் அதிர்ச்சியடைகிறாள். மெயிலில் இருந்தது என்ன? பூர்விகா திருமணம் நடந்ததா? வெளிநாடு சென்ற கண்ணன் என்னவானான்? பரபரப்பாக சொல்லிச் செல்கிறது இந்நாவல்.
Author: ம.ந.ராமசாமி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 788KB, 98 p.
இருபத்தைந்து கதைகளின் தொகுப்பு இந்நூலில் உள்ளது. 'ஐஸ்கிரீமை வாயில் போட்டுக் கொண்டால் எப்படி உருகுமோ, அதுபோல சற்றும் இடராத, படிக்கத் தொடங்கினால் கதை முடியும்வரை ஒரே மூச்சில் சரசரவென்று நகரும் பாணி ராமசாமியுடையது' என்கிறார் கலாரசிகன், தினமணி நாளேட்டில்.
Author: ச.நாகராஜன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1004KB, 180 p.
உலக மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல் இது! ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிறந்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த நூல். அனாக்ராம், க்ராஸ்வோர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets,Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் வினோதமான பரிமாணத்தையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது.
Author: Padmanaban, T.S.
Publisher: | Audience: Adult | 1345 KB, 69p.
சர்வ அதிகாரியான அடோல்ப் ஹிட்லர் பற்றிய, வரலாறு பூர்வமான உண்மைகளை முழு தகவல்களோடு இந்நூல் தருகிறது.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: | 665.80KB, 81 p.
விஞ்ஞான நோக்கில் ஆன்மீக ரகசியங்கள் விளக்கப்படும்போது நம் முன்னோர்களின் அறிவும் ஆற்றலும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. 27 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலுக்கு பிரபல நாவலாசிரியரும் சிறந்த தமிழ் எழுத்தாளருமான திரு அசோகமித்திரன் முன்னுரை வழங்கியுள்ளார். அவர் தனது முன்னுரையில்,”திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதிய ஆன்மீக ரகசியங்கள் என்று நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்கு பிரமிப்புதான் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டு “மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் கட்டுப்பாடற்ற தகவல் பரிமாற்றங்களாலும் இன்று பல புனிதத் தலங்கள் க்ஷேத்ரங்களாக இல்லாமல் பொழுதுபோக்குத் தலங்களாக மாறி விட்டன. இதில் சரி, தவறு என்றில்லை. பரிணாம மாற்றங்கள் சரி, தவறு பார்த்து வருவதில்லை. ஆனால் இப்படி மாறி வரும் சூழ்நிலையிலும் மனிதனை நிலை தடுமாறாது பாதுகாப்பது காலம் காலமாக மனித இனத்தை போஷித்து வரும் நம்பிக்கைகளும் மதிப்பீடுகளுமே. அந்த வகையில் நாகராஜனின் இந்த நூல் மிகவும் முக்கியமானது” என்று மதிப்பிடுகிறார்.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 655.59KB, 85 p.
வாசகர்களின் அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த நுணுக்கமான கேள்விகளுக்கு விடை தரும் நூல் இது! சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விடைகள் தரப்பட்டுள்ளன!வினாக்களில் சில: 1) குற்றம் செய்தோரைக் கண்டுபிடிக்க மரபணு உதவுமா? 2) மோனாலிஸா புன்னகையின் மர்மம் என்ன? 3) மனித உடல்களில் உள்ள கெமிக்கல்கள் என்னென்ன? 4) ஜெனோம் ப்ராஜெக்ட் என்றால் என்ன? 5) அமில மழை என்றால் என்ன?
Author: ஜெயந்தி சங்கர்
Publisher: | Audience: Adult | 1160 KB, 204p.
இந்நூலில் எம். எஸ். சுப்புலட்சுமி, மதுரை மணி ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆகிய இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கியுள்ளது.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 752.93KB, 135 p.
இன்றைய இந்தியா இளைஞர்கள் கைகளில் சிறைபட்டுக் கிடக்கிறது என்பதை 'இதுதான் இந்தியா' நாவலின் மூலம் சித்தரிக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர். புகை நுழையாத இடத்தில்கூட ஒரு அரசியல்வாதி நுழைந்துவிடுவான் என்று சொல்வார்கள். கதையின் தன்மையை, உயிர் ஓட்டத்தை சிறிதும் மாசுபடுத்தாமல் மக்கள் பேசும் தமிழில் மக்கள் விழிப்புடன் வாழ, இருட்டில் நடக்கும் மாபெரும் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் விதமாக கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவலின் மூலம் சிந்தனையென்னும் சமுதாய கிருமிநாசினி கொண்டு அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய முற்பட்டிருக்கிறார் ஆசிரியர்.
