NORA logo
About Digital Archive of Singapore Tamil Music (DASTM)

சிங்கப்பூரின் தமிழ் இசை பற்றிய ஒரு களஞ்சியத்தை உருவாக்கத் தேசிய நூலக வாரியமும் தமிழ் மின்மரபுடைமைக் குழுவும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிதான் ‘சிங்கப்பூர்த் தமிழ் இசை மின்தொகுப்பு’ எனும் திட்டம். இசைப் பள்ளிகள், சிறு குழுக்கள், தனி நபர்கள் என்று பல்வாறாகச் செயல்படும் இசைக்கலைஞர்களின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இத்தொகுப்பு அரங்கேறுகிறது. இசைக் குறியீட்டுப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவுகள், விளம்பர ஏடுகள், கலைஞர்களின் படங்கள் போன்ற இசை சார்ந்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, விளக்கம் எழுதப்பட்டு, மின்வடிவில் உருவாகியுள்ளது இத்தொகுப்பு.

சிங்கப்பூரில் தமிழ் மொழி, பண்பாடு போன்றவற்றைப் பாதுகாக்கவும் பரப்பவும் தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து மின்மரபுடைமைக் குழு மேற்கொண்டுவரும் பல மின்னாக்க முயற்சிகளில் இந்த ஆவணத் தொகுப்பும் அடங்கும். இசைக் கலைஞர்களுக்குப் பயிலரங்கு வளமாகவும், ஆய்வாளர்களுக்கு மேற்கோள் மூலமாகவும், ஆசிரியர்களுக்கு வகுப்பறைக் கல்விச் சாதனமாகவும், நீண்டகால வரலாற்றுப் பதிவாகவும், தேசிய இசை வளங்களுக்கு ஒரு பங்களிப்பாகவும் இந்த ஆவணத் தொகுப்பு திகழும்.

தேசிய நூலக வாரியம் வரும் ஆண்டுகளில் இந்த வளத்தைத் தொடர்ந்து பெருக்க விரும்புவதால் மேலும் பல ஆவணங்களை வரவேற்கிறது. பின்வரும் வழிகளில் ஆவணங்களை வாரியத்துக்கு நன்கொடையாக வழங்கலாம்:

  • enquiry@nlb.gov.sg அல்லது ref@nlb.gov.sg என்னும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்
  • 6332 3255 என்ற எண்ணில் வாரியத்தை அழைக்கலாம்

The Digital Archive of Singapore Tamil Music (DASTM) Project is a collaboration between the National Library Board (NLB) and the Tamil Digital Heritage Group (TDHG) to create a repository of materials on Tamil Music in Singapore. This repository has been made possible by the strong support from and participation by many contributors ranging from music schools, small ensembles to individual musicians. Various music-related materials such as audio and video recordings, scores, programme booklets and photographs have been collected. They have also been curated, annotated and digitised to provide a wealth of online information to anyone interested in this collection. This collection contains a small collection of materials in non-Tamil Indian languages.

DASTM is one of several digital initiatives undertaken by the TDHG in collaboration with NLB to preserve and promote Tamil language and culture in Singapore. DASTM will serve as an educational resource for practitioners, a reference source for scholars, a teaching tool in the classroom, a historical account for posterity and a contribution to national arts resources.

NLB looks forward to expanding this resource over time and contribution of materials would be most welcome. Donation offers may be made to NLB through the following ways: