NORA logo
About Digital Archive of Singapore Tamil Theatre (DASTT)

சிங்கப்பூரின் தமிழ் மேடை நாடகங்கள் பற்றிய ஒரு களஞ்சியத்தை உருவாக்கத் தேசிய நூலக வாரியமும் தமிழ் மின்மரபுடைமைக் குழுவும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிதான் ‘சிங்கப்பூர்த் தமிழ் நாடக மின்தொகுப்பு’ என்னும் இத்திட்டம். தமிழ் நாடகத் துறையினரின் வலுவான ஆதரவுடன், நாடகப் பிரதிகள், ஒலிப்பதிவுகள், விளம்பர ஏடுகள் போன்ற மேடை நாடகம் சார்ந்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, விளக்கம் எழுதப்பட்டு, மின்வடிவில் உருவாகியுள்ளது இத்தொகுப்பு.

சிங்கப்பூரில் தமிழ் மொழி, பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் பரப்பவும் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து மின்மரபுடைமைக் குழு மேற்கொண்டுவரும் பல மின்னாக்க முயற்சிகளில் இந்த ஆவணத் தொகுப்பும் அடங்கும். நாடகக் கலைஞர்களுக்கு பயிலரங்கு வளமாகவும், ஆய்வாளர்களுக்கு மேற்கோள் மூலமாகவும், ஆசிரியர்களுக்கு வகுப்பறைக் கல்விச் சாதனமாகவும், நீண்டகால வரலாற்றுப் பதிவாகவும், தேசிய மேடை நாடக வளங்களுக்கு ஒரு பங்களிப்பாகவும் இந்த ஆவணத் தொகுப்பு திகழும்.

தேசிய நூலக வாரியம் வரும் ஆண்டுகளில் இந்த வளத்தைத் தொடர்ந்து பெருக்க விரும்புவதால் மேலும் பல ஆவணங்களை வரவேற்கிறது. பின்வரும் வழிகளில் ஆவணங்களை வாரியத்துக்கு நன்கொடையாக வழங்கலாம்:

  • enquiry@nlb.gov.sg அல்லது ref@nlb.gov.sg என்னும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
  • 6332 3255 என்ற எண்ணில் வாரியத்தை அழைக்கலாம்

The Digital Archive of Singapore Tamil Theatre (DASTT) Project is a collaboration between the National Library Board (NLB) and the Tamil Digital Heritage Group (TDHG) to create a repository of materials on Tamil theatre in Singapore. With strong support from the Tamil theatre community, theatre-related materials such as scripts, recordings, posters, and other collaterals have been collected, curated, annotated and digitised

DASTT is one of several digital initiatives undertaken by the TDHG in collaboration with NLB to preserve and promote Tamil language and culture in Singapore. DASTT will serve as an educational resource for practitioners, a reference source for scholars, a teaching tool in the classroom, an historical account for posterity and a contribution to national theatre resources

NLB looks forward to expanding this resource over time and any contribution of materials to this collection would be most welcome. Donation offers may be made to NLB through the following ways: