- Home
- Tamil Digital Heritage Collection
தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் மின்வடிவம்தான் இந்தப் பகுதியில் நீங்கள் காணும் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு. இத்தொகுப்பில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் போன்றவை அடங்கியுள்ளன. அவை அனைத்துமே சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்பட்டவை அல்லது சிங்கப்பூரைப் பற்றியவை. இதுபோன்ற ஒரு மின்தொகுப்பைத் தேசிய நூலக வாரியம் தமிழில் வெளியிடுவது இதுவே முதல் முறை. சிங்கப்பூரர்கள் அடங்கிய ஒரு சிறு குழு, இந்தத் திட்டத்தை முன்வைத்ததோடு அதற்குத் தேவையான சமூக ஆதரவையும் வளங்களையும் ஒன்றுதிரட்டிச் செயல்வடிவமும் கொடுத்தது. 22 ஆகஸ்ட் 2015 அன்று, சிறப்பு விருந்தினர், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம், பிரதமர் அலுவலக அமைச்சரும், உள்துறை, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சரும், திட்டத்தின் புரவலருமான திரு எஸ் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்தத் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு இந்த நாட்டிற்குச் சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் தேசிய நூலக வாரியத்தோடு தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கியுள்ளன. இந்தத் திட்டத்தை உருவாக்க உதவிய அனைவரின் பெயர்களும் நன்றிநவிலும் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
மின்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களின் அச்சுப் பதிப்புகளும் தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களில் கிடைக்கும்.
Tamil Digital Heritage Collection
The Tamil Digital Heritage (TDH) Collection you see in this section is the digital version of Singapore Tamil literature books published between 1965, when Singapore attained Independence, and 2015, when Singapore celebrated the 50th anniversary of that occasion. These books include poems, short stories, novels, plays and literary essays by Singaporeans or Singapore Permanent Residents or with content related to Singapore. This is the first time such a digital collection in Tamil has been launched by NLB. The original idea and the ground efforts for this project came from a small group of Singaporeans who mobilized community participation and resources to help realize this idea. The TDH Collection was offered to the nation as a gift from the Singapore Indian community on22 August 2015 in the presence of Guest of Honour, Deputy Prime Minister and Minister for Finance, Mr Tharman Shanmugaratnam and Mr S Iswaran, Minister, Prime Minister's Office and Second Minister for Home Affairs and Second Minister for Trade and Industry as well as the Patron of the TDH Project.
In addition to NLB, the principal host of this project, the National Heritage Board (NHB), the National Arts Council (NAC) and the National Book Development Council of Singapore (NBDCS) also actively supported this project. A list of all those who made this project possible is found at the Acknowledgment page here.
The print version of all the books in the digital collection are available at NLB libraries.
25 மாதங்கள் 25 விவாதங்கள் Rajit|ரஜித் (2008) ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் நற்பணிக்குழு 2008 ஆம் ஆண்டு படைத்த 25 பட்டிமன்ற நிகழ்வுகளின் தொகுப்பு.
50 மாதங்கள் 50 விவாதங்கள் ரஜித்|Rajit (2010) 2006 ஆம் ஆண்டு தொடங்கி 50 மாதங்கள் தொடர்ந்து தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் நடத்திய நிகழ்வுகளின் தொகுப்பு.
அகக்கண் திறப்போம் Arunacalam, Cita.|அருணாசலம், சித. (2008) இக்கவிதைத் தொகுப்பில் 66 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகள் இலக்கியச் சிற்பிகள், சிங்கப்பூர், இன்றைய உலகம், பழிக்கு ஆளாகும் பகுத்தறிவு, இயற்கை, இளைய சமூதாயத்திற்கு, உழைப்பு, சுற்றுப்புறம், காதல், பெண்மை ஆகிய பாடுபொருள்களில் அமைந்துள்ளன.
அடுக்கு வீட்டு அண்ணசாமி : நகைச்சுவை நாடகம். Vol. 1 Putumaitācan̲, 1932-|புதுமைதாசன், 1932- (2000) 9.3.1969முதல் 6.3.1970வரை வானொலியில் 52 வாரங்கள் (பாகங்கள்) ஒலிபரப்பாகிய நகைச்சுவை நாடகத்தின் எழுத்து வடிவம் இது. முதல் தொகுப்பாகிய இந்நூலில் 27 பாகங்களின் காட்சிகள் உள்ளன. பலமுறை மறுஒலிபரப்புக் கண்டுள்ள இந்நாடகத்தின் எழுத்து வடிவம் சிங்கை மக்களின் வாழ்க்கைச் சூழலை நகைச்சுவை உணர்வுடன் வெளிக்கொணர்கிறது.
அடுக்கு வீட்டு அண்ணசாமி : நகைச்சுவை நாடகம். Vol. 2. Putumaitācan̲, 1932-|புதுமைதாசன், 1932- (2000) 9.3.1969முதல் 6.3.1970வரை வானொலியில் 52 வாரங்கள் (பாகங்கள்) ஒலிபரப்பாகிய நகைச்சுவை நாடகத்தின் எழுத்து வடிவம் இது. முதல் தொகுப்பாகிய இந்நூலில் 27 பாகங்களின் காட்சிகள் உள்ளன. பலமுறை மறுஒலிபரப்புக் கண்டுள்ள இந்நாடகத்தின் எழுத்து வடிவம் சிங்கை மக்களின் வாழ்க்கைச் சூழலை நகைச்சுவை உணர்வுடன் வெளிக்கொணர்கிறது.
அணிகலன் : கவிதைத் தொகுப்பு Taṅkarācan̲, Mu.|தங்கராசன், மு. (1985) இந்நூலில் 30 மரபுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மனித வாழ்வியல் கூறுகளையும் நடைமுறைகளையும் உலகியல் நோக்கில் கவிதைகளாக்கப்பட்டுள்ளன.
அதன் பேர் அழகு Iḷaṅkō, Piccin̲ikkāṭu, 1952-|இளங்கோ, பிச்சினிக்காடு, 1952- (2010) இது கவிதைபற்றிய கருத்துகள்
அடங்கிய நூல். எப்படிக் கவிதை பிறக்கிறது, எப்படிக் கவிதை எழுதப்படுகிறது போன்ற
எழுத்து அனுபவங்களைக் விளக்கும் நூல். கவிதைபற்றிய பொதுவான கண்ணோட்டம் வழங்குவது இந்நூலின் நோக்கமாகும்.
அத்தைமகன் : நகைச்சுவை நாடகம் Taṅkarācan̲, Mu.|தங்கராசன், மு. (2007) இந்நகைச்சுவை நாடகம் 20 அரங்குகளை உடையது. சிங்கப்பூர்ப் பள்ளியில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் எழுத்து வடிவம்.
அந்த நாள் : சிங்கப்பூர் சிறுகதைகள் Cāli, Jē. Em., 1939-|சாலி, ஜே. எம்., 1939- (1998) இத்தொகுப்பில் சிங்கப்பூர்ப் பின்னணியில் எழுதப்பட்ட 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. முதல் சிறுகதையின் தலைப்பாகிய அந்த நாள் இந்நுாலுக்குத் தலைப்பாகவும் அமைந்துள்ளது. சீனக் கதாபாத்திரங்களும் சில சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன.
அந்த நான் இல்லை நான் Iḷaṅkō, Piccin̲ikkāṭu, 1952-|இளங்கோ, பிச்சினிக்காடு, 1952- (2011) கவிஞரின் தேடல்கள், உறுத்தல்கள், ஆற்றமை, ஆச்சரியங்கள், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளைக் கவிதையாக படைத்துள்ளார்.
அந்தப் பார்வையில் : நாவல் An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (2007) ஒரே வழக்கானாலும் நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் பெரும்பாலான தீர்ப்புகள் வேறுபடுகின்றன. அவைபற்றிய பார்வைகளும் வித்தியாசப்படுகின்றன என்னும் கருத்தில் எழுதப்பட்ட புதினம் இது. தமிழகத்தின் அரசியல், அதிகாரம், பொருளாதாரப் பின்னணியில் ஒரு விஞ்ஞானி எதிர்கொண்ட போராட்டத்தைப் புதினமாக்கியுள்ளார் நாவலாசிரியர்.
அமளி துமளி : நகைச்சுவை நாடகம் Carmā, Es. Es.|சர்மா, எஸ். எஸ். (1981) சிங்கப்பூரில் அரங்கேறிய ஒரு நகைச்சுவை மேடை நாடகம் இது. நாடகத்தில் அமளிதுமளிப்படுவது என்ன என்பதை அறிய நூலைப் படிக்குமாறு குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
அமுதத் தமிழ் தங்கராசன், மு.|Taṅkarācan̲, Mu. (2007) நாடு, மொழி, உண்மைகள், உணர்வுகள் என்னும் தலைப்புகளில் மாணவர்களுக்கான கட்டுரைகள் இலக்கிய மேற்கோள்களுடன் எழுதப்பட்டுள்ளன.
அமைதியான புயல் Seetha Lakshmi, 1965-|சீதா லட்சுமி (2003) சுமார் 41 மாணவ ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில், தெரிவுசெய்யப்பட்ட முதல் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் பரிசு பெற்ற சிறுகதையின் தலைப்பே, நூலுக்குத் தலைப்பாகவும் அமைந்துள்ளது.
அயலகத் தமிழ் இலக்கியம் : நீரும் நெருப்பும் Murukaṭiyān̲, 1944-|முருகடியான், 1944- (2008) நட்பு, பகை, விருப்பு, வெறுப்பு, போற்றுதல், தூற்றுதல், குமுறல், குழைதல் எனப் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இவை சிங்கை, மலேசியப் பத்திரிகைகளிலும் வானொலியிலும் இடம்பெற்ற படைப்புகளாகும்.
அலைகள் பேசுகின்றன Cāli, Jē. Em., 1939-|சாலி, ஜே. எம்., 1939- (2005) இந்நாவல் சிங்கப்பூர்ப் பின்னணியில் அமைந்துள்ளது. குமாரசாமி, அவர் முதல் மனைவி மதுரம், சீன மாதான அவருடைய இரண்டாம் மனைவி சாந்தம்மா ஆகியோரைப் பற்றிய குடும்பக்கதை இது.
அலைதரும் காற்று An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (1985) இந்நூலில் 41 மரபுக்கவிதைகளும் சந்தக் கவிதைகளும் 13 புதுக்கவிதைகளும் உள்ளன. ஒரு புதுக்கவிதையின் தலைப்பான அலைதரும் காற்று என்பதே நூலுக்கும் தலைப்பு. 1985ல் தமிழகத்தில் வெளிவந்த இந்நூல், அன்றைய தமிழகத்தின் குடும்ப வாழ்வு, அரசியல், திரையுலகம், இலக்கியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அவன் : சிங்கப்பூரன் சிறுகதைகள் Putumaippittan̲, Nāraṇa|புதுமைப்பித்தன், நாரண (1993) இந்நூல் சிறுகதைத் தொகுப்பாகும். அவன் எனத் தொடங்கும் 6 தலைப்புகளும் மூக்குத்தி, சின்ன வீடு போன்ற தலைப்புகளில் அமைந்த 8 சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
அழகோவியம் Murukatācan̲, 1944-|முருகதாசன், 1944- (1990) மரபுக்கவிதை வடிவில் இயற்றப்பட்ட குறுங்காவியம் இந்நூல். 1960களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த இந்தோனீசிய எதிர்ப்புணர்வையும், மலேசியாவில் சிங்கப்பூர் ஓர் அங்கமாக இருந்த காலக்கட்டத்தையும் களமாகக்கொண்ட கதை இந்நூல்.
அற இலக்கியச் சமுதாயம் : நான்மணிக் கடிகை Uṣā, Cu|உஷா, சு (2008) சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நான்மணிக்கடிகை என்ற அற நூல் காட்டும் சமுதாயக் கூறுகள், சமூகப் பழக்கவழக்கங்கங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது.
அன்பு எனும் தத்துவம் இஸ்லாம் Perumāḷ, Kā. (Kāḷiyaṇṇan̲), 1921-|பெருமாள், கா. (காளியண்ணன்), 1921- (1978) இஸ்லாமியக் கருத்துகள், தத்துவங்கள் பற்றிய கவிதைகள் தொகுப்பு.
அன்னை Ikpāl, Ka. Tu. Mu., 1940-|இக்பால், க. து. மு., 1940- (1984) சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தின் பாடிப் பழகுவோம் என்னும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான 54 சிறுவர் பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இசையுடன் சிறார்கள் பாடிய இவை, அவர்களுக்கு அறிமுகமான பல்வேறு பாடுபொருள்களில் எழுதப்பட்டுள்ளன.
ஆசை Ṣamcuttīn̲, En̲. Em.|ஷம்சுத்தீன், என். எம். (1984) இந்நூலில் 33 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஏழு கவிதைகள் மட்டும் சிங்கப்பூர் வானொலியில் ‘கவியரங்கம்’ என்னும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டவையாகும்.
ஆசை நெஞ்சங்கள் Ṣamcuttīn̲, En̲. Em|ஷம்சுத்தீன், என். எம். (1989) ஆசையுள்ளவனை ஆசை அழித்துவிடும் என்பதை விளக்கும் கதை நூல். ஆசை பெருகப் பெருகப் பொறுமையும் விட்டுக்கொடுக்கும் பண்பும் விலகும் என நூல் விளக்குகிறது.
ஆதலினால் கவிதை செய்தேன் பிச்சினிக்காடு இளங்கோ (2015) நூலாசிரியர் தாம் இதுவரை எழுதியுள்ள புத்தகங்களின் தனித்துவத்தையும், அவைகள் எழுத காரணமான பின்புலத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆயபுலம் : புதினம் An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (2009) பொருள் ஈட்டுவதற்காகச் சென்னையிலிருந்து கதாநாயகன் சிங்கப்பூருக்கு வந்தான். அவன் உழைத்துப் பெருஞ்செல்வம் ஈட்டினான். சிங்கப்பூரைப்போல் தான் பிறந்த ஆயபுலம் என்னும் கிராமத்தையும் மாற்ற வேண்டும் என்று விரும்பினான். கதாநாயகன் எதிர்கொண்ட சவால்கள்பற்றியும் அவன் தொழில் துறையில் முன்னேறிய விதம்பற்றியும் இந்நாவல் சித்தரிக்கிறது.
ஆயுள் தண்டனை : நாவல் Cāli, Jē. Em., 1939-|சாலி, ஜே. எம்., 1939- (2007) இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில் அமைந்த நாவல் இது. மருமகள் ஹபீபாவை வேலைக்காரியாக நடத்தும் மாமியார் நாச்சியார், மனைவிமேல் அதிக அன்பிருந்தும் தாய்க்குப் பயந்து அதை வெளிக்காட்டத் தயங்குகிறான் நாயகன் புகாரி.
ஆற்றோரத்தில் ஒரு மாளிகை Narayanan, M. K.|நாராயணன், எம். கே. (2000) எம் கே நாராயணன் அவர்களின் படைப்பில் வெளிவந்த மர்ம நாவல்.
இதய மலர்கள் : கவிதைகள் Ikpāl, Ka. Tu. Mu., 1940-|இக்பால், க. து. மு., 1940- (1975) இயற்கை, காதல், மொழி, நாடு முதலிய பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட 47 கவிதைகளும், தாமரை என்னும் தலைப்பிலான ஒரு குறுங்காவியமும் இத்தொகுப்பில் உள்ளன. அனைத்தும் மரபு யாப்பில் எழுதப்பட்டவை.
இதில் என்ன தப்பு? An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (2007) இந்நூலில் புதுமைப்பெண் சம்பூர்ணாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், சோதனைகள், அதனை அவள் வெற்றிகொள்ளும் விதம் ஆகியன, திரைக்கதை வடிவில் எழுதப்பட்டுள்ளன.
இது எப்படி இருக்கு? Mākō|மாகோ (2009) இலக்கியம், வரலாறு, அறிவியல், ஆன்மீகம், நகைச்சுவை, சிங்கப்பூர், உலகம் எனப் பல்வேறு துணுக்குகள் அமைந்த தொகுப்பு இந்நூல்.
இந்து சமயக் கவிமலர்கள் Muttumāṇikkam, Kaviñar, 1928-|முத்துமாணிக்கம், கவிஞர், 1928- (1995) இந்நூலில், சிங்கப்பூர், மலேசிய மக்கள் அறிந்த இறைவடிவங்கள், அடியார்கள் பற்றிய பாடல்கள் உள்ளன.
இயேசு கிறிஸ்து பாமாலை Muttumāṇikkam, Kaviñar, 1928-|முத்துமாணிக்கம், கவிஞர், 1928- (1995) இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன. இயேசுவின் புகழ்பாடும் இப்பாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன.
இரவின் நரையில் : கவிதைகள் Iḷaṅkō, Piccin̲ikkāṭu, 1952- (2004) இது ஒரு புதுக்கவிதைத் தொகுப்பு. ஒரு கவிதையின் தலைப்பாகிய இரவின் நாரை இந்நுாலுக்குத் தலைப்பாகவும் அமைந்துள்ளது. சிங்கப்பூர், சிராங்கூன் சாலை, ஹெண்டர்சன் சாலை முதலியன கவிதைகளின் பாடுபொருள்களாக அமைந்துள்ளன.
இருமுறை சிரிக்க இரட்டைச் சிரிப்புகள் Imājān̲, Ṭ. En̲.|இமாஜான், டி. என். (2004) இந்நூலில் ஒரு சிரிப்புத் துணுக்குக்கு இருவித முடிவுகள் அமைந்துள்ளன. இரண்டு துணுக்குகளும் மாறுபட்ட ரசனையைத் தூண்டும்படியாக அமைந்துள்ளன.
இலக்கியக் காட்சிகள் Putumaitācan̲, 1932-|புதுமைதாசன், 1932- (1990) இந்நாலில் 8 இலக்கியக்காட்சிகள் உள்ளன. இவற்றுள் 7 வானொலிக்கென எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் மட்டும் மேடைக்கென எழுதப்பட்டுள்ளது.
இறையருள் தரும் தமிழ்ப் பாடல்கள் Akilamaṇi Srīvityā|அகிலமணி ஸ்ரீவித்யா (2011) இந்நூல் 55 தலைப்புகளில் அமைந்த பக்திப் பாடல்கள்கொண்ட தொகுப்பாக விளங்குகிறது. சிங்கப்பூரிலுள்ள கோவில்களின் கடவுள்களையும் விழாக்கள்பற்றிய செய்திகளையும் இக்கவிஞர் எழுதியுள்ளார்.
இனியவளே Carmā, Es. Es.|சர்மா, எஸ். எஸ். (1990) சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் ஆகிய 3 நாடுகளிலும் நிகழும் சம்பவங்களைக் கருப்பொருளாகக்கொண்டு இந்நாவல் அமைந்துள்ளது. இது மரபுவழி வரம்பை மீறுவதாகப்படலாம் என நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இன்பத் திருநாடு Taṅkarācan̲, Mu.|தங்கராசன், மு. (2010) இந்நூல் சந்தக் கவிதை தொகுப்பாகும். இதில் 60 கவிதைகள் அடங்கியுள்ளன. சிங்கப்பூர் நாட்டை மையமாகக்கொண்டு நாடு, இறைமை போன்ற பாடுபொருள்களில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
இன்பநலக் காடு Ikkuvan̲am, Vi.|இக்குவனம், வி. (1994) இக்கவிதை நூல் 275 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரின் வரலாற்றில் திரு லீ குவான் இயூ அவர்களின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் அவரைப் பாராட்டி எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இன்னும் கேட்கிற சத்தம் An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (2007) தமிழகத்தின் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தம் சிறுவர்கால நினைவுகளைத் தற்போது சிங்கப்பூரில் வாழும் நூலாசிரியர் உரைவீச்சில் எழுதியுள்ளார். 1950களில் தாம் வாழ்ந்த கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், சொற்கள்பற்றிக் குறிபிட்டதோடு வாழ்வியல் மற்றும் பண்பாட்டுச் செய்திகளையும் பதிவுசெய்துள்ளார். இத்தொகுப்பில் மொத்தம் 116 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமிய கீதங்கள் Muttumāṇikkam, Kaviñar, 1928-|முத்துமாணிக்கம், கவிஞர், 1928- (1995) இஸ்லாம் பற்றித் தாம் பாடிய 40 இசைப்பாடல்களைத் தொகுத்துள்ளார் ஆசிரியர்.
உடன்படு சொல் : பேச்சும் உரைவீச்சும் An̲pal̲akan̲, Mā., 1943-|அன்பழகன், மா., 1943- (2006) சிங்கப்பூரில் 2000முதல் 2007வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கவிஞர் ஆற்றிய சொற்பொழிவுகள், கவியரங்கக் கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். இதில் 13 உரைவீச்சுகள் ( கவியரங்கக் கவிதைகள்), 10 நூல் வெளியீட்டு உரைகள் இடம்பெற்றுள்ளன.
உணர்வுகளின் ஊர்வலம் = Parade of feelings Macūtu, Mu. A.|மசூது, மு. அ. (1995) இந்நூல் ஒரு கவிதைத் தொகுப்பு. பார்வைகள், நினைவில் நிற்பவர்கள், இயற்கை, நாடும் நாமும் என்னும் தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தமிழின் சிறப்பையும் சிங்கையின் செழிப்பையும் கவிதைகள் சுட்டுகின்றன.
உதயத்தை நோக்கி Cuntararācu, Pon̲., 1947-|சுந்தரராசு, பொன்., 1947- (1990) இத்தொகுப்பில் 6 நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை சிங்கப்பூர்ச் சூழலில் மக்களின் அன்றாட வாழ்வில் நிகழும் சமூக, குடும்பப் பிரச்சினைகளைக் கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன. அன்றைய தேசியக் கொள்கைகள், பெண்களின் முற்போக்குக் கொள்கைகள், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் மனக்கசப்புகள் போன்றவற்றை இவை சித்தரிக்கின்றன.
உதயம் : கவிதைத் தொகுப்பு Taṅkarācan̲, Mu.|தங்கராசன், மு. (1988) 30 கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. உண்மைகள், உணர்வுகள், நாடு, விழாக்கள், உருவகங்கள் ஆகிய 5 பாடுபொருள்களில் அமைந்துள்ளன.