Author: சம்ரட்சணா டிரஸ்ட்
Publisher: | Audience: Adult | 1062 KB, 91p.
இந்த உலகத்தில் வாழையடி வாழையென ஒரு வள்ளல் திருக்கூட்டம் வந்தது. அவர்களும் உலகத்தார் போல உண்டு, உடுத்திப் பூண்டு சுகம் கண்டவர்கள்தான்.ஆனால் உலக மக்களுக்குத் தொண்டு செய்யும் வித்தையை அவர்கள் கண்டு கொண்டதால் அவர்களால் எதையாவது சாதிக்க முடிந்தது. ஆனால் அவர்களது கையெழுத்து கல்லின் மேல் எழுதப்பட்டது போல் நிலைத்து நின்றுவிட்டது. ஒரு புத்தனுடிய, ராமனுடைய, இயேசுவினுடைய, ஷிரடி சாயினுடைய கையெழுத்துக்களெல்லாம் நிலைத்து நின்று விட்டன.இதைப் பற்றி மேலும் அறிய புத்தகத்தைப் படிக்கலாம்.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 495.58KB, 120 p.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் உலகத்தை இந்தத் தொகுப்பில் வியூகப்படுத்தி கதைகள் தந்திருக்கிறார் ஆசிரியர். இறக்கும் தருவாயில் மனைவி அருகில் இருக்கிறபோது காதலியை நினைத்தபடி உயிர் பிரியும் முதியவர், முதியோர் இல்லத்தில் வாரிசு வராமல் காத்திருக்கும் பிணம், சூழல் எப்படியாயினும் பசி பொறுக்காத பிற முதியவர்களின் கதை என அனைத்தும் உணர்ச்சிக் குவியலான கலவையாக இருக்கின்றன.
Author: ஷங்கர நாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 697.60KB, 81 p.
ஒரு நடுத்தர வர்க்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென வாய்த்த நல்லதிர்ஷ்டம் போக்குக் காட்டி இழப்புகளையே அளிக்கிறது. முதலாளியின் பெண்ணின் கல்யாணத்தில் அவளைப் பார்த்த பெரும் பணக்காரப் பிள்ளை ஒருவன் அவளைப் பெண் கேட்டு வீட்டுக்கு வருகிறான். அவள் கல்யாணம் கிட்டத்தட்ட முடிகிற சந்தர்ப்பம். அவளது தங்கை தன் கல்யாணக் கனவுகளில் திளைக்க ஆரம்பித்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு விபத்தில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுகிறான். ஆனால் உறவு விட்டுப் போகக் கூடாது என்கிற உயர்ந்த மனநிலையில் மாப்பிள்ளையின் அப்பா தன் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்பவுவதாகச் சொல்கிறார். மாப்பிள்ளையாக ஏற்கெனவே பார்த்தவனின் தம்பியைத் என் தங்கைக்கு மணம் செய்து தரக் கேட்கிறாள் கதாநாயகி. இறுதியில் அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு, அதுவும் அக்கா ஏற்பாட்டின் படி நல்ல இடத்தில் திருமணம் அமைகிறது. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனசில் இடம் பிடித்த சிறந்த நாவல் இது.
Author: மதுமிதா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 974.05KB, 184 p.
இலக்கியப் படைப்பாளிகளின் இரவு உலகம் எத்தகையது, அவர்களின் இரவுப் பணி அனுபவங்கள், என்னென்ன சிரமங்களை, அவலங்களைக் காண்கிறார்கள்... என்று அவர்களே எடுத்துச் சொல்லும் கட்டுரைகள். இரவு உலகை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து காட்டும் உண்மை வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான இரவு உலகை காட்சிப்படுத்துகின்றது. இயற்கையான இவ்வுலகின் இருளில் சிலர் விழிபெற்று உண்மையைக் காண்கின்றனர். கண்டவைகளை சிலர் மனதினுள் புதைத்து வைத்துக் கொள்கின்றனர். சிலர் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவர் கண்ட உண்மைக்கும் இன்னொருவர் காணும் உண்மைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான பேதம்! 37 படைப்பாளிகளின் ’இரவு’ தொகுப்பு இந்நூல்.
Author: ஷங்கரநாராயணன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 954.58KB, 143 p.
குறிப்பிட்ட சிந்தனை வளாகத்தில் பல கதைகள் அடங்கிய கொத்தாக அமைந்திருக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு. ஒரே படைப்பு வியூகத்தில் பல்வேறு கோணங்களை முன்வைக்கிற ஒரே தொகுப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பது இந்நூலின் சிறந்த அம்சம் எனலாம். இந்நூலில் சொல்லப்படும் கதையின் மையம் ஏழு எட்டு மாத அளவிலான குழந்தைகளே எனினும் இந்நூல் அழுத்தமான பதிவாக அமைந்து வியக்க வைக்கிறது.. இருவர் எழுதிய கவிதை – குழந்தைகளின் உலகம். பெரியவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது.
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 407 KB, 84p.
இப்புதினம் இரு காதலர்கள் கருணாகரனையும் தயாவையையும் பற்றியது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனநிலை சரியில்லாத பாவனாவிற்குக் கணவனாகிறான் கருணாகரன். இவன் வாழ்க்கை பிரம்மச்சரியத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இவன் தாய்க்கு ஒரு நர்ஸ் தேவைப் பட அந்தப் பணிக்கு தயாவே வருகிறாள்! இச் சம்பவங்களால் மனம் குழம்பிக் கிடக்கும் இவன் குழந்தையைப் பெற்றுவொட்டு பாவனா காணாமற்போக மேலும் அதிர்ச்சியடைகிறான்! பாவனா கிடைத்தாளா? குழந்தையின் தந்தை யார்? தயா கருணாகரன் காதல் நிறைவேறியதா? இப்படிப் பல முடிவுகளுக்கு இறுதியில் விடை தெரிகிறது.
Author: ரஜினி பெத்துராஜா
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 727KB, 48 p.
இந்நூல், இந்தியாவிலிருந்து ‘செர்வாஸ்’ என்ற சமாதானக் குழு துருக்கியில் நடந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு நம் நாட்டின் அருமை பெருமைகளை எவ்வாறு சிறப்பித்துக் காட்டியது என்பதை முதல் பாதியில் விளக்குகிறது. பின்னர் இக்குழு எகிப்து நாட்டிற்குப் பயணித்து, அங்கு பார்த்த கண்கொள்ளாக் காட்சிகளை பின்பாதியில் விளக்குகிறது. இந்தப் பயண நூலை வாசிப்பவர்களுக்கும் கூடவே பயணித்த உணர்வை ஏற்படுத்துவது இதன் சிறப்பு. கவிநயம் பளிச்சிடும் இப்பயண நூலை அனைவரும் ரசித்துப் படிக்கலாம்.
Author: களந்தை பீர் முகம்மது
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 767.25 KB, 109 p.
பால்ய பருவம் நம்முன் வாரியிறைத்த பல நிகழ்வுகளில் மனம் தோய்ந்த பொழுதுகளும், மனம் காய்ந்த பொழுதுகளும் பல. இந்தக் கலவைகள்தான் நம் வாழ்க்கையின் தடங்களாகின்றன. நம்முடைய மன இயல்புகளை உருவாக்கிக் கொள்வதும் இவைதாம். சுடர் எரித்து இருளை அழிப்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; வாழ்வின் அர்த்தங்களைத் தேடிச் செல்லும் ஒரு ஆன்மவேட்டை அது. அந்தப் பயணத்தில் நம்மைத் தடுத்து நிறுத்தும் மாயக்கைகள் எங்கே, எப்படி முளைத்து வருகின்றன என்பதை அறிய முடியவில்லை. இந்த மாயக்கைகளின் பிறப்பிடம் மதமாகவோ இனமாகவோ அரசியலாகவோ இருந்துவிடலாம்; ஆனால் அதனைத் தாண்டிச் செல்லும் வலுவான கால்கள் இருக்கின்றன;. அந்தக் கால்களையும் நமக்கு வேற்கூறிய மதமும் இனமும் அரசியலுமே தரக்கூடும்; தராமலும் போகலாம். ஆனால் பயணம் தொடரும்! தடுத்து நிற்கின்ற மாயக்கைகளையும் தாண்டிச் செல்கின்ற கால்களையும் பற்றிய கதைகள்தாம் இத்தொகுப்பு
Author: ரஜனி பெத்து ராஜா
Publisher: | Audience: Children | 411 KB, 65p.
சிறுவர்களுக்கான பயண நாவல். செர்வாஸ் எனும் சமாதானக் குழு மூலம் தான் ஆஸ்திரேலியாவிற்கு பயணித்ததை குழந்தைகளே பயணிப்பதாய் சுவைபட அமைத்துள்ளார் ஆசிரியர். ஆஸ்திரேலியாவின் ஸிட்னி, மெல்பொர்ன் போன்ற பல நகரங்களுக்கு நாமும் போய் வருவதுடன்அந்நாட்டின் கலாசாரத்தையும் அறிந்து கொள்கிறோம். இந்நூல் தமிழக அரசின் குழந்தை இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது.
Author: ச. நாகராஜன்
Publisher: | Audience: Adult | 462 KB, 68p.
உலகில் தான் எவ்வளவு அதிசய இடங்கள்! நாம் அறியாதவை ஏராளமாக உள்ளன. அமேசான், வானவில் பாலம், வானெர்ன் ஏரி, உர்குப் கூம்புகள், வெர்டான் பள்ளத்தாக்கு, மரகதத் தீவு, ஃப்ராசாஸி குகைகள், கல் மரங்கள், உலகின் மிக உயரமான வெய்ல் நீர்வீழ்ச்சி, மிரள வைக்கும் சாவுக்கடல், கெய்சர் வெந்நீர் ஊற்றுக்கள், அண்டார்டிகா ஐஸ், அழகிய ஆல்ப்ஸ் போன்ற பூமியின் அதிசயங்களை விரிவாக விளக்கும் நூல்.
Author: நாகராஜன், எஸ்.
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: General | 1.02MB, 80 p.
நாளுக்கு நாள் உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள் வலிமையுடனும் சுவையுடனும் பல்வேறு சுவாரசியமான தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்களைச் சுவைபட விளக்கும் இந்த நூலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் இடம் பெறுகின்றன! அவற்றுள் சில அத்தியாயங்கள் : 1) எப்படிப் படம் எடுக்கிறார்கள்? 2) சிரித்து மகிழ மிஸ்டர் பீன் 3) பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் கலக்கறய்யா, கலக்கறே! 4) உலகைச் சிரிக்க வைக்கும் எலியும் பூனையும்! (டாம் அண்ட் ஜெர்ரி) 5) ஸ்டார் வார்ஸ்! 6) உலகைக் கலக்கும் ஸ்பைடர் மேன்! 7) இரண்டு திரைகளிலும் மின்னும் ஒரே சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்! 8) பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலக சாதனைகள்! 9) பார்முலா ஒன் பார்க்காத கண் என்ன, கண்ணே! 10) உயிரைப் பணயம் வைத்து எடுத்த அதிசயத் தொடர்!
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1010KB, 123 p.
கோபம் ஒரு மனிதனை தன்னிலை மறக்கச் செய்துவிடும். அதேபோல் பழிவாங்கும் உணர்வு ஒரு மனிதனின் வாழ்வையே அழித்துவிடும் வலிமையுடையது. இந்த இரண்டு உணர்வுகளினால் ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது 'உள்ளத்தைக் கிள்ளாதே' குறுநாவல். மூளைக்குக் கட்டுப்படாத சில நியூரான் செல்கள் தன்னிச்சையாக சில கட்டளைகளைப் பிறப்பிக்கும். இதற்கு 'ஆட்டோ ஃபோபியா' என்று பெயர். இந்த ஃபோபியாவினால் அவதிப்படும் ஒரு பெண் டாக்டர் மணிமேகலையின் உதவியை நாடுகிறாள். இந்த ஃபோபியா அவளுக்கு எதனால் ஏற்படுகிறது என்று ஆராய்ந்து அவளுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் டாக்டர் வெற்றி பெற்றாரா என்பது 'விவேக், விஷ்ணு, ஒரு விடுகதை'யில் விவரிக்கப்பட்டுள்ளது.
Author: உஷாதீபன்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 428.31KB, 79 p.
மனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சிறுகதைத் தொகுப்பு
Author: அமர்நாத்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 1.10MB, 276 p.
உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பெரியசாமி பிஎச்.டி. முடித்த ஆராய்ச்சியாளன். ஓரளவு வேதியியல் அறிந்த அவன் மேற்பார்வையாளர் மரியா கேட்டதற்காக ஒரு இரசாயனப் பொருளைத் தயாரித்த தருகிறான். அது சாதாரண பொருளல்ல, எம்பிபிபி என்கிற போதை மருந்து என்று அதற்கு அவள் அளிக்கும் பரிசிலிருந்து தெரிகிறது. ஒரு வயது பையனும், இரண்டு வருஷ திருமணமும் தராத இன்பம் கள்ளத் தொடர்பில் அவனுக்குக் கிடைக்கிறது. சில மாதங்கள் கடந்ததும் மரியா அவன் மூலம் நிறைய எம்பிபிபி தயாரித்து கொள்ளை விலைக்கு விற்கப் போவது அறிந்து திகில் அடைகிறான். அவளிடமிருந்து தப்பிக்க தன்னுடன் கல்லூரியில் படித்த அம்பிகாவிடம் சரணடைகிறான். அம்பிகா வணிக உலகின் பதவி ஏணியில் ஏற பெரியசாமி உறுதுணையாக இருக்கிறான். தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாமல் ஆரம்பக் கல்லூரி ஆசிரிய பதவியில் திருப்தி அடைகிறான். பின்னர் அம்பிகா பெரியசாமியிடமிருந்து நட்புமுறையில் விலகிச் செல்கிறாள். ஒரு மாணவியின் குற்றச்சாட்டினால் வேலையை இழந்த பெரியசாமி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியன் ஆகிறான். அவன் நடத்தும் உயிரியல் வகுப்பில் மோகனும், அதிபுத்திசாலியான அவன் தங்கை சவிதாவும். அவர்கள் யார் என்று அவன் அறியவரும்போது புதிய முடிச்சொன்று அவிழ்கிறது.
Author: ராஜேஷ்குமார்
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 643.54KB, 123 p.
கல்லூரியின் கடைசி ஆண்டில் உள்ள கீர்த்தனாவிற்கு அவளுடைய தந்தை குமரகுரு, அஸ்வினிகுமார் என்ற வரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார். அடையாரில் உள்ள க்ரீன் ஃபாரஸ்ட் ரெஸ்டாரெண்டில் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ரெஸ்டாரெண்டை அடையும் கீர்த்தனா, அஸ்வினிகுமாரை கடை வாயில் ரத்தம் வழிய உயிருக்கு அபாயமான நிலையில் சந்திக்கிறாள். இன்ஸ்பெக்டர் கதிர்பாரதியின் உதவியுடன் அஸ்வினிகுமாருக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிக்க முயலும் கீர்த்தனாவிற்கு எதிர்பாராத பல விவரங்கள் தெரிய வருகன்றன. இன்ஸ்பெக்டர் உதவியுடன் கீர்த்தனாவால் உண்மையைக் கண்டறிய முடிந்ததா? என்பதை தமக்கே உரிய விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
Author: விமலா ராமணி
Publisher: நிலாச்சாரல் லிமிடெட் | Audience: Adult | 626KB, 129 p.
குடும்பப் பின்னலும், அவற்றின் அடிநாதமாய் ஓடும் கலாசாரப் பின்னணியும் விமலா ரமணியின் கதைகளில் வெகுவாய் காணக் கிடைப்பவை. கதை மாந்தர்களுடன் நம்மையும் இணைத்துப் பயணிக்கச் செய்யும் சுகானுபவம் இக்கதைகளில் கிடைக்கக் காணலாம். பாத்திரங்கள் பேசும் வசனங்களின் பின்னால் ஒலிக்கும் ஆசிரியரின் குரல்தான் எத்துணை பாந்தமானது!
Author: விமலா ரமணி
Publisher: | Audience: Adult | 384 KB, 48p.
குடும்பமென்னும் கோயிலில் தெய்வீகம் நிறைந்திருக்க, உறவுகள் என்னும் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் கட்டுண்ட உறவுகளுக்கிடையேயான எதிர்பார்ப்புகள், அடுத்தவரைப் பற்றிய கணிப்புகள் (அஹம் பிரம்மாஸ்மி), கடமையைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பின்மை (அம்பு படுக்கை), தடம் மாறி வந்த உறவுகளையும் நல்ல கோணத்தில் பார்க்கும் பண்பு (அட்சதை), தவறி வந்த உறவைத் தனிமையை போக்கும் மருந்தாய் மாற்றும் பாங்கு (பாவை நோன்பு) என ஒவ்வொரு சிறுகதையிலும் நம்மை கடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை அதன் தாக்கம் குறையாமல் நிறைவாய்ப் படைத்துள்ளார் ஆசிரியர்.