130 record(s) found
மராத்திய மண்ணில் பிறந்து, தஞ்சை மண்ணில் ஆட்சி புரிந்து மக்களின் மனங்களை வென்றவர்! எல்லா செயல்களிலும் தன் பெயரை நிலைநாட்டி ஆளுமைத் தன்மையுடன் விளங்கியவர்! தமிழுக்குத் தொண்டாற்றியவர்! அவர்தாம் தஞ்சைக்குப் புகழாரம் சூட்டிய மாமன்னர் "இரண்டாம் சரபோஜி" ஆவார். அம் மன்னருடைய வாழ்க்கை வரலாறு தான் "சரித்திர நாயகன் இரண்டாம் சரபோஜி"என்னும் வரலாற்று நூலாகும். உலகப் புகழ்ப் பெற்றுள்ள, சரசுவதி மகால் நூலகம், மராட்டிய அரண்மனை, மனோரா கோட்டை, சார்ஜா மாடி, கோவில்கள், முதலியவற்றைத் தோற்றுவித்தவர்!இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னரின் சிறப்புகளை திருமதி. இரா.இந்திராபாய் அவர்கள் தக்க வரலாற்று ஆதாரங்களுடன் சுவைபட எடுத்தியம்பியுள்ளார். அருமையான சரித்திர நூல் - குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் நூல். எழுத்துலகிற்குப் பெருமை சேர்க்கும் இனிய நூல் என்றால் மிகையாகாது!.
"மன்னா... இதென்ன விபரீத யோசனை? அரசாங்கம் சாராயக் கடைகள் நடத்துவதா? சரித்திரத்தில் இதுவரை கண்டிராத யோசனையாகவும் அல்லவா இருக்கிறது? படு கேவலமான யோசனையாகவும் இருக்கிறதே...! நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?" "இங்கேதான் நீர் எமது ராஜதந்திரத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரே திட்டத்தில் பல கனிகளைக் கொய்பவன் இந்த மணிமாறன். மக்கள் சாராயத்தை நிறையக் குடிக்கட்டும். விளைவாக குறைவாகச் சாப்பிடுவார்கள். உணவுப் பஞ்சம் தீரும். இது ஒரு கனி." "அடடே..." "சாராய விற்பனையை அரசே நடத்துவதால் நமக்கும் கஜானா நிறையும். இது இரண்டாவது கனி." "ஆஹா... பிரமாதம் அரசே..." "குடிசாராயம் சாப்பிடும் மக்கள் சீக்கிரத்தில் உயிரை விடுவதால் நாட்டில் ஜனத்தொகையும் குறையும். இது மூன்றாவது கனி." பெருமையாகப் பார்க்கிறான் மணி. "எப்படியுள்ளது சாத்தனாரே எமது முக்கனித் திட்டம்?" "ஆஹா... அபாரம் அரசே. தங்களைப் போல மதி நிறைந்த மன்னரைச் சரித்திரம் கண்டதில்லை!"
வரலாற்றுக் குறுநாவலாக எனது முதல் முயற்சி. பாண்டிய நாட்டைப் பற்றி வரலாற்று நாவல் வடிக்கும் எனது ஆர்வத்தில் விளைந்த முதல் கனி. பாண்டிய நாட்டுக்குட்பட்ட ஒரு குறுநில மன்னனின் மகனான இளம்பரிதி, தனது நாட்டுக்காகக் கடமை ஆற்றும் தருணம் , தனது காதலைக் கண்டுணர்கிறான். ஆம்பல் என்ற அந்த அழகான பெண், அவனுடைய காதலுக்கு உரியவளா இல்லை அவனை வீழ்த்த வந்த மோகினியா என்று திகைத்து நிற்கிறான். பாண்டிய நாட்டுப் பின்னணியில் அழகான காதல் கதை இது.
கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். 'செல்லப்பா தமிழ் டயரி' என்ற இணையதளத்தின்மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.
Nagasubramanian Chokkanathan (born January 17) better known by his pen name N.Chokkan is a Tamil Writer who has written two novels and nearly 100 short stories. His works has been translated into other Indian languages. Apart from this, he has written columns in several Tamil magazines. His interest for writing came from his blind aunt for whom he used to read a lot of books. His love for Books then made him to write few detective stories,which are not yet published.His first short story was published in 1997. His entry into Non-fiction area was kick started by a publishing house approaching him to write Biography of Sachin Tendulkar.He then wrote Biographies of famous Businessmen,Politicians and people who shaped the world.The list includes Narayana murthy, Azim Premji, Dhirubhai Ambani, Walt Disney, Charlie Chaplin,to mention a few.
அப்துல் கலாம் அவர்களுடைய குணாதியங்களை மையப்படுத்தி உருவான அவரது வாழ்க்கை வரலாறு நூல். அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த நூல்களில் முக்கியமான இடத்தைப் பிடித்த ஒரு நூல் இது.
சோழ மன்னர்களில், 'மாமன்னன்' என்ற அடைமொழியுடன் வாழ்ந்தவர்கள் 'மாமன்னன் கரிகால் சோழனும்', 'மாமன்னன் இராசராச சோழனும்' தான். அதனால்தான் இராசராச சோழனைப் பற்றிய பல நூல்கள் இருந்தாலும், கரிகால் சோழனைப் பற்றி எழுத விருப்பம் கொண்டேன். இது ஆய்வு நூலும் அல்ல; ஆய்வுக்குரிய நூலும் அல்ல. சோழர்களைப் பற்றி அறிய உதவும் ஓர் எளிய நூல். இந்நூலை என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, அனைவரும் அறிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எழுதி உள்ளேன்.
