130 record(s) found
அப்துல் கலாம் அவர்களுடைய குணாதியங்களை மையப்படுத்தி உருவான அவரது வாழ்க்கை வரலாறு நூல். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடித்த ஒரு நூல் இது.
வரலாற்றுக் குறுநாவலாக எனது முதல் முயற்சி. பாண்டிய நாட்டைப் பற்றி வரலாற்று நாவல் வடிக்கும் எனது ஆர்வத்தில் விளைந்த முதல் கனி. பாண்டிய நாட்டுக்குட்பட்ட ஒரு குறுநில மன்னனின் மகனான இளம்பரிதி, தனது நாட்டுக்காகக் கடமை ஆற்றும் தருணம் , தனது காதலைக் கண்டுணர்கிறான். ஆம்பல் என்ற அந்த அழகான பெண், அவனுடைய காதலுக்கு உரியவளா இல்லை அவனை வீழ்த்த வந்த மோகினியா என்று திகைத்து நிற்கிறான். பாண்டிய நாட்டுப் பின்னணியில் அழகான காதல் கதை இது.
இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர். விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன. இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு. கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர். இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
"காவிரி நனைத்துச்சோறுடைத்த சோழ தேசம்..." அந்தப்பொன்னி நதியாலேயே காப்பற்றப்பட்டதாகச்சொல்லப்படும் பொன்னியின் செல்வன் என்றும் அருள் மொழி வர்மன் என்றும் பேர் பெற்ற உடையார் ராஜராஜ சோழன்.... ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் தமிழ் நாகரீகத்தை உலகுக்குப்பறைச் சாற்றிக் கொண்டிருக்கும் கற்றளி..." ராஜராஜன் எழுப்பிய தஞ்சைப்பெரிய கோவில்... இதை வைத்து பேராசிரியர் கல்கியும் பாலகுமாரனும் மாபெரும் சரித்திர நவீனங்களை நமக்குத் தந்திருக்கின்றனர். அவர்கள் போட்டுக்கொடுத்த ராஜ பாட்டையில் நானும் ஒரு சின்ன முயற்சி செய்திருக்கிறேன். தஞ்சைப்பெரிய கோவிலின் ஏதோ ஒரு வாசல் கோபுரத்தில் தொப்பி போட்ட ஆசாமியின் சிலை இருப்பதைப்பார்த்திருக்கிறீர்களா? சரி, பார்க்காவிட்டாலும் பாதகமில்லை. அட்டையில் ஃபோட்டோவையாவது பார்த்துத்தொலைத்துவிட்டு இந்தக்கதைக்குள் புகுந்து சரித்திர அமுத்தை நுங்குங்கள்!! யார் இந்த தொப்பி ஆசாமி? நம் நூற்றாண்டுத்தொப்பி அணிந்த இவன் உருவம் எப்படி அன்றே செதுக்கிய சிலையில்..? இந்த முடிச்சைப்பிடித்து யோசித்து கற்பனையில் எழுப்பப்பட்டதே இந்த குறுங்கதை. "ஏன்யா சரித்திரக்கதைங்கறே! அதுக்கு ஆதாரம், சான்றுகளெல்லாம் கிடையாதா என்று சிலர், சரி பலர், கேட்பீர்கள். இந்த புதினத்தின் சரித்திர சான்றுகளுக்கு "சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப்பண்டாரத்தாரின் பிற்காலச்சொழர்கள், அருளுடைச்சோழ மண்டலம் – N . சேதுராமன்" படிக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பற்றிய குறிப்பை புதினத்தின் கடைசியில் தான் எழுதப்போகிறேன். வெயிலுமில்லாத மழையுமில்லாத ஒரு காலைப்பொழுது, ஜெயராமன் ரகுநாதன் தொடர்புக்கு: jraghu1956@gmail.com.
படைப்பிலக்கியத்தில் கவிதைக்கு அடுத்ததாகச் சிறந்து விளங்குவது சிறுகதை. சிறுகதை எழுதுவது இலேசன்று. எழுத்தாற்றல் ஒரு பக்கம் இருக்கட்டும். கருப்பொருளைத் தேடி அதை உருவாக்கி மாளிகை அமைப்பது 'தனிக்கதை' தான். சிறுகதை இலக்கியம் இன்று வளர்ந்திருக்கிறது. மேலும் உலக இலக்கியங்களுக்குச் சமமாக அதை நிலை நிறுத்தப் பல எழுத்துச் சிற்பிகள் முன்நிற்கிறார்கள். இசைக்குப் பல இராகங்கள் இருப்பது போல் சிறுகதையும் பல வகைப்பட்டுத் திகழ்கிறது. சிறுகதைகளுள் வரலாற்றுச் சிறுகதையும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. வரலாற்றுக் கதைகள் என்று தனியே பாகுபாடு செய்யக் கூடாது என்றாலும் இன்று வரலாற்றுச் சிறுகதை, விஞ்ஞானச் சிறுகதை (லயன்ஸ் ஃபிக்ஷன்) என்ற வகை பிரிக்கப்படுகின்றன. இன்றைய சமூகம் நாளைய வரலாறு. நேற்றுச் சமுதாய நிகழ்வுகள் இன்று வரலாறாக மாறுகின்றன. மனிதநேயமும், பண்பும், நாட்டில் எப்போதும் போலவே இருக்கின்றன. அரசர்கள் ஆட்சி புரிந்தனர். இன்று மக்கள் ஆட்சி என்றாலும், அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்திச் செல்பவர்கள் பலர் அரசர்களுக்குள்ள பண்பும், குணமும் கொண்டு இருக்கிறார்கள் ஆண்டான் அடிமை அடிமை வேறு வேடத்தில் உலவுகிறது ஏற்றத்தாழ்வு மாறவில்லை. மண்ணாசை, பொன்னான பெண்ணாசை. அதிகார ஆசை, நாட்டைக் கவரும் ஆசை ஏதாவது ஒரு வடிவில் உலவி வருகிறது. ஆக, கதைக்கான கரு உருவாக ஆண்டுகளே வித்தியாசம். தமிழ்நாட்டின் வரலாற்றை இலக்கியக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கினால் சங்ககாலம் தான் பழைமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சங்ககால மன்னர்களைப் புலவர்கள் படைத்த இலக்கியங்களால் தான் அறிய முடிகிறது. அவர்கள் வாழ்ந்த இடம், குலவிய மாதர்கள், பெற்ற குழந்தைகள், பூசல்கள், நடத்திய போர்கள் இவற்றிற்கெல்லாம் குறிப்பேடு ஏதுமில்லை. பாடல்களே சான்றாகக் கூறுகிறார்கள். கல்வெட்டு, பட்டயம், சாசனம், கோயில்களுக்கு அரசன் அளித்த வரியில்லாத நிலம், பொன், தீபம் ஏற்ற நெய், அதற்காக ஆடு, பசுக்கள் ஆகியவற்றிற்குக் குறிப்பு உண்டு. தனிப்பட்டவர்கள் அளித்த கொடை, நாள் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு, செப்புப்பட்டய ஆதாரங்களில் வரலாறு எழுதப்பட்டது போக, எழுதப்படாத வரலாற்றிலிருந்து மெல்லிய ரேகையை எடுத்து உருவகப்படுத்தி காப்பியங்கள், நாவல்கள் புனைந்தார்கள் புலவர்கள், எழுத்தாளர்கள் அதனால் ஐம்பெருங்காப்பியங்கள் வரலாற்றுப் புதினங்கள் உதயமாயின. வரலாற்றுப் புதினங்களிடையே ஊடுபாய்வது போல், வரும் முக்கிய நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதலாம்.
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக் கலையிலும், சிற்பக் கலையிலும் தேர்ச்சி பெற்ற நர்த்தகியாக காட்டப்படும் அபிமானவல்லி எதிர்மறை பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது விறுவிறுப்பைக் கூட்டுகிறது. காஞ்சியில் மகுடாபிஷேகம் செய்து சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியது என திடீர் திருப்பங்களுடன் அமைந்துள்ளது. ஆதித்த சோழன் மகன் கன்னர தேவன் ஆன்மிகத்தில் ஈடுபட்டது; நம்பி, குறளப்பர் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தது போன்ற நிகழ்வுடன் சுவாரசியம் தரும் நுால்.
கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். 'செல்லப்பா தமிழ் டயரி' என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
வரலாற்றைப் பின்னணியாக வைத்துப் பல கட்டுரைகளும் சிறுகதை களும் எழுதியவர் தி.நா. சுப்பிரமணியம். ஒருமுறை அவரிடம் நான் சரித்திரக் கதைகள் எழுத ஆசைப்படுவதாகச் சொன்னபோது, 'வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலம் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதற்கான தகவல்களும் வண்டி வண்டியாகக் கன்னிமரா லைப்ரரியில் கிடைக்கும். அதை வைத்து எழுது' என்றார். சென்னை கார்ப்பரேஷனின் மூன்றாவது நூற்றாண்டையொட்டி ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டுரையில், சென்னை நகரில் அடிமை வியாபாரம் நடந்ததாக ஒரு கட்டுரை படித்தேன். எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் என்பவர் அந்த நாளில் சின்னச் சின்ன வாக்கியங்களில் விறுவிறுப்பாகக் கதை கட்டுரைகள் எழுதி வந்தார். அவருடைய நடை என்னை மிகவும் கவர்ந்தது. எடிட்டர் எஸ்-ஏ. பி. அவர்கள் 'The Man From Rio' என்ற ஆங்கில படத்தைப் பார்த்துவிட்டு வந்து, அதில் வரும் உல்லாசமான, உற்சாகமான, ஆபத்துக்களைச் சிரித்துக் கொண்டே எதிர்நோக்கும் ஹீரோவைப் போல 'அடிமையின் காதல் ' கதாநாயகனைப் படைக்கும்படி யோசனை சொன்னார். இவை எல்லாமாகச் சேர்ந்ததுதான் ''அடிமையின் காதல்'' முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வரை கதாநாயகனுக்குச் சரியான பெயர் கிடைக்காமல் காஞ்சிபுரத்தான் என்று குறிப்பிட்டு வந்தேன். பிறகு அதையே நிரந்தரமாக வைத்து விட்டேன். தி.மு.க. கட்சியும் அறிஞர் அண்ணாவும் ஆட்சிப் பீடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயமாகையால் 'காஞ்சிபுரத்தான்' என்ற பெயருக்கு மவுசு கூடியது. - ரா.கி. ரங்கராஜன்.
அணையா விளக்கு மேவார் ராணா கும்பாவின் பல முகங்களாய் வெளிப்படும் குணாதிசயங்களை மட்டுமின்றிப் பெண்களின் நளினம், அஞ்சா நெஞ்சம், நியாயத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் தெளிவான சிந்தனை ஆகியவற்றையும் சொல்லுகிறது. ராணாகும்பா பெண்களிடம் காட்டிய மரியாதையும் சிறப்பாக வெளிப்படுகிறது. கும்பராணாவை இத்தனை உயர்வாக எந்தக் கதாசிரியரும் சித்தரித்து நான் படித்ததில்லை. அதற்காகவே கதாசிரியை நம் மதிப்புக்கு உரியவராகிறார். இந்தப் படைப்புகளின் மூலம் சரித்திரகாலச் சிறப்புகளையும் நற்பண்புகளுக்கு அளிக்கப்பட்ட மதிப்புகளையும் அழுத்தமாக வாசகர்கள் மனதில் சுவாரஸ்யம் குன்றாமல் பதியவைக்கிற ஆசிரியைப் பாராட்டுக்குரியவர். இந்தக் குறுநாவல்களைப் படித்த பிறகு நான் மேவாரில் பிறந்தவள் என்பதை நினைத்துப் பெருமிதம் கொள்ளுகிறேன். -லஷ்மிரமணன்.
வணக்கம் வாசகர்களே!கிட்டத்தட்ட 1590-ஆம் ஆண்டு காலகட்டத்து தமிழக வரலாற்றை Show lessமுழுக்க முழுக்க நிஜமான சம்பவங்களோடு சரித்திரப் பின்னணியோடு சொல்ல வருகிறேன்."அரண்மனை ரகசியம்'' என்ற பெயரில் ஆரம்பமாகும் இந்த வரலாற்றுத் தொடர் நிச்சயம் பல உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டும். செய்யப்படுவதல்ல சரித்திரத் தொடர்கதை; சொல்லப் படுவதே சரித்திரத் தொடர்கதை.நம்முடைய தமிழ்மன்னன் ராஜராஜ சோழனும், பர்மா வரை புகழ்க்கொடி ஏற்றிய ராஜேந்திர சோழனும் வாழ்ந்து விட்டுப் போனபின் அந்த வீரத்தமிழினப் பரம்பரை முடிவுக்கு வந்தபின், நம் தமிழகத்தின் நிலை என்ன? அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் வந்து நுழையும் வரைக்கும் தமிழகத்தின் முக்கிய அரசியல் நிலவரம் எப்படி இருந்தது? யார் வசம் கிடைத்தது? எப்படித் திரிந்தது? என்ன ஆயிற்று? எங்கே எழுந்தது? விழுந்தது? என்பன போன்ற பல கேள்விகள் மனதைக்குடைய இந்த உண்மையிலும் உண்மையான காலகட்டம் என் கண்களுக்குப் புலனானது.12-ஆம் நூற்றாண்டு வரை சோழவம்சம் பெரும் செல்வாக்கோடு பவனி வந்தது என்றாலும் அதன்பின் உள்உறவுகளில் துரோகங்கள், காட்டிக் கொடுத்தல், அரசியல் சூழ்ச்சி காரணமாய் மெல்ல மெல்ல தமிழின மன்னர்கள் புகழ் ஒடுங்கி, பராக்கிரமம் அற்றவர்களாய் சிதறிப் போகிறார்கள். ஒரு படையெடுப்பில் ஜெயிக்கும் மன்னன் எதிரி மன்னனது குடும்பத்தை கூண்டோடு அழித்தலும், அவனது கோட்டை கொத்தளம்-வாழ்க்கை-வாரிசு ஆகிய சுவடுகள் மிச்சமின்றி தீக்கிரையாக்கலும்தான் இந்த வம்சா வழி மன்னர் வாழ்வுக்கான முடிவுரையாகி இருக்கிறது.சிதறிய மன்னர்களின் குறுநில ஆட்சி பலவீனத்தைப் பயன்படுத்தி, அக்கால கட்டத்தில் தமிழகத்தில் எல்லையில்லாக் கொள்ளைகளை வடநாட்டு மன்னர்களும், பிற மொகலாய புருஷர்களும் நிகழ்த்த, தென்னாடு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அந்த சமயத்தில்தான் விஜயநகர சாம்ராஜ்யத்தின் விஸ்வரூப எழுச்சி நிகழ்கிறது. விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயரின் பெரும் வருகைக்குப் பிறகு தமிழக சரித்திரம் மாறுகிறது. புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்படுகிறது. இவற்றை விரிவாகவும் இத்தொடரில் சொல்ல இருக்கிறேன். அப்போது தென்னாட்டில் நடந்த அரசியல் சதுரங்கம் "இன்றை'' விட சுவாரஸ்யமாகவும், பயமுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.இவ்வளவு காலம் எப்படி இந்தக் கதைக்களம் சரித்திர ஆசிரியர்கள் பார்வையில் விடுபட்டது என்று தெரியவில்லை. அதை நல்ல வாய்ப்பாக இங்கே பயன்படுத்திக் கொள்கிறேன். இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களின் உருவங்களை பல சிற்ப ஆய்வுகள் மற்றும் அழிந்த ஓவியங்கள் வாயிலாக கண்டறிந்து அந்த உருவங்களை உங்கள் கண்முன் சமர்ப்பிக்கிறோம். தொடரை வாசிக்கையில் அந்த உண்மை மனிதர்களே உள்ளத்துக்குள் வந்து போவார்கள் என்ற வாசிப்பு ருசிக்காக...!இந்தத் தொடர் எழுத முக்கிய காரணம் பல சரித்திர கல்வெட்டுகளை, பல வரலாற்றுச் சுவடிகளை தன் நுண்ணறிவால் கற்றறிந்த தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் அறிவுப் பொக்கிஷமான திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள்தான். அவர்மூலம் கிட்டிய பல அரிய தகவல்களை அடித்தளமாகக் கொண்டு பல உண்மைச் சம்பவங்களை இணைத்துதான் இந்த தொடர் எழுதும் உத்வேகம் பிறந்தது. தஞ்சையில் ஆய்வுகள் செய்ய, குறிப்புகள் எடுக்க, பல உதவிகள் செய்தவர் தஞ்சை செழியன்.போர்-அரசியல்-முத்தம்-கட்டில்-அரசவை-கவிதை-ராஜதந்திரம்-அழகிகள்-கொலை-மதிநுட்பம்-ரத்தம்-ஆன்மீகம்-தமிழகம்-கத்தி-பக்தி-கற்பனை-மோதல்-வஞ்சம்-பழி-காதல்-சிற்றின்பம்-உக்கிரம் என இவ்வளவு கலவையுடன் இந்தத் தொடரை உங்கள் வாசிப்பு வளர்க்கும் என்ற நம்பிக்கையில் துவங்குகிறேன்.உயிர்த்துடிப்புள்ள வரலாற்றை வாசியுங்கள்-வாழ்த்துங்கள்-விமர்சியுங்கள்.துவக்கத்துடன்,பா.விஜய்.
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
சதியால் கொல்லப்பட்ட அரசனின் மர்ம மரணத்தை ஆதித்தன் தன் பாணியில் கண்டுபிடிப்பதுதான் கதை.
என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன். வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே. உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள். என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி, வணக்கம்.
இது என்னுடைய மூன்றாவது வரலாறு சார்ந்த குறுநாவல். இம்முறை சேரர்களை கற்பனையில் சிறையெடுத்தேன். இந்த" சேரமான் வஞ்சி" குறுநாவலும், "செம்புலப் பெயல் நீராய்" என்னும் சரித்திரச் சிறுகதையும், ஸ்ரீ அனந்த நாராயணன் சிறுகதைப்போட்டியிலும் குறுநாவல் போட்டியிலும் பரிசு பெற்றவை. இத்துடன் "வீரம் வெளைஞ்ச மண்ணு", "மந்திரோபதேசம்", "வெற்றிச் செல்வி" சிறுகதைகளும் கூட உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமென நம்புகிறேன்.
Vikiraman is known more for his novels, particularly historical novels. He is perhaps the only Tamil writer who has tried his hand in almost every genre, in addition to novel and short story, drama, poetry, travelogue and essay. He has also written stories for children and books on history for the youth in simple Tamil.With more than 150 short stories in 62 years to his credit, Vikiraman continues to write fiction for Ilakkiya Peetam, which he presently edits. Although he has received many accolades including the Kalaimamani title from the Tamil Nadu Government and an award from Tamil University, Thanjavur, for his literary achievements.
Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work "Buddharin Punnagai" - a Tamil short story. This story was published in "Swadesamitran" – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in "All India Radio" and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward "Gautama Buddha" he had penned down the detailed Life History of Buddha which was published in "Mutharam Tamil Weekly" as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book "BuddharPiran". He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
எல்லையோர கிராமத்திற்கு பன்றி வேட்டையாட வரும் இளவரசன் திடிரென காணாமல் போகிறான்.அவன் அங்குள்ள ஒரு மலைவாசி பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறான். எதிரிகளால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இளவரசனை காப்பாற்ற வந்து சேர்கிறான் ஆதித்தன்.அவன் இளவரசனை காப்பாற்றி அவனது காதலை நிறைவேற்றி வைத்தானா என்பதுதான் கதை.
P. Muthulakshmi has written many famous religious books.
Vikiraman is known more for his novels, particularly historical novels. He is perhaps the only Tamil writer who has tried his hand in almost every genre, in addition to novel and short story, drama, poetry, travelogue and essay. He has also written stories for children and books on history for the youth in simple Tamil.With more than 150 short stories in 62 years to his credit, Vikiraman continues to write fiction for Ilakkiya Peetam, which he presently edits. Although he has received many accolades including the Kalaimamani title from the Tamil Nadu Government and an award from Tamil University, Thanjavur, for his literary achievements.
Vikiraman is known more for his novels, particularly historical novels. He is perhaps the only Tamil writer who has tried his hand in almost every genre, in addition to novel and short story, drama, poetry, travelogue and essay. He has also written stories for children and books on history for the youth in simple Tamil.With more than 150 short stories in 62 years to his credit, Vikiraman continues to write fiction for Ilakkiya Peetam, which he presently edits. Although he has received many accolades including the Kalaimamani title from the Tamil Nadu Government and an award from Tamil University, Thanjavur, for his literary achievements.