கணேஷ்ராஜ், வயது 45. சுமார் 5ஆண்டுகள் தினமலரிலும், தற்போது 11 ஆண்டுகளாக தினகரனில் மாவட்ட தலைமை நிருபராகவும் பணிபுரிந்து வருகிறேன். கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறேன்.
இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர். முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர். சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண்டு கவிதை நூல்கள் "விழிதூவிய விதைகள்" மற்றும்" ஒரு கோப்பை மனிதம்"என மூன்று நூல்களின் ஆசிரியர். ஒரு கோப்பை மனிதம் என்னும் நூலுக்காய் வளரி என்ற அமைப்பால் சிறந்த நூலாசிரியராக தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டவர். நூலாக்கப்படவேண்டிய பல பதிவுகளை தன்னுடைய வலைப்பூ மூலம் விதைத்து வருபவர். பணியின் காரணமாய் புதுக்கோட்டையில் வசிப்பவர். புதுகையின் பெண்கவிஞர்களுள் முக்கியமானவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணினி தமிழ்ச்சங்க அடிப்படை நிர்வாகிகளுள் ஒருவராகவும்,வீதி கலை இலக்கியக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். பல சுயமுன்னேற்ற உரைகளை,கவியங்கங்களில் கவிதைகளை,பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். காணும் யாவையும் கவிதைகளாகவும்,அவலங்களை அமிலமாகவும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
பதிமூன்று தலைமுறையாக மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இந்த மணிமுடியும் உடைவாளையும் தேடிக் கொண்டிருக்கிறான். அதை அவன் அடைந்து எடுத்து சென்று தன் சபதத்தில் வெற்றி அடைய விடக் கூடாது என்று சோழர்களின் வாரிசுகள் சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். பாண்டிய அரசர்களின் அட்டவணையில் சுந்தர பாண்டியன் பதிமூன்றாவது மன்னன். எனவே மூன்றாம் ராசராசனை எதிர்த்த சுந்தர பாண்டியன் இந்த காலக்கட்டத்தில் மாறனாக வருகிறான்.அநபாய சோழனின் உதவிக்கு, பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையராக, இன்றைய அநபாயனின் தந்தை பேராசிரியர் அமுதவாணனும் தெலுங்கு சோடர்கள் என்னும் சோழர்களும் மாறனின் உதவிக்கு ரவிதாசனும் ஈழத்து விஜயபாகுவின் மகள் விஜயலக்ஷ்மியும்பாண்டிய ஆபத்துதவிகளும் துணை நிற்கின்றனர். இதனிடையே, இன்றைய அநபாயனின் இந்நாள் காதலியான காயத்ரியும் அவள்குடும்பத்தினரும் மட்டும் கதை மாந்தர்கள். கற்பனைப் பாத்திரங்கள்.பாண்டியர்களின் மணிமுடியை பாண்டியனின் பதிமூன்றாம் ஜென்மமான மாறன் எடுத்தானா? அல்லது சோழர்களின் இன்றைய வாரிசான அநபாயன் அதை முறியடித்தனா? இதை தான் புதினமாக புனைந்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வனை யாரால் மறக்க முடியும்? படிக்கும் போது இந்த இடங்களை எல்லாம் பார்த்திட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத் தான் இல்லை. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய உணர்வுகளுடன் இயைந்த பயணத்தையும் அதன் மூலமும் என்னுள் கிளர்ந்த உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
காலி, கள்ளன், துரோகி என்று கெட்ட குணங்களை மீறி சிப்பாய், படைத்தலைவன், மதுரை அரசன் என்று தன் வீரத்தால் மாவீரனாக விளங்கியதை நான் நாவலாக்கியுள்ளேன். இந்நாவலைப் படிப்பதற்கு வாசகர்க்குச் சுவை குன்றாமல் படைக்க முயற்சித்துள்ளேன். அதே சமயம் வரலாறும் நடந்த ஆண்டுகளும் இதில் ஆதாரமானவைதான் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாலும் சில செவிவழிச் செய்திகளும் பாரம்பரியம் மிக்க தகவல்களும் படிப்பதற்கு இதில் நாவலின் சுவை கூட்ட சேர்க்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், பன்மொழிப் புலமை கொண்டவர்: ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர்: நிர்வாகத் திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிக் களப்பலியானவர் இந்தியாவிலேயே முதல் மன்னர் வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்தான். அது போன்று ஆயுதம் ஏந்திப் போராடிக் களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக்காட்டியவர் இந்தியாவிலேயே முதல் பெண்மணி வேலு நாச்சியார்தான்! என்ன காரணத்தினாலோ, இன்றுவரை தமிழர்களால் போதுமான அளவுக்கு வேலு நாச்சியார் கண்டு கொள்ளப்படவில்லை. இது தமிழர்களின் வரலாற்று அறிவில் ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாகும். வேலு நாச்சியார் பற்றிய எனது தேடலின் போதுதான் அந்த வீரத் தாயின் ஆளுமை எனக்குப் புரிந்தது. வேலு நாச்சியாரைப் பற்றி ஆங்காங்கே துண்டுதுண்டான செய்திகள் இருக்கின்றதே தவிர, அவரைப் பற்றி ஒரு முழுமையான நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியதாகும். வெளிவந்த ஒரு சில நூல்களும், எழுதியவர்களின் உள்மன உணர்வுகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறதே தவிர, வேலு நாச்சியாருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. இந்தப் பின்னணிதான் என்னை வேலு நாச்சியார் பக்கம் கவனம் திரும்பச் செய்தது!.
என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன். வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே. உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள். என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி, வணக்கம்.